பசித்த நாடோடி புசித்த கதை
........#பசித்த_நாடோடி......
............#புசித்த_கதை..........
மக்கா, சிரியா மத்தியில் பயணம் செய்து கொண்டிருந்த அரபிய வியாபாரி அதிக லாபம் பெறாது வீடு திரும்பிக் கொண்டிருந்தார்....
வீட்டிற்கு வர ஒருநாள் ஆகக் கூடிய தொலைவிலிருந்த போது தனது பையைத் திறந்து அதில் சேமித்து வைத்திருந்த உணவைத் தின்னத் தொடங்கினார்..
அப்போது நாடோடி அரபி ஒருவன் பசியுடன் அவர் முன் வந்து ஸலாம்
கூறி நின்றான்..
அவனிடம் "யார்" எனத் தகவல் கேட்டார் அரபி.
நான் தங்கள் வீட்டு வேலைக்காரன். தங்களை காணவே இவ்வளவு தூரம் வந்தேன் "என்றான் அவன்..
அரபி: எனது குடும்பத்திலிருந்து ஏதேனும் செய்தி யிருக்கிறதா..?
நாடோடி: ஆமாம்
அரபி : எனது மகன் அஹமது எப்படி இருக்கிறான்..?
நாடோடி: இறைவன் அருளால் நலமே..
அரபி : அவனது தாய்..?
நாடோடி: அஹமதை விட நன்றாக இருக்கிறார்..
அரபி : எனது வீடு..?
நாடோடி: எல்லோரும் பொறாமைப் படும்படி நன்றாகவே இருக்கிறது..
அரபி: எனது ஒட்டகம்..
நாடோடி: மிகக் கொழுத்து போய் இருக்கிறது..
அரபி : வீட்டுக் காவல் நாய்...
நாடோடி: இரவு பகலாக நன்றாகக் காத்து வருகிறது...
எல்லோரும் நலமென அறிந்ததும் உணவைத் தொடர்ந்தார்....
அரபி வந்தவருக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.
மீதி உணவைப் பையில் கட்டிக் கொண்டார்...
நாடோடிக்கு இச்செயல் வெறுப்பைத் தந்தது.. அப்போது அவ்வழியே ஒரு ஆடு வந்தது.. அதைக் கண்டதும் நாடோடி பெருமூச்சு விட்டான்.
அரபி ஏன் எனக் கேட்டான்..
நாடோடி: உங்கள் நாய் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இது தப்பி வந்திருக்காது..
அரபி: அப்படியா!! நாய் எப்படி செத்தது...?
நாடோடி: ஒட்டக மாமிசத்தை அதிகமாகத் தின்றதால்...
அரபி: ஒட்டகத்தை கொன்றது யார்..?
நாடோடி:உங்களின் மனைவியின் இறுதி சடங்கிற்குத் தான் ஒட்டகத்தை அறுத்தார்கள்..
அரபி: மனைவி இறந்து விட்டாளா..?
நாடோடி:மகன் அஹமது இறந்ததும் அவன் தாயார் கல்லில் மோதி தலையை உடைத்துக் கொண்டார்...
அரபி: அஹமது எப்படி மரணமடைந்தான்..?
நாடோடி: உங்கள் வீடு இடிந்து அவன் தலையில் விழுந்ததால்...
இந்த துயரச் செய்தியைக் கேட்ட அரபி தனது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கதறியழுது கொண்டே வீட்டுக்கு விரைந்தான்...
உணவிருந்த பையையும் எடுத்து வீசினான்...
உடனே நாடோடி அப்பையை எடுத்து அதிலிருந்து உணவையும் உண்டு மகிழ்ந்தான்....
தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி