மீலாத் விழா நாயகமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்
#மீலாத்_நபி
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது இஸ்லாமிய ஆதாரங்களின் அடிப்படையிலானது என்பதை நாம் தெளிவுபடுத்தினோமல்லவா...
ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தனது பிறப்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்பதே உண்மை.
#இமாம்_பைஹகி (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து மேற்கோள் காட்டப்பட்ட ஹதீஸில் இவ்வாறு பார்க்க முடியும்..
"நுபுவத்திற்குப் பிறகு, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனக்காக அகீகா கொடுத்தார்கள்..
عن النس رضي الله عنه, ان النبي صلى الله عليه وسلم عق عن نصف بعد النبوة.
(السنن البيهقي الكوبرة 19273)
இந்த ஹதீஸ் மீலாத் விழா தினம் கொண்டாடப்படுவதற்கான தெளிவான ஆவணம் என்று இமாம் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் விளக்குகிறார்கள்.
"அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ஏழாவது நாளில் அவரது பாட்டனார் #அப்துல்_முத்தலிப் அவர்கள் நபிக்காக #அகீகா கொடுத்தார்கள்.
அகீகா திரும்ப திரும்ப செய்யப்படும் அமல் அல்ல.
எனவே மீண்டும் அகீகா கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
பிறகு ஏன் மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகீகா கொடுத்தார்கள்..?
இமாம் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் விளக்குகிறார்:
வல்லோன் அல்லாஹ் முழு உலகிற்கும் கருணையாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நியமித்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் அடையாளமாக நுபுவத்திற்கு பிறகு மீண்டும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகீகா கொடுத்தார்கள்..
இவ்வாறே நாமும் நாயகத்தின் பிறப்பில் மகிழ்வதும், எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து மவ்லித் ஓதுவதும், அன்னதானம் வழங்குவதும் வணக்கத்தின் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் நன்மையான விஷயமாகும்."
#قال_الإمام_السيوطي: قلت: وقد ظهر لي تخريجه على أصل آخر، وهو ما أخرجه البيهقي عن أنس «أن النبي ﷺ عق عن نفسه بعد النبوة» مع أنه قد ورد أن جده عبد المطلب عق عنه في سابع ولادته، والعقيقة لا تعاد مرة ثانية، فيحمل ذلك على أن الذي فعله النبي ﷺ إظهار للشكر على إيجاد الله إياه رحمة للعالمين وتشريع لأمته كما كان يصلي على نفسه لذلك، فيستحب لنا أيضا إظهار الشكر بمولده بالاجتماع وإطعام الطعام ونحو ذلك من وجوه القربات وإظهار المسرات.
(الحاوي للفتاوي ٢٣٠/١)
இமாம் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் இந்த விளக்கம் பல அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் கிதாபுகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
◉#இமாம்_ஷாமி (ரஹ்மத்துல்லாஹி).
سبل الهدى والرشاد في سيرة خير العباد ١/٣٦٧
◉ #இமாம்_சர்கானி (ரஹ்மத்துல்லாஹி)
شرح الزرقاني على المواحبة الدنية بالمنح المحمدية ١/٢٦٣
◉#இமாம்_இப்னு_காசிம்_அப்பாதி (ரஹ்மத்துல்லாஹி).
تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٧/٤٢٤
◉ #இமாம்_ஷர்வானி (ரஹ்மத்துல்லாஹி).
تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٧/٤٢٣
நவீன வாதிகள் இந்த ஹதீஸை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர்.
அது தொடர்பான விளக்கத்தை அடுத்த கட்டுரையில் படிக்கலாம்
✍🏻ஸெய்யித் #லுத்துஃபி_பாஹஸன்.
(மஃதின் ஸாதாத் அகாதமி)...
தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.