என்னைக் காணாமல் செல்ல மாட்டார்.
இவ்வருடத்தின் கடைசி ஜும்ஆவான இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னர்
கழகத்தின் (அதிமுக) அவைத்தலைவர்
தமிழ் மகன் உசைன் அவர்கள்
சந்தித்துப் பேசினார்.
எப்போதுமே அவர் நம் பள்ளிக்கு ஜும்ஆ தொழுகைக்கு வந்தால் தொழுகை
முடிந்த பிறகு எமக்கு ஸலாம் சொல்லி
முஸாஃபஹத் செய்து நலம் விசாரித்து
செல்வது அவர் வழக்கம்.
பல நேரங்களில் எமது உரையை பாராட்டி
ஊக்குவிக்கவும் செய்வார்..
சுத்த தமிழில்,
இலக்கிய தமிழில், அழகு நடையில்
உரையாற்றுவது அவருக்கு
பிடித்த ஒன்று....
பெரும்பாலும் உரைகளை அதுபோலவே
அமைக்க முயற்சிப்பதுண்டு..
இன்னும் பயிற்சிகள் தேவை..
வல்லோன் அல்லாஹ் அனைத்தையும்
லேசாக்குவானாக...
ஒரு சிறு அறிவிப்பு.
_______________________
இன்ஷா அல்லாஹ்
3/1/2025 அன்று முதல் கீழ்க்கண்டவாறு ஜும்ஆ நடைபெறும்..
12 : 40_ ஜும்ஆ பயான்
1 : 10_ ஜும்ஆ குத்பா
1 : 20_ ஜும்ஆ தொழுகை
அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்..
நிர்வாகம்..
அல் அமீன் ஜும்ஆ பள்ளிவாசல்.
மீனாட்சி புரம்.
நாகர்கோவில்..