மதிப்பிற்குரிய நிர்வாகப் பெருமக்களுக்கு முஹிம்மாத் எழுதும் கடிதம்
அஸ்ஸவாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய ஜமாஅத்தின் நிர்வாகப் பெருமக்கள் அறிய
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் குடும்பப் பரம்பரையைச் சேர்ந்த புகழ் பெற்றவரும், சிறந்த அறிஞரும், சூஃபி மற்றும் ஆஷிக் ரஸுலுமான ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்கள் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் புத்திகையில் தனது இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஓர் பரக்கத்தான நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
ஆள் அரவமற்ற ஒரு தரிசு நிலத்தை அறிவு கேந்திரமாக அவர்கள் மாற்றினார்கள். சில மாணவர்களுடன் தொடங்கி, இன்று நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகள் இந்த நிறுவனத்தில் படிக்கின்றனர்.
ஆலிம்கள், ஹாஃபிழ்கள், அனாதைகள் உட்பட பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய ஆதரவற்ற பல ஏழை சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் இந்நிறுவனத்தில் கல்வி கற்கின்றனர்.
மேலும் 12 வயதுக்குட்பட்ட அனாதைகளுக்கு அவர்களின் தாயின் மடியில் இருந்து வளர நிதி உதவி வழங்கும் 'அனாதை இல்லப் பராமரிப்பு திட்டத்தின் மூலம் அவர்களின் தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் வழங்குகிறது.
வயது மற்றும் நோய் காரணமாக கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத முதியவர் களைப் பாதுகாக்க 'முதியோர் இல்லம்' மற்றும் 'பராமரிப்பு மையம்' போன்ற தொண்டு, சேவைத் திட்டமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் சந்ததியினரான ஏராளமான ஆலிம்கள் மற்றும் ஹாஃபிழ்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் சேவை செய்கின்றனர்.
தற்போது, 50 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பில் முப்பதுக்கு மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகளின் தங்குமிடம் மற்றும் உணவுக்காக ஒவ்வொரு மாதமும் எழுபதாயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது.
இந்த ஸ்தாபனத்திற்கென்று நிரந்தர வருமான மார்க்கம் எதுவும் இல்லை. இந்த ஸ்தாபனம் எல்லாம் வல்ல இறைவனின் மகத்தான பேரருளாலும், விசுவாசிகளின் அசைக்க முடியாத ஆதரவாலும், நமது மகான் ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின் கராமத்தாலும் நடந்து வருகிறது.
இன்று ஒரு பெரிய மற்றும் சக்தி வாய்ந்த அமைப்பாக மாறியுள்ள முஹிம்மாத்தின் பிரதி மாதம் தேவைப்படும் பெரிய செலவுகள் அனைத்தும் நேர்ச்சைகள், நன்கொடைகளால் பூர்த்தி செய்யப்படுகின்றன.
அங்கு நேர்ச்சைகள் செய்த பலரின் ஹாஜத்துகள் (தேவைகள்) நிறைவேற்றப்பட்டு பிரார்த்தனைகளுக்கு இஜாபத் கிடைக்கிறது.
எனவே அனாதைகள் மற்றும் ஏழைக் குழந்தைகளைப் பராமரிப்பதன் மூலம் நல்ல வழியில் தொடர்ந்து முன்னேற, எங்களுக்கு உங்கள் மகத்தான உதவியும், ஆதரவும் தேவை
இதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் நாம் வழங்கும் ஒரு பெட்டியை உங்கள் இல்லங்களில் வைத்து அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து ஒரு நல்ல தொகையைச் சேகரித்து வழங்கிட உங்கள் ஆதரவை, ஒத்துழைப்பை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல், நிதி வசதி உள்ளவர்கள் ஒவ்வொரு குழந்தையின் செலவுகளை ஈடு செய்வதன் மூலமும், அவர்களின் உணவுக்கான அரிசி மற்றும் பிற வசதிகளை வழங்குவதன் மூலமும் உதவ வேண்டுகிறோம்.
ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நிறுவனத்தைப் பார்வையிடவும், ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின் தர்கா ஸியாரத் செய்திடவும் ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரையும் நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.
அல்லாஹ் நம்மிடமிருந்து இந்த மகத்தான மார்க்க பணிகளை ஏற்றுக்கொள்வானாக.
ஆமீன் யா றப்பல் ஆலமீன்