தற்கால துருக்கியின் பேரொளி
.........#ஷேக்_மஹ்மூத்_எஃபென்தி:.......
#மறைந்தது_தற்கால_துருக்கியின்
#_ஆன்மீக_ஒளி
-------------------------------------------
தமிழில்:
✍️M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி..
ஆன்மீகத்தில் ஊன்றிய சமூக மேம்பாட்டிற்கு வாழும் சாட்சியாக இருந்த துருக்கியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சுன்னத் வல் ஜமாஅத் (ஹனஃபி) அறிஞர் ஷேக் மஹ்மூத் எஃபென்தி
(23 துல் கஃதா 1443/23 ஜூன் 2022 புதன்கிழமை இரவு 1:50 மணியளவில்) துருக்கியின் இஸ்தான்புல்லில் காலமானார்.
நக்ஷபந்திய்யா சூஃபி பாதையின் (தரீக்கத்) இக்காலத்திலுள்ள முதன்மை குருவாக விளங்கிய அவர்களுக்கு துருக்கியில் மட்டும் மில்லியன் கணக்கான சீடர்கள் உண்டு..
பல்வேறு நாடுகளிலுள்ள ஏராளமானோர் அவருடைய ஆன்மீக
சிஷ்யத்துவத்தை பெற்றுள்ளனர்.
2018,2019,2020,2021 ஆகிய ஆண்டுகளில் உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லீம் பிரமுகர்களின் பட்டியலில் (தரவரிசை: 34). இடம் பெற்றிருந்தார்....
துருக்கியின் வடக்கு பகுதியில் நிலைக்கொள்ளும் பல அவுலியாக்கள் மற்றும் அறிஞர்களின் பிறப்பிடமான துவாரப்சூனில் 1929 இல் பிறந்தார் (இப்போது வயது 92).
அவர் ஆன்மீக மற்றும் அறிவுசார் விஷயங்களில் உயர்வு பெற்ற குடும்பத்தில் இருந்து வந்தவர்.
ஷேக் முஸ்தபா அஃபான்தியின் மகனான ஷேக் அலி அஃபாண்டி என்பவர் இவரது தந்தையும், பாத்திமா ஹனீம் அஃபான்தி தாயாவார்.
தனது ஆறாவது வயதில் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் பரிசுத்த குர்ஆனை மனப்பாடமாக்கினார்...
சிறுவயதில் அவரிடம் காணப்பட்ட அழகிய சுபாவம், பக்குவம், சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது...
உள்ளூர்வாசிகள் பலர் தங்கள் குழந்தைகள் அவரைப் போல இருக்க வேண்டும் என்று விரும்பி தங்கள் குழந்தைகளுக்கு "மஹ்மூத்" என்று பெயரிட்டனர்...
வணக்க வழிப்பாடுகளில் மிகுந்த ஆர்வமும், கவனமும் செலுத்திய அவர்கள் அந்த சின்ன வயதிலும் கூட சுன்னத் தொழுகையை பாழாக்காமல் முறையாக கடைப்பிடித்து வந்தார்கள்..
துவக்க கல்வி பயில துருக்கியின் முக்கிய நகரம் (kayseri)
கைசேரிக்கு வந்த அவர், அக்காலத்தின் முக்கிய அறிஞரான ஷேக் அஹ்மத் ஹோஜா (உஸ்தாத்) என்பவரிடம் அரபு நஹ்வ் (இலக்கணம்), ஸர்ஃப் மற்றும் பாரசீக மொழிகளைக் கற்றார்.
kayseri யில் ஒரு வருடம் கழித்த அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.
அந்த காலத்தில் (கிராத்) குர்ஆன் ஓதுவதில் மிகவும் பிரபலமான கைரா அறிஞர், முஹம்மது ருஷ்து அஷிகுதலு ஹோஜா எஃபென்தியிடம் என்ற ஆசிரியரிடமிருந்து குர்ஆன் ஓதும் அறிவைப் பெற்றார்.
பிறகு சுலைமானிய்யா அரபிக் கல்லூரியில் சீனியர் பேராசிரியராக இருந்த சலகலி ஹாஜி துர்ஸுன் எஃபென்தி ஃபேஸி என்பவரிடம் தஃப்ஸீர்,ஹதீஸ், உஸூலுல் ஃபிக்ஹ், இல்முல் கலாம் (அக்கீதா) பலாகா போன்ற அறிவுக் கலைகளில் தேர்ச்சி பெற்று அவர் தன்னுடைய 16_ வயதில் உயர் கல்வியில் டிப்ளமோ பெற்றார்...
மார்க்க பிரச்சார பணிகளில் மும்முரமாக களமாடியவர்...
...................................................
தனது படிப்பை முடித்த அதே ஆண்டில் ஜஹ்ரா ஹனீமை (மரணம் மே 25, 1993) மணந்தார்.
(இந்தத் தம்பதிக்கு அஹ்மத், அப்துல்லா மற்றும் பாத்திமா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்).
பின்னர் அவர் அறிவைப் பரப்புதல் மற்றும் பிரச்சாரம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட அவர்
நீண்ட காலம் இமாமாக செயலாற்றினார்கள்..
பின்னர், 1952 இல், இராணுவ சேவைக்காக பந்திர்மா என்ற
இடத்திற்கு சென்றார்.
ரானுவ சேவை செய்யும் இந்த கால அளவில்தான் அவர் தனது முர்ஷிதான (ஆன்மீக வழிகாட்டி) ஷெய்க் அலி ஹைதர் அஹிஸ்கவி அந்நக்ஷபந்தி அல் காலிதி என்ற குருவை கண்டு பிடித்து நேரில் சந்திக்கிறார்..
மத விவகாரங்களில் நல்ல நிபுணத்துவம் பெற்ற அறிஞராக விளங்கியவர் ஷெய்க் அலி ஹைதர்..
கடைசி நான்கு ஒட்டோமான் சுல்தான்களின் ஹோஜா, (உஸ்தாத் / ஆலோசகர்_) நான்கு கர்ம சாஸ்திரங்களைக் குறித்து நல்ல அறிவுப் பெற்றிருந்த அவர் நான்கு மத்ஹபுகளிலும் ஃபத்வாக்களை வழங்கக்கூடிய முஃப்தியாக விளங்கினார்..
அவர் தனது ஆன்மீக குருவைக் கண்டுபிடித்ததற்குப் பின்னால் பல கதைகள் உள்ளன. அதையெல்லாம் எழுதினால் கட்டுரை விரிவாக சென்று விடும்...
சிறுவயதிலேயே ஆன்மீக குருக்களைத் தேடும் விஷயத்தில் விருப்பம் தெரிவித்ததை அவர் விவரித்துள்ளார்..
1954 இல் தனது இராணுவ சேவையை முடித்த பிறகு, இஸ்தான்புல்லில் உள்ள ஃபாத்திஹிலே இஸ்மாயிலாக் கிராண்ட் மசூதியில் அதிகாரப்பூர்வ இமாமாக நியமிக்கப்பட்டார்.
1960_ ஆகஸ்ட் 1_ல் அக்காலம் வரைக்கும் தன்னை வழிநடத்திய ஆன்மீக குரு ஷெய்க் அலி ஹைதர் இஃபன்தி இவ்வுலகை விட்டும் பிரிந்தார்...
பிறகு, குருவின் பின் தலைமுறையாக ஆன்மீகப்
பொறுப்பை ஏற்றார்.
அன்றிலிருந்து அவரது வாழ்வில் பெரும் பொறுப்பு வாய்ந்த ஒரு புதிய சகாப்தம் நுழைந்தது.
அக்காலம் வரைக்கும் தனது குருவின் கீழில் சிஷ்யத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஏராளமான சீடர்களுக்கு ஆன்மீகவும், கல்வி ஞானமும் வழங்குவதில் அதிக நேரங்களை செலவழித்தார்..
அவர் இஸ்லாமிய சமூகங்களில் இஸ்லாமிய அறிவைப் பரப்புவதில் துருக்கியில் மும்முரமாக களமாடினார்..
துருக்கி மற்றும் பிற நாடுகளில் இருந்து பல சிறந்த அறிஞர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் ஆன்மீக சீடராக அவரை நாடினர்.
சமீபத்தில் மறைந்த ஷேக் முகமது அலி அஸ்ஸாபூனி உட்பட பல சிறந்த அறிஞர்கள் அவரது ஆன்மீக சீடர்களாக உள்ளனர்.
1962- முதன் முதலாக ஹஜ் கடமையை நிறைவேற்றினார்..
பின்னர் பல காலம் ஹஜ் நிறைவேற்ற மக்காவுக்கு சென்றுள்ளார்.
1980_ செப்டம்பர் 12_ ல் துருக்கியில் நடந்த அரசியல் கிளர்ச்சிக்கு முன் வலது- இடது குழுவினருக்கு மத்தியில் நடந்த நிரந்தரமான சண்டை சச்சரவுகளுக்கு மத்தியில் தன்னிடம் வந்த மக்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
"நமக்கு ஜிஹாத் (புனிதப் போர்) செய்யலாம்", "நன்மையை ஏவி தீய செயல்களைத் தடுப்பதன் மூலமும் மக்களை உயிர்ப்பிக்க வேண்டியது நமது கடமையாகும்.
மக்களைக் கொல்வது நமது கடமையல்ல." மக்களை அமைதிப்படுத்த முயன்ற அவர் நிதானம் மற்றும் அமைதியின் வக்கீலாக இருந்தார்..
அவரது மனைவி ஸஹ்ரா ஹனீம் மே 25, 1993 இல் இறந்தார். பின்னர் அவர் ஷேக் மன்சூர் பைய்டெமிர் எஃபெண்தியின் மகள் மெரீஃப் ஹனீமை மணந்தார்.
தனது 65_ வயதில் இமாம் பணியிலிருந்து விடைப் பெற்றார்.
ஏராளமான நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
அவர் பயணம் செய்த நாடுகளிலுள்ள முக்கியமான தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதை முக்கியமான வழக்கமாக கொண்டிருந்தார்...
அவர் 2005 இல் இந்தியா வந்தார்.
துருக்கியின் அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்ததோடு மட்டுமல்லாமல் இஸ்லாமின் அழகிய தத்துவங்களையும், சிறப்பான தகவல்களையும் மக்களுக்கு எத்தி வைத்து அவர்களை இஸ்லாமின் பால் அழைத்துக் கொண்டார்...
இஸ்லாத்தின் அழகிய செய்தியைப் பரப்பவும், மக்களை சத்தியத்திற்கு அழைக்கவும் தனது சீடர்கள் மற்றும் பிறருடன் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு பயணம் செய்தார்..
தன்னால் முடிந்தபோதெல்லாம்,
அவர் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்வதற்காக மக்காவிற்கும் மதீனாவிற்கும் சென்றார்..
ஆண்டுக்கு ஒரு முறை உம்ரா நிர்வகிக்கவும் செய்தார்..
இந்த வீடியோக்கள் YouTube இல் கிடைக்கிறது.
சுன்னாவைப்பற்றிய
(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயல்) அவரது சிறந்த புரிதல், ஷரீஅத் பற்றிய ஆழ்ந்த அறிவு, அவரது கவர்ச்சியான மற்றும் முன்மாதிரியான நடத்தை, மற்றும் அவரது கம்பீரமான குணம் ஆகியவை அவருடன் பழகியவர்களிடமும், அவரது பயணங்களின் போதும் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதைச் சுட்டிக்காட்டும் ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன்.
ஷெய்க் அவர்கள் ஒருமுறை துருக்கியின் எர்சுரம் நகருக்கு ஒரு சொற்பொழிவுகாக்க வந்தார். நிகழ்ச்சி முடிந்த உடன் ஒரு வழக்கறிஞர் ஷெய்க் அவர்களின் கரத்தை முத்தமிட முற்பட்ட போது ஷெய்க் அவரிடம் கூறினார்கள்:
"நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது என்னவென்றால், நீங்கள் திரு நபியின் சுன்னத் தான தாடியை வளர்க்க முயற்சிக்க வேண்டும்."
அவர் பதிலளித்தார்: "எனக்கு தாடி வளர்த்த பிடிக்கும்.
ஆனால் சோங்குடக்கில் வசிக்கும் என் தந்தை அதற்கு அனுமதி தர மறுக்கிறார்.
" இதைக் கேட்ட ஷெய்க் அந்த வழக்கறிஞரின் தந்தையிடம் சென்று அவரை நேரில் சந்தித்து, "உங்கள் மகன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
திரு சுன்னத் தான தாடியை வளர்க்க விரும்புகிறார், ஆனால் உங்கள் சம்மதமின்றி அவ்வாறு செய்ய முயற்சிக்க மாட்டார்" என்று கூறுகிறார்.
உடனே அவரது தந்தை சொன்னார்: "இதைச் சொல்லத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கீங்களா!!
நான் சம்மதம் சொல்லிட்டேன்".
சுற்றியிருந்தவர்கள் வியப்புடன் கேட்டார்கள். ஏர்சுரத்தில் இருந்து இங்கு பயணம் செய்வதற்கு சுமார் 12 மணி நேரம் ஆகுமே..?
இந்த விஷயத்தைச் சொல்ல நீங்கள் இவ்வளவு தூரம் போக வேண்டுமா??!!.
இதைக் கேட்ட ஷேக் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் கூறினார்கள்:
"அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சுன்னா எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை உயிர்ப்பிப்பதற்காக உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பயணிக்க நான் தயாராக இருக்கிறேன்." திரு சுன்னத்தை பிரச்சாரம் செய்யப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது அவருடைய மார்க்க பிரச்சார சிறப்பின் தனிப் பார்வை.
ஷேக் மஹ்மூத் அஃபான்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்தர்ப்பம்..
சுற்றிலும் நிறைய பேர் இருக்கின்றனர்..
இதை கவனித்து கொண்டு அங்கு ஒரு நாத்திகர் வருகிறார்..
அவர் தனது நோய்வாய்ப்பட்ட மகளை ஐசியூவில் பராமரித்து வருகின்ற வேளை.
அவர் ஷேக் மஹ்மூத் அஃபான்தியால் ஈர்க்கப்பட்டு
மகளுக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறார்..
உடனே தன் இரு கைகளையும் உயர்த்தி ஷேக் மஹ்மூத் அஃபான்தி இறைவனிடம் துஆ செய்கிறார்கள்..
வல்லோன் அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான்.
மகள் குணமடைய ஆரம்பித்தாள்.
மறுநாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மகள் வெளியேறினாள்..
பின்னர் இருவரும் ஷேக் மஹ்மூத் அஃபான்தியை அணுகி இஸ்லாத்தை தழுவினர்.
இன்று மறைந்த துருக்கிய அறிஞர் ஷேக் மஹ்மூத் அஃபான்தி அப்படிப்பட்ட உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்தவர்.
அல்லாஹ் மேன்மேலும் அவரது தரஜாவை அதிகப்படுத்துவானாக..
இஸ்லாமிய உலகின் முன்னணியில் இருந்து அனைத்து தரப்பு மக்களின் மரியாதையையும் அன்பையும் பெற்றவர்.
ஏராளமான இஸ்லாமிய சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு அறிவைப் பெறுவதற்கும் அதுப்படி நடப்பதற்கும் மக்களை உற்சாகமூட்டினார்.
வருடங்களாக அவர் நடத்தி வரும் சொற்பொழிவுகளை அவரது சீடர்கள் கோர்வை செய்து ஆறு பாகம் கொண்ட நூலாக வெளியிட்டார்கள்..
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாரத்தின் எல்லா நாளும் சொற்பொழிவு செய்து வந்தார்.
கடந்த பத்து பதினைந்து வருடங்களாக தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கான மார்க்க வகுப்புகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், விரிவுரைகளின் மொத்த தொகுப்பு 100 தொகுதிகளை எட்டும் என்பது தெளிவாகிறது.
குர்ஆன் மஜீத் என்று பெயரிட்ட
துருக்கி மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள இவரது நூல்களில் இது மிகச்சிறந்த நூலாகும்..
இவரின் மற்றொரு புத்தகம் ரூஹுல் ஃபுர்கான் என்ற பெயரிலுள்ள குர்ஆன் விளக்கவுரையாகும்.
இதன் முழுப்பாகமும் வெளியிடப்படவில்லை
இவரது தலைமையில் மத, சமூக, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் நிறுவப்பட்டுள்ளன.
குறிப்பாக, The Mujahideen mahmood Mahmoud Effendi Foundation, The Marifet Association, The Federation of Marifet Associations மற்றும் Ahlus Sunnawaljamaa Confederation. இவைகளில் பெரும்பாலனது கல்வி, கலாச்சாரம், அறிவியல் ஆராய்ச்சி, சுகாதாரம் மற்றும் தொண்டு ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்டவைகளாகும்
அவரது தலைமையின் கீழ், MARİFET எனும் பெயரில் ஒரு மாதாந்திர இதழ் வெளியிடப்படுகிறது..
அவரைப் பற்றிய கூடுதல் தகவல்களும் ஆய்வுகளும் துருக்கி மொழியில் கிடைக்கின்றன.
அவரது வாழ்க்கை குறித்த ஆவணப்படம் யூடியூப்பில் உள்ளது.
அவர்களின் சேவைகளை இறைவன் ஏற்றுக் கொள்வானாக ஆமீன். ----------------------------------------------
எஃபென்தி_: அரபு மொழியில் (أفندي),
மாஸ்டர் என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்ட ஒரு துருக்கிய வார்த்தை.
அரபு மொழியில் உயர்ந்த ஆளுமைகளை 'ஷேக்' என்று குறிப்பிடப்படுவது போல துருக்கியர்களால் பயன்படுத்தப்படும் சொல் இது....
_குறிப்பு_:_
(1) https://themuslim500.com/profiles/mahmud-effendi/
(2) https://hayatalulama.wordpress.com/2012/12/06/shaykh-mahmud-effendi/