Sirajudheen Ahsani
எழுத்தாளர்

..............#யார்_பணக்காரன்....???

ஒரு நாள் தாயும் குழந்தையும் பயணம் செய்யும் வேளையில் குழந்தை பசியால் அழுது கொண்டிருக்கிறது...
அருகில் கண்ட பெரிய ஹோட்டலுக்குச் சென்றாள் தாய்...

குழந்தைக்கு கொடுக்க ஒரு கோப்பை பால் கேட்டாள் தாய்....

ஒரு கப் பால் 100 ரூபாய் என்று ஹோட்டல் உரிமையாளர் கூறினார்.

சரி பரவாயில்லை பால் கொடுங்கள் என்று குழந்தையின் தாய் சொன்னாள்..

பால் கொடுத்து குழந்தையின் பசியை போக்கினாள்

இன்னொரு நாள் அவள் குழந்தையுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது....

ஒரு சிறிய டீக்கடையின் முன் அவள் வாகனத்தை நிறுத்தினாள்..

டீக்கடைக்காரரிடம் குழந்தைக்கு கொடுப்பதற்கு ஒரு கோப்பை பால் கேட்டாள்..

மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் டீக்கடை க்காரர் பால் வழங்கினார்..

ஒரு கப் பாலுக்கு எவ்வளவு பணம் வேண்டுமென அக்கடைக்காரரிடம் அத்தாய் கேட்டாள்.

குழந்தை குடித்த பாலுக்கு எனக்கு பணம் வேண்டாம் என்றார் டீக்கடை உரிமையாளர்..

குழந்தைகள் குடிக்கும் பாலுக்கு நான் பணம் வாங்குவதில்லை என்றார்..

மீண்டும் சொன்னார்..

... உங்களின் தொடர் பயணத்திற்கு குழந்தைக்கு பால் தேவை என்றால், நீங்கள் அதையும் எடுத்து செல்லலாம்...

அந்த பெண்மணிக்குள் ஒரு கேள்வி எழுந்தது...

யார் பணக்காரன்.????

எவ்வளவு பணம் சம்பாதித்தால் ஒருவனின் பேராசையும் பூர்த்தியாகும்.

யாருக்காக இவ்வளவு பணத்தை சேமித்து குவித்துக் கொண்டிருக்கிறார்கள்..

இதையெல்லாம் எங்கே கொண்டு செல்வார்கள்..

தேவைக்கு அதிகப்படியான பணத்திற்கு என்ன மதிப்பு
...??????

வெறும் காகிதத் துண்டுகள்.

இவ்வுலகில் பிறந்த நேரம் எவரும் இங்கே ஒன்றும் கொண்டு வரவில்லை..

உலகத்தையே கைப்பற்றினாலும் ஒருவன் மரணித்தால் இங்கிருந்து எதையும் எடுத்துச் செல்ல முடியாது..

#கஃபன் துணிக்கு பைகள் இல்லை. !!!!!!!!
#கல்லறைக்குள் அலமாரிகள் இல்லை !!!
மறக்க வேண்டாம்..

*தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*