அஹ்து பைத்தினரை மரியாதை செய்தல்
#அஹ்லு_பைத்தினரை
#மரியாதை_செய்தல்.....
ஷஅபிய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தபோது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அந்த ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து நடந்து வந்தார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “(நீங்களெல்லாம் இதை பிடிக்கலாமா?) விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( هَكَذَا أُمِرْنَا أَنْ نَفْعَلَ بِعُلَمَائِنَا وَكُبَرَائِنَا ) “எங்களில் மார்க்கம் படித்த ஆலிம்களிடமும் பெரியவர்களிடமும் இவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் ஏவப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். பின்பு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கி அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ( أَرِنِي يَدَكَ ) “உங்கள் கையைக் கொடுங்கள்” என்று கூறி, அவர்களின் கையில் முத்தமிட்டார்கள். பின்பு ( هَكَذَا أُمِرْنَا أَنْ نَفْعَلَ بِأَهْلِ بَيْتِ نَبِيِّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ) “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரோடு இவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் ஏவப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். நூல்:- அல்இஸாபா, தப்ரானீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்- 596, அத்தபகாத்துல் குப்ரா, அர்ருக்ஸத்தி ஃபீ தக்பீலில் யதி இமாம் இப்னு அல்முக்ரிஇ ஹி-381
( الرُّخْصَةِ فِي تَقْبِيلِ الْيَدِ لِابْنِ الْمُقْرِئِ )
தகவல்;
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி