வெளிச்சம் வீசிய பணிவான மனிதர் ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்ஙள்

வெளிச்சம் வீசிய பணிவான மனிதர் ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்ஙள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#வெளிச்சம்_வீசிய

#பணிவான_மனிதர்_அஹ்தல்_தங்கள்.
__________________________________________

‌ #திறப்புரை

ஷைகுனா ஸெய்னுல் முஹக்கிகீன் ஸெய்யித் தாஹிருல் அஹ்தல்

(சுத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்)

தெற்கு கர்நாடகா மற்றும் காசர்கோடு மாவட்டத்தின் புவியியல் வரைபடத்தில் தனது ஆழமான ஞானத்தாலும், ஆன்மீகத்தில் தனது பணிவான தலைமைத்துவத்தாலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்த ஸெய்யித்

சமூக சேவைத் துறையிலும், அறிவுத் துறையிலும் அற்புதமான படைப்புகள் செய்த ஒரு ஞானி.

இஸ்லாத்தை சிதைக்க முயன்ற புதிய சிந்தனையாளர்களுக்கு ஆன்மீக அனுபவக் கொள்கை விளக்க உரையாடல்கள் மூலம் நேரான பாதையின் வெளிச்சம் வீசிய சிறந்த போராளி.

முன்மாதிரியாக வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு மார்க்க அறிஞருக்குத் தேவையான அனைத்து நற்குணங்களையும் அஹ்தல் தங்ஙள் அவர்களில் நாம் காணலாம்.

பல பாதைகளில் பரவியிருக்கும் அந்த அழகிய வாழ்க்கையை அடையாளப்படுத்துவதும், அதை வரும் தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும் மிகவும் அவசியம்.

அந்த வகையில் இது ஒரு
எளிமையான முயற்சி.
அல்லாஹ் இதை ஏற்றுக்கொள்வானாக ஆமீன்.

வெளியீட்டாளர்
___________________________

ஸைனுல் முஹக்கிக்கீன்

ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள்

1946-2006

#பிறப்பு :

27 மே 1946, ஹிஜ்ரி 1365 ஐ.ஆகிர் 25

#தந்தை ஸெய்யித் முஹம்மது கோயஞ்ஞிக் கோயா அஹ்தல் தங்கள்

#தாய் ஸெய்யிதா ஷெரீஃபா பாத்திமா பீவி

#கல்வி முஹிம்மாத்துல் இஸ்லாம் மதரஸா மம்பாடு, அதிகாரி பள்ளி மம்பாடு, கருவம்பாயில் ஜும்ஆ மஸ்ஜித்

#ஆசிரியர்கள்:

கண்ணியத் அஹ்மத் முஸ்லியார்.

ஈகே அபூபக்கர் முஸ்லியார்.

கோட்டுமலை அயூபக்கர் முஸ்லியார்.

சாலியப்புரம் அப்துல்லாஹ் முஸ்லியார்.

பஷீர் முஸ்லியார் மஞ்சேரி,

கல்வி :ஜாமிஆ நூரிய்யா பட்டிக்காடு, 1972ல் ஃபைஸி பட்டம்

#ஆசிரியப்பணி:

உறுமி முஹ்யித்தீன் ஜூம்ஆ மஸ்ஜித் (1972-80)

நெல்லிக்குந்து முஹ்யித்தீன் ஜும்ஆ மஸ்ஜித் (1980-90)

ஸுள்ளியா மொகர்ப்பண ஜும்ஆ மஸ்ஜித் (1991-92)

முஹிம்மாத் ஷரீஅத் கல்லூரி (1992-2006)

#பொறுப்புகள்:

(1989-2006), சமஸ்தா கேந்திர முஷாவரா உறுப்பினர் சமஸ்தா மாவட்டத் தலைவர்

SYS. புத்திகே பஞ்சாயத்து தலைவர் (1975-88)

SYS காசர்கோடு மாவட்ட தலைவர்.

SYS மாநில துணைத் தலைவர்,

SYS மாநில பொருளாளர்,

ஜாமிஆ ஸஅதிய்யா அரபிய்யா ஷரீஅத் கல்லூரி பொதுச் செயலாளர் (1998-2001)

ஜாமிஆ ஸஅதிய்யா அரபிய்யா ஷரீஅத் கல்லூரி துணைத் தலைவர்

(2001-2006)

முஹிம்மாத் தலைவர் (1992-2006)

கோழிக்கோடு தாத்தூர் ஜமாஅத் காஜி (1983-2006)

#நிறுவனர்:

முஹிம்மாத்துல் முஸ்லிமீன் கல்வி மையம்,

முஹிம்மாத் கல்வி அறக்கட்டளை,

ஜம்இய்யத்துஸ் ஸாதாத் வல்அஷ்ரஃப்,

மஸ்ஜிதுல் அலிய்யுல் அஹ்தல்,

#குடும்பம்:

#மனைவி : ஸெய்யிதா ஃபாத்திமா குஞ்ஞி பீவி

#குழந்தைகள்:

ஸெய்யிதா ஃபாத்திமத் ஸுஹ்ரா பத்தால்

ஸெய்யித் அஹ்மத் முனீர் அஹ்கல்

ஸெய்யிதா ஹன்னத் பீவி

ஸெய்யிதா மர்யம் பீவி ஸெய்யித் முஹம்மது ஹபீப் அஹ்தல் ஸெய்யிதா ஹஃப்ஸா பீவி ஸெய்யித் ஹமீது அன்வர் அஹ்தல் ஸெய்யிதா ஆயிஷத்து துஹ்ரா ஹஃபீபா ஸெய்யித் ஹுஸைனுல் அமீன் அஹ்தல் ஸெய்யிதா கதீஜத்து தாஹிறா ஸெய்யிதா அஸ்மா பீவி

#மருமக்கள்

ஸெய்யித் இப்ராஹிம் ஹாதி ஸகாஃபி

ஸெய்யித் அப்துல் அஜீஸ் அல்ஹைதருஸி

ஸெய்யித் ஸாலிஹ் நுராப் ஸகாஃபி

ஸெய்யித் ஹபீபுர் ரஹ்மான் அஹ்தல் ஸகாஃபி

ஸெய்யித் ஹாஃபிழ் ஃபக்ருதீன் ஹத்தாத் ஸகாஃபி

ஸெய்யித் ஜைனுல் ஆபிதீன் புகாரி ஸகாஃபி ஸெய்யிதா ஆயிஷா ஹர்ஷானா பீவி ஸெய்யிதா ஜீனத் பீவி ஸெய்யிதா கதீஜத் நுஸைபா பீவி

ஸெய்யித் ஸஅதுல்லாஹ் அஹ்தல் ஸகாஃபி

ஸெய்யிதா ரஹ்மத் பீபி

#மரணம் ஹிஜ்ரி 1426 ஷஃபான் 10 (2 செப்டம்பர் 2006)

#நல்லடக்கம்:
முஹிம்மாத் புத்திகே

___________________________

ஸைனுல் முஹக்கிகீன் ஸெய்யித் தாஹிர் அஹ்தல்
**************************

உத்வேகம் இந்த வாழ்க்கை

இயக்க வளர்ச்சி மூலம் சமூக முன்னேற்றத்தை சாத்தியமாக்கிய தியாக வாழ்க்கை ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்ஙள் அவர்களுடையது.

ஒரு பிரச்சாரகர் ஒரு நாட்டை எவ்வாறு நன்மையின் பாதையில் வழி நடத்த வேண்டும் என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டிய அரிய தலைவர்களில் ஒருவர்.

மலப்புரத்தின் மம்பாட்டில் பிறந்து, கோழிக்கோட்டின் கூளிமாடுவில் இளமைப் பருவத்தை கழித்து, மார்க்க அறிவின் உச்சத்தை அடைந்த அஹ்லு பைத்தைச் சேர்ந்த ஒரு அறிஞருக்கு ஊரில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருந்தன.

ஆனால் அவர்கள் தமது பிரச்சாரப் பணிகளுக்கு இன்றியமையாத மண்ணைக் குறித்து சிந்தித்தார்கள். இறுதியாக வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் அற்ற காசர்கோடு மாவட்டத்திலுள்ள புத்திகே உருமி என்ற பகுதிக்கு ஒரு பிரச்சாரகராக அவர் வந்து சேர்ந்தார்கள்.

அந்த நேரத்தில் இக்கிராமத்திற்கு பேருந்து வசதிகள் இல்லை.
சாலை கரடு முரடாக, கடினமாக, வாகனங்கள் செல்ல முடியாததாக இருந்தது.

தியாகம் செய்ய முழு விருப்பத்துடன் வந்த தாஹிர் தங்களுக்கு அவை எதுவும் கவலை தரவில்லை.

1973 ஆம் ஆண்டு உருமியில் உள்ள பழைய மஸ்ஜிதில் தர்ஸ் சொல்லிக் கொடுக்க துவங்கினார்கள். படிப்படியாக உருமி அறிவுத் தாகம் கொண்டவர்களுக்கு
ஒரு சிறந்த அடைக்கல மையமாக மாறியது. தொலை தூரங்களி லிருந்து மாணவர்கள் அங்கு வரத் தொடங்கினர்.

அறிவின் மணம் பரவியபோது, மாவட்டத்தில் முக்கிய மையமாக உருமி மாறியது. தர்ஸ் மற்றும் பள்ளிச் சேவைகளில் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் தங்கள் அவர்கள் மக்கள் சேவை நடவடிக்கைகளிலும் கவனத்தைச் செலுத்தினார்கள். ஸெய்யித் அவர்களைச் சந்திக்க மக்கள் பல இடங்களிலிருந்தும்
வரத்துவங்கினர்.

தங்களின் உள்ளத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்த மார்க்கப் பிரச்சாரகருக்கு மஸ்ஜிதின் நான்கு சுவர்களுக்குள் தன்னை அடைத்துக் கொள்ள முடியவில்லை. கொள்கைப் பிரச்சாரப் பணியை தனது முக்கிய குறிக்கோளாக தங்ஙள் எடுத்துக் கொண்டார்கள்.

எழுபதுகளில், சமஸ்தயின் வெகுஜனப் பிரிவான SYS வளர்ந்து வந்த நேரத்தில் மாநிலத்தில் பெயரளவு மட்டுமே யூனிட்டுகள் இருந்தபோது, EK ஹஸன் முஸ்லியார், காந்தபுரம் A.P. உஸ்தாத் ஆகியோர் தலைமையில்
SYS ஒரு புதிய முன்னேற்றத்திற்குத் தயாராகி வந்தது.

சமூக, அரசியல் தலைமையின் தலையீடுகளிலிருந்து விடுபட்டு ஸுன்னத் வல்ஜமாஅத்தின் இருப்பை நிலைநாட்டத் தயாரான நேரத்தில் வடக்கிலிருந்து புதிய விழிப்புணர்விற்கு வலுவான ஆதரவையும், ஆற்றலையும் அளித்த தலைவராகத் தாஹிர் தங்கள் ஆனார்கள்.

ஒரு காலத்தில் பாரம்பரிய இஸ்லாமிய சின்னங்களின் அடையாளங்களாக இருந்த புத்திகே பஞ்சாயத்தின் பல்வேறு ஜமாஅத்துகளின் தேக்க நிலையையும், நவீன இயக்கங்களின் (வஹாபிகள்) உள்நோக்கம் மற்றும் சூழ்ச்சிகளையும் தாஹிர் தங்களால் கண்டறிய முடிந்தது.
முக்கியஸ்தர்களான
சில தலைவர்களின் வஹாபிகளுடனான உறவு ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கைகளில் ஏற்படுத்திய விரிசல்களை தங்ஙள் முழுமையாக ஆய்வு செய்தார்கள்.

ஜமாஅத்துகள் பாரம்பரிய அடையாளத்துடன் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும், பொதுமக்களிடையே ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை உணர்வை வளர்க்க வேண்டும், ஆன்மீக இயக்கம் மூலம் நாட்டிற்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தர வேண்டும்.
உறுதியான ஆதரவுடன் சில இளைஞர்கள் முன்வந்தனர். கலந்துரையாடல்கள், ஆலோசனைகள் நடந்தன.
உருமி பள்ளிவாசல் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை வளர்ச்சிக்கான சிந்தனைகளால் முன்னேறியது.

1975 இல் புதிய முன்னேற்றத்திற்குத் துவக்கம் குறிக்கப்பட்டது.
புத்திகே பஞ்சாயத்து SYS முதல் மாநாடு,
தங்கள் அவர்களின் அழைப்பை ஏற்று பல்வேறு ஜமாஅத்துகளின் பிரதிநிதிகள் வந்தனர். இயக்கத்தின் மூலம் ஜமாஅத்துக்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து தங்ஙள் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள் ஒவ்வொரு ஜமாஅத்திலும் SYS கிளை தொடங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அடுத்த நகர்வுகளை தொண்டர்கள் செய்யட்டும் என்று தங்கள் காத்தி ருக்கவில்லை. அவர்களே ஒரு தொண்டராக மக்கள் மத்தியில் சென்றார்கள். பஞ்சாயத்தின் மூலை முடுக்குகளுக்கு நடந்து சென்றார்கள்.
ஓரிரு வாரங்களில் பத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உருவாக்கப்பட்டன.

அனைத்து கிளைகளுக்கும்
தெளிவான செயல் திட்டங்கள்
வகுக்கப்பட்டன.
திக்ர் மஜ்லிஸ்,
ஸலவாத் மஜ்லிஸ், அறிவு மன்றங்கள் மற்றும் வேலை வாய்ப்புக்கான முயற்சிகள் அனைத்தும் செயல் திட்டத்தில் இருந்தன.

இன்று அந்த கிளைகள் வளர்ச்சியடைந்து, குறிப்பிட்ட பஞ்சாயத்தில் மட்டும் 23 கிளைகள் உருவாகும் அளவிற்கு வளர்ந்துள்ளன. பஞ்சாயத்தை இரண்டு வட்டங்களாகப் பிரிக்கும் வடிவத்தில் இயக்கம் வளர்ந்தது.
மாநாடுகள் மூலம் தொண்டர்கள் அறிவொளி பெற்றபோது,
பெரிய கூட்டங்கள் மூலம் பொது மக்களிடம் பேசினர்.

அங்கடிமுகர் என்ற ஒரூர். அங்கு பித்அத்தின் கருத்துக்கள்
வேரூன்றி இருந்தன.
அங்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது அந்நிகழ்வு பெரிய வெற்றியைத் தந்தது.

மூன்று நாள் சொற்பொழிவு ஸுன்னத் வல்ஜமாஅத் இயக்கத்தின் கீழ் நடைபெற்ற முதல் நிகழ்ச்சி அது, இந்நிகழ்வு நாட்டில் பெரும் விவாதங் களுக்கு வழிவகுத்தது. கேள்விகள் மேடைக்கு வந்து கொண்டே இருந்தன.

இரண்டாவது நாளின்
பேச்சாளர் தாஹிர் தங்ஙள்.
தலைப்பு ஜும்ஆ குத்பா அவர்களது சொற்பொழிவு மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தியது.
படிப்படியாக மலையாள குத்பா
முடிவுக்கு வந்தது.

அங்கடிமுகர் மற்றும் சுற்றுப்புறங்கள் பாரம்பரிய ஸுன்னத் வல்ஜமாஅத் மஹல்லாக்களாக மாறின.

முதல் நிகழ்ச்சியின் வெற்றி பெரிய மாநாடுகளுக்கு உத்வேகம் அளித்தது.

சமஸ்தயின் தாலுகா குழுவின் தலைமையில் நடைபெற்ற இந்த மூன்று நாள் மாநாட்டின் காரணமாக சமஸ்தயின் கொடியும், SYS என்ற பெயரும் முதன்முதலில் புத்திகையில் உயர்ந்து ஒலித்தது.

பின்னர், அந்தக் கொடி கிராமங்களின் உற்சாகமாக மாறியது. முன்னால் ஸெய்யித் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் அறிஞர் நின்றபோது மக்கள் அவர்கள் பின்னால் திரண்டனர்.

மீலாது விழா, நேர்ச்சை போன்ற பாரம்பரிய சடங்குகள் ஊர்களில் நடத்தப்பட்டாலும், ஸுன்னத் வல்ஜமாஅத் எதிர்ப்பு கருத்துக்களைக் கொண்டவர்கள் பெரும்பாலும் பேச்சாளர்களாக
வந்த காலம் அது.

இதனால் பித்அத்தான கருத்துக்கள் பல மக்கள் மனதில் ரகசியமாக ஊடுருவின.
தங்ஙள் அவர்களின் கடுமையான எதிர் வினையாற்றல் காரணமாக அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. மேலும் சமஸ்தயின் மிகச் சிறந்த உலமாப் பெருமக்களை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்து பித்அத் இயக்கங்களுக்கு முடிவுரை எழுதினார்கள்.

1975ல் பஞ்சாயத்து SYS உருவாக்கப்பட்டவுடன், செயல்பாடுகளின் வேகம் அதிகரித்தது. அன்று ஒரு கிளையை உருவாக்குவது பெரிய தியாகமாக இருந்தது. ஜும்ஆவுக்குப் பிறகு பயான் செய்து மக்களிடம் விஷயத்தை சொல்வார்கள். அத்துடன் உருமி பள்ளிவாசலில் பகரத்திற்கு ஆளை நியமித்து விட்டு தாஹிர் தங்கள் அவர்களே வேறு பல ஜமாஅத்துக்களுக்கும் செல்வார்கள்.

ஒரு ஜமாஅத்திலிருந்து இன்னொரு ஜமாஅத்திற்கு பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியிருந்தது. உருமியிலிருந்து முன்னூர் எனும் ஊருக்கு நடந்துச் செல்லும் வழியில் காலணி அறுந்து போனதால் வெறுங்காலுடன் பயணம் செய்ததை தொண்டர்கள் நினைவு கூர்வதைதைக் கேட்கும்போது புதிய காலத்தில் அனைத்து வசதிகளுக்கும் மத்தியில் நமது செயல்பாடுகள் எவ்வளவு சிறியவை என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது.

தாஹிர் தங்கள் அவர்களின் ஆன்மீக இருப்பை விரும்பிய சில கனவான்கள் தங்கள் ஊர்களில் SYSஐ உருவாக்க தயக்கம் காட்டிய நேரத்தில் தங்கள் அவர்கள் சொன்ன வார்த்தைகள் இன்றும் உத்வேகம் தருவதாக இருக்கின்றன. உங்களுக்கு அமைப்பு வேண்டாம் எனில் தங்ஙளும் உங்களுக்கு வேண்டாம், என் மீது உங்களுக்கு அன்பு இருந்தால், உங்கள் ஊரில் SYS ஐ உருவாக்க வேண்டும் SYS இல்லையென்றால் நான் உங்களுடன் இருக்க மாட்டேன்.
தங்ஙள் அவர்களின் ஆன்மீக இருப்பை விரும்பியவர்களிடையே இயக்கத்தை வளர்க்க தங்ஙள் அவர்கள் காட்டிய மன உறுதி அந்த நேரத்தில் அமைப்பின் விரிவாக்கத்திற்கு உதவியது.

காசர்கோடு மற்றும் மஞ்சேஸ்வரத்தின் வடக்குப் பகுதிகளில் இன்று காணப்படும் இயக்க வளர்ச்சிக்கு வித்திட்டதும், உந்து சக்தியாக செயல் பட்டதும் தங்கள் அவர்களாவார்கள்.

SYS தவிர, SSF உருவாக்கத்திலும் தாஹிர் தங்கள் முன்னிலை வகித்தார்கள். பஞ்சாயத்தின் முதல் கிளை உருமியில் உருவாக்கப்பட்டது. பின்னர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தினார்கள்.
அந்த நேரத்தில் அதிக வாசகர் சமூகம் இல்லாத உள் கிராமங்களில் கூட ஸுன்னத் வல்ஜமாஅத் வெளியீடுகளின் பிரச்சாரத்திற்கு தங்ஙள் செல்வார்கள்.

ஸுன்னி வாய்ஸ் இதழுக்கு சந்தாதாரர்கள் சேகரிக்க ஏ.பி.உஸ்தாத் அவர்கள் உருமிக்கு வந்ததையும், கூப்பனுடன் அவர்கள் ஊர் முழுக்க நடந்ததையும், எதிர்பார்த்த அளவுக்கு சந்தாதாரர்கள் கிடைக்காததால் ஏ.பி. உஸ்தாத் ஏமாற்றமடையாமல் இருக்க அவர்களுக்கு ஆதரவாக நின்றதையும் தாஹிர் தங்ஙள் கூறுவதுண்டு.
பழைய தலைமுறையைச் சேர்ந்த பலர்
நடந்து தளர்ந்து உருமி பள்ளியின் வாசலில் படுத்துக் கிடந்த ஏ.பி. உஸ்தாத் அவர்கள் நினைவு கூருவதுண்டு.

மதரஸாக்களை கட்டியெழுப்புவதிலும், ஸமஸ்தயின் ஒப்புதலைப் பெற்றுக் கொடுப்பதிலும் தங்கள் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். ஸமஸ்தயின் செயல்பாடுகளை பரப்புவதிலும் தங்ஙள் அவர்கள் பெரும் பங்களிப்புச் செய்தார்கள்.

தாஹிர் தங்ஙள் அவர்களின் தலைமையில் காசர்கோடு தாலுகா பெரும் முன்னேற்றம் கண்டது.
பின்னர் கர்நாடக ஜம்இய்யத்துல் உலமாவைச் செயல்படுத்துவதில் அவர்கள் முன்னணியில் இருந்தார்கள்.

இன்று நாம் ஆலோசனை செய்யும் ஜீவனம் போன்ற திட்டங்களுக்கான நடவடிக்கைகள் எழுபதுகளில் முயற்சிக்கப்பட்டன என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

சங்காயகரா கிளையில் உள்ளூர் மக்களுக்காக மதரஸா மண்டபத்தில் தொடங்கப்பட்ட கைத்தொழில் பயிற்சி பெரும் வெற்றி பெற்றது. நாற்காலி மற்றும் பை தயாரிக்கும் பிரிவைத் தொடங்கி, தங்கள் அவர்களே பயிற்சி யாளராக இருந்தார்கள். உள்ளூர் வாசிகளுக்கு ஒரு சிறிய வருமானம். அத்துடன் செயல்பாடுகளுக்கு ஒரு கைத்தாங்ககல்!

இதன் வெற்றி பஞ்சாயத்தில் ஒரு ஸுன்னத் வல்ஜமாஅத் நிறுவனம் என்ற யோசனைக்கு வழி வகுத்தது. 1979 இல் கட்டத்துட்காவில் நடைபெற்ற SYS ஆண்டு கூட்டத்தில் நிறுவனத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

1979 ஆம் ஆண்டு புத்திகே பஞ்சாயத்து ஸன்னி அனாதை இல்லம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட எளிய முயற்சி 1992 ஆம் ஆண்டு "முஹிம்மாத்துல் முஸ்லிமீன் கல்வி மையம்' என்ற அறிவுப் பெருங்கடலுக்கு உத்வேகமாக மாறியது.

பொது மக்களின் சிறிய பங்களிப்புகளுடன்
இந்த நிறுவனத்தின் அன்றாடச் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டன. முஹிம்மாத் வளர்ச்சியடைந்து ஒரு பெருநிறுவனமாக மாறியபோதும் தங்கள் அவர்களின் ஒவ்வொரு முயற்சியிலும், முன்னேற்றத்திலும் பொது மக்களை தன்னோடு சேர்த்து நிறுத்திக் கொண்டார்கள்

1989 ஆம் ஆண்டு, ஸுன்னத் வல்ஜமாஅத் இயக்கம் ஒரு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. சமுதாய அரசியல் வலுவாக இருந்த வடக்குப் பகுதிகளில் ஸமஸ்தயில் ஏற்பட்ட நிகழ்வுகளின் திருப்பம் முழு நாட்டையும் பாதித்தது.

அந்த நேரத்தில் தங்கள் அவர்கள் ஸமஸ்தயுடன் சேர்ந்து நின்று மாவட்டத்தில் ஸுன்னத் வல்ஜமாஅத் இலட்சியக் குழுவை வலுப்படுத்த முன்வந்தார்கள்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலை.
அந்த நேரத்தில்
காசர்கோடு நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரபலமான நெல்லிக்குந்தில் தங்ஙள் அவர்கள் முக்கிய முதர்ரிஸாக இருந்தார்கள்.

ஷைகுனா காந்தபுரம் உஸ்தாத் அவர்கள் தலைமை தாங்கும் ஸுன்னத் வல்ஜமாஅத் அமைப்பை புறக்கணிப்புச் செய்துக் கொண்டிருந்த நேரம். அப்போது ஏ.பி. உஸ்தாத் அவர்களுக்கு ஆதரவு தருவதற்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தது. கோழிக்கோட்டில் உள்ள தாத்தூர் ஜமாஅத்தின் முஹல்லா காஜியாகவும் தங்ஙள் இருந்தார்கள். டி.சி. முஹம்மது முஸ்லியார் அங்கு முதரிஸாக இருந்தார்.

சமஸ்தயின் முஷாவரா கூட்டத்தை நிறுத்தி வைக்க வழக்கு
தொடர்ந்ததற்காக
டி.சி. உஸ்தாத்துக்கு எதிராக பெரும் கூக்குரல் எழுந்தது.
டி.சி.யை மாற்ற தாத்தூரிலும்,
காந்தபுரம் உஸ்தாதின் அமைப்பிலிருந்து விலகி நிற்க நெல்லிக்குந்நிலும் நிறைய அழுத்தங்கள் வந்த போது தங்கள் அவர்கள் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்.

1989 எர்ணாகுளம் மாநாட்டின் வடக்கு மண்டல பிரச்சார வாகன ஊர்வலத்தின் தலைவராக தங்கள் கிராமங்கள்தோறும் பயணம் செய்தார்கள். மாநாட்டின் மாவட்டப் பிரச்சாரத் தலைமை அமைப்பாளராக இருந்த தங்ஙள் எர்ணாகுளம் மாநாட்டின் ஒவ்வொரு சலனத்திலும் இணைந்து பணியாற்றினார்கள். இதன் காரணமாக தங்கள் அவர்கள் எதிர் தரப்பின் முக்கிய இலக்காக மாறினார்கள்.

அச்சுறுத்தல்களும், அவதூறுப் பிரச்சாரங்களும் பரப்பப்பட்டன. நூற்று இருபது மாணவர்களைக் கொண்ட நெல்லிக் குத்து தர்ஸ் சமுதாய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களால் கலைக்கப்பட்டது.

மாவட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று அச்சுறுத்தியவர்களின் கண் முன்னால் காசர்கோட்டில் ஒரு வீட்டை வாங்கி வாழ்ந்து காட்டி காசர்கோட்டின் பிரிய புத்திரனாக மாறினார்கள் அந்த கொள்கைப் போராளி. கொடுங்காற்றிலும் பின்வாங்காத இலட்சியத் துணிச்சல் மாவட்டத்தில் இயக்கத்தின் பலமாக மாறியது.

ஒவ்வொரு மாவட்டத்திலும்
மர்கஸ் மாதிரியில் ஸுன்னத் வல்ஜமாஅத் நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற எர்ணாகுளம் மாநாட்டின் அறிவிப்புக்கு வடக்கிலிருந்து தாஹிர் தங்ஙள் அளித்த பதில் முஹிம்மாத் அமைப்பின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் தங்கள் முஹிம்மாத்தை நிறுவினார்கள்.
இன்றும் அமைப்பின் செயல் வீரர்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு தனித்துவ நிறுவனமாக முஹிம்மாத் திகழ்கிறது.

ஐம்பது ஏக்கர் பரப்பளவில் மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் ஒரு பெருநிறுவனமாக முஹிம்மாத் வளர்ந்துள்ளது. முஹிம்மாத்தின் ஒவ்வொரு மணல் துகளிலும் தங்கள் அவர்களின் வியர்வை வாசனை உள்ளது.

இந்த மகத்தான வெற்றியுடன்
தங்ஙள் அவர்கள் நட்டு, நீர் பாய்ச்சி, வளர்த்தெடுத்த முஹிம்மாத் என்ற அறிவுத் தோட்டத்தில் அமைந்த பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்களின் ஒதல்கள் மற்றும் திக்ருகளைக் கேட்டு ரசித்துக் கொண்டு அதன் ஓரத்தில் அவர்கள் ஓய்டுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

2006ல் இம்மை வாழ்வை முடித்துக் கொண்ட தாஹிர் தங்கள் அவர்களின் இறுதி ஓய்விடமான முஹிம்மாத்திலுள்ள 'அஹ்தல் மகாம்' இன்று ஒரு புனிதப் பயண மையமாக உள்ளது. பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஸியாரத்துகளில் ஆயிரக்கணக்கானோர் இரவும், பகலும் அவர்களின் முற்றத்தில் அடைக்கலம் தேடி வருகின்றனர்.

தாஹிர் தங்கள் அவர்களின் வாழ்க்கையை ஒரு சட்டகத்தில் அடைத்து விட முடியாது. நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற அறிஞர்களை உருவாக்கிய முதர்ரிஸ், மஸ்அலாக்களின் முடிச்சை அவிழ்க்க சாதாரண பாமரர்கள் மற்றும் அறிஞர்களால் நம்பப்பட்ட ஒரு சிறந்த சட்ட வல்லுநர்.

அவர்கள் சமஸ்தயின் தாலுகா மற்றும் மாவட்டத் தலைவராகவும்,
கேந்திர முஷாவராவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்கள். மேலும் கர்நாடகாவில் சமஸ்தயின் விரிவாக்கத்திலும் முன்னணியில் இருந்தார்.

புத்திகே பஞ்சாயத்தின் SYS தலைவராகவும், பின்னர் நீண்ட காலம் தாலுகா மாவட்டத் தலைவராகவும் பணியாற்றினார்கள். மேலும் அவர்கள் மரணிக்கும் போது மாநில பொருளாளராக இருந்தார்கள்.
செயல் வீரர்களை தொடர்ந்து ஊக்குவித்த சிறந்த தலைவராக இருந்தார்கள்.

இயக்க நடவடிக்கைகள் மூலம் செயல்வீரர்களுக்கு தங்கள் அவர்களால் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது. அவர்கள் ஒரு சிறந்த பக்தர்.
திருநபி ஸுன்னத்துக்களை மீண்டும் உயிர்ப்பிக்க உற்சாகம் காட்டிய ஆஷிதர் ரஸுல்

ஒவ்வொரு மஹல்லாவுக்கும் நேரடியாகச் சென்று திக்ர் மஜ்லிஸை வழி நடத்தினார்கள். அவர்கள் நிறுவிய ஆன்மீக மஜ்லிஸுகள் மஹ்ழரத்துல் பத்ரிய்யா மூலம் மேலும் ஒளி வீசுகிறது.

புனிதர் நபிகளாரின் புகழைப் பாடுவதற்கும், கற்றுக் கொள்வதற்கும், சொல்வதற்கும், அனுபவிப்பதற்கும் குறிப்பாக நிறுவப்பட்ட மத்ஹுர் ரஸுல் அறக்கட்டளை மீலாத் நிகழ்ச்சிகளைப் பிரபலப்படுத்தியது.

தங்கள் அவர்கள் காதிரிய்யா மற்றும் ரிஃபாயிய்யா தரீக்காக்களின் ஷெய்க் ஆவார்கள்.
ஆன்மீக குருமார்களிடமிருந்து பெற்ற இஜாஸத்துகளை தமது சீடர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டினார்கள்.

நிதி விஷயங்களிலும், அமைப்பு மற்றும் நிறுவனப் பொறுப்புகளிலும் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். தலைமைத்துவத்தை ஒரு அமானத்தாக கருதினார்.
பொது நிதியைச் செலவிடுவதில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

ஒரு நிறுவனத் தலைவராக அவர்கள் நியாயமான முறையில் அனுபவிக்கக்கூடிய வசதிகளைக் கூட விட்டுவிட்டு
தனது செல்வத்தின்
பெரும்பகுதியை முஹிம்மாத்துக்கு நன்கொடையாக அளித்து விடைப் பெற்றார்.

இயக்கத்தில் சேர்ந்து நிற்பதன் மூலம் ஆன்மீகத்தின் உச்சத்தை அடைவது எப்படி சாத்தியம் என்பதை காண்பித்து தந்த முன்மாதிரியை தாஹிர் தங்களிடமிருந்து செயல்வீரர்கள் பெறுகிறார்கள்.
எனவே செயல் வீரர்கள் அந்த வாழ்க்கையை மேலும் கற்றுக் கொள்ளவும், பின்பற்றவும் தயாராக வேண்டும்.

ஒரு பிரச்சாரகருக்குத் தேவையான அனைத்து நற்குணங்களைப் பற்றிய நல்ல பாடங்கள் பெயரைப் போலவே புனிதமான தாஹிர் தங்கள் அவர்களின் வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது

கடைசி நாட்களில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும் இயக்கக் கூட்டங்களில் அவர்கள் தீவிரமாக கலந்துகொண்டார்கள்.

ஸுன்னத் வல்ஜமாஅத் கல்வி வாரிய மதரஸாக்களின் விரிவாக்கத்திலும் அவர்கள் முன்னணியில் நின்றார்கள். மாவட்டத்தில் அதிக எண்ணிக்கை யிலான ஸுன்னத் வல்ஜமாஅத் மதரஸாக்களைக் கொண்ட பகுதியாக முஹிம்மாத் பகுதியை அவர்களின் கடின உழைப்பு மாற்றியது.

பல்வேறு மஹல்லாக்களை வலுப்படுத்தியதோடு, முஹிம்மாத்தின் கீழ்
பல மஹல்லாக்கள் நிறுவப்பட்டன. முஹிம்மாத்தை மையமாகக் கொண்ட நூற்றுக்கணக்கான வீடுகளைக் கொண்ட ஒரு பெரிய மஹல்லா ஜமாஅத்தையும் அவர்களால் உருவாக்க முடிந்தது.

காசர்கோடு புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உயர்ந்து நிற்கும் இயக்கத்தின் தலைமையகமான மாவட்ட ஸுன்னத் வல்ஜமாஅத் மையம், அவர்களின் நீண்டகால தொலைநோக்குப் பார்வை மற்றும் கடின உழைப்பின் விளைவாகும்.

‌‌ வேண்டுகோள்.
__________________

அனாதைகளைப் பாதுகாப்பதையும், சமூகத்தின் கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மறைந்த ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் தலைமையில் நிறுவப்பட்ட முஹிம்மாத்துல் முஸ்லிமீன் கல்வி மையம் அந்த மாபெரும் மனிதரின் கனவுபோல நாளுக்கு நாள் வளர்ந்து விரிவடைந்து வருகிறது. காசர்கோடு மாவட்டத்தின் புத்திகை பஞ்சாயத்தில் 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள முஹிம்மாத்தின் 30 உயர் கல்வி நிறுவனங்களில் சுமார் 3500 மாணவர்களுக்கு இலவச கல்வி, உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குகிறது.

மேலும், தேவைப்படுபவர்களுக்கு அடைக்கலமாக பாதுகாப்பு இல்லம் மற்றும் அனாதை இல்ல பராமரிப்பு திட்டம், 12 வயதுக்குட்பட்ட அனாதை குழந்தைகள் அவர்களின் சொந்த வீடுகளில் குடும்பத்தினருடன் தங்கி இருந்து கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அனைத்து செலவுகளையும் வழங்குகிறது.

இந்த நிறுவனம் மாதந்தோறும் உணவு மற்றும் தொடர்புடைய வசதிகளுக்காக 60,00,000 (அறுபது லட்சம் ரூபாய்) க்கும் அதிகமாக செலவிடுகிறது. கட்டுமான நடவடிக்கைகளுக்கான பெரும் செலவு இதைவிட கூடுதலாகும்.

ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களையும், நிறுவனத்தையும் உண்மையாக நேசிக்கும் தாராள மனப்பான்மை கொண்ட மார்க்க அன்பர்களின் தாராள உதவிகள் தான் முஹிம்மாத்தின் வெற்றிக்கு காரணம். எதிர்காலத்திலும் இந்த ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தற்போதுள்ள நிறுவனத்தை விரிவுபடுத்துவதோடு, புதிய முயற்சிகளைத் தொடங்கவும்,
மேலும் அனாதைகளைப் பாதுகாக்கவும் முஹிம்மாத் திட்டமிட்டுள்ளது.
இறைவன் அனைத்தையும் வெற்றியடையச் செய்வானாக. முஹிம்மாத்திற்கு உதவும் அனைவருக்கும் இரு உலகங்களிலும் எல்லாம் வல்ல இறைவன் நற்பேறுகளை வழங்குவானாக. ஆமீன்.

பி.எஸ். அப்துல்லா குஞ்ஞி ஃபைஸி பொதுச் செயலாளர், முஹிம்மாத்
காசர்கோடு, கேரளா.
___________________________


வெளிச்சம் வீசிய பணிவான மனிதர்

தாஹிருல் அஹ்தல் தங்கள்...

பெயரைப் போலவே புனிதமான வாழ்க்கை.

முன்னோடியாக வாழ்ந்து முன்னுதாரணமாக விளங்கிய கர்மயோகி

படித்து பின்பற்ற வேண்டிய முன்மாதிரி வாழ்க்கை, மோதல்களையும் சவால்களையும் சமாளித்து இயக்கத்தை இலக்கை நோக்கி அழைத்துச் சென்ற கேப்டன்.

அஹ்தள் தங்களின் வாழ்க்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

பதிவு செய்யப்பட வேண்டியது.

مركز مهامات المسلمين التعليمي

MUHIMMATHUL MUSLIMEEN EDUCATION CENTRE Muhimmath Nagar, Puthige, Kasaragod.

muhimmathlive

www.muhimmath.com 9400045214, 9400555214, 04998 245214