உஸ்மானிய பேரரசு ஆட்சியில் நடைபெற்ற மீலாத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டாட்டங்கள்
#உஸ்மானிய_பேரரசு_ஆட்சியில் #நடைபெற்ற_மீலாதுன்_நபி[ﷺ] #கொண்டாட்டங்கள் -
Ottoman Empire Mawlid al-Nabawi [ﷺ] Celebrations
உஸ்மானிய பேரரசில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது. உஸ்மானிய பேரரசின் முதல் கலீபா உஸ்மான் காஸி அவர்களின் காலத்தில் இருந்து மீலாதுன் நபி[ﷺ] கொண்டாடப்பட்டது. கலீபா சுலைமான் காலத்தில் உஸ்மானிய பேரரசின் முக்கிய நிகழ்வாக மீலாதுன் நபி[ﷺ] தினம் கொண்டாடப்பட்டது.கலீபா சுல்தான் 3ம் முராத் காலத்தில் மீலாதுன் நபி[ﷺ] கொண்டாட்டாங்கள் முழுமையாக அரச வைபவரீதியில் கொண்டாடப்பட்டது.
உஸ்மானிய பேரரசின் மீலாதுன் நபி[ﷺ] தின நிகழ்வுகள் ரபீய்யுனில் அவ்வல் பிறை 12இல் நடைபெற்றன. மீலாதுன் நபி[ﷺ] தின நிகழ்வுகள் அகாலர் பள்ளிவாசல், இஸ்தான்பூல் நீலப் பள்ளிவாசல்,வலீத் சுல்தான் பள்ளிவாசல்,அய்யூப் சுல்தான் பள்ளிவாசல்,பியதீத் பள்ளிவாசல் மற்றும் யில்லித் பள்ளிவாசல் போன்ற மஸ்ஜித்களில் வெவ்வேறான காலப்பகுதிகளில் நடைபெற்றன. இம்மீலாதுன் நபி[ﷺ] தின நிகழ்வுகளில் உஸ்மானிய பேரரசின் கலீபாக்கள் கலந்துகொண்டணர்.
உஸ்மானிய பேரரசின் மீலாதுன் நபி[ﷺ] தின நிகழ்வின் போது முதலில் மவ்லீத் அணிவகுப்பு பள்ளிவாசலை நோக்கிவரும். பின்னர், பள்ளிவாசலில் மக்கள் ஒன்றுகூடுவர். பின்னர்,ஒருவர் புனித அல்-குர்ஆனின் சூராதுல் பத்ஹை ஒதுவார். அதனைத் தொடர்ந்து உஸ்மானிய பேரரசின் சுல்தான் அங்கு வருகை தருவார். பின்னர், முவாரிப் என அழைக்கபடுவர் ரஸுல் ﷺ அவர்களின் உடல்ரீதியான குணாதிசயங்களை விளக்குவார். அதனைத் தொடர்ந்து ஹகீயா சோபியா மற்றும் நீலப் பள்ளிவாசல் இமாம்கள் இருவரும், ஒருவர் பின்னர் ஒருவர் மிம்பரில் ஏறி பிரசங்கம் செய்வார்கள். அவர்கள் ஒவ்வொருவரினதும் பிரசங்கத்தினை தொடர்ந்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுவர். அதேவேளை சபையோருக்கு (கூடியுள்ள மக்களுக்கு) சர்பத் மற்றும் நறுமணங்கள் பகிரப்படும்.அதனைத் தொடரந்து "மவ்லீத் சுலைமான் செலபீ " முதலாம் வாசிப்பாளரால் வாசிக்கப்படும். இரண்டாம் வாசிப்பாளர் வாசிக்கும் நடுப்பகுதியில், மக்காவின் அமீரால் (ஆளுநர்) அனுப்பப்பட்ட கடிதம் வாசிக்கப்படும்.அதனைத் தொடர்ந்து மதீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பேரித்தம் பழங்களை சுல்தான் தலைமை மந்திரிக்கு வழங்குவார். அவர் அதில் சிலவற்றை எடுத்துவிட்டு, உஸ்மானிய பேரரசின் செய்குல் இஸ்லாத்திடம் கொடுப்பார். அவர் அதில் சிலதை பெற்று, மீதியை அங்கு வருகை தந்துள்ள இராஜதந்திரிகளுக்கு வழங்குவார். இரண்டாம் வாசிப்பாளர் வாசித்து முடிந்ததும், அங்கு இனிப்புகள் அடங்கிய தட்டுகள் தலைமை மந்திரி, செய்குல் இஸ்லாம், நீலப்பள்ளிவாசல் அதிகாரிகள்,ஹகீயா சோபியா அதிகாரிகள்,நிதி அமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் முன்னிலையில் பரிமாறுவதற்கு வைக்கப்பட்டிருக்கும். அதனைத் தொடர்ந்து மூன்றாம் வாசிப்பாளர் மவ்லீதை வாசிப்பார். அவர் வாசித்து முடிந்ததும் நிகழ்ச்சிகள் முடிவடையும். பின்னர், உஸ்மானிய பேரரசின் சுல்தானை ஸலாம் சொல்லி வாழ்த்துவதற்கு பள்ளிவாசலின் வெளியே தலைமை மந்திரி உட்பட ஏனைய உயர் அதிகாரிகள் காத்துநிற்பர். பின்னர் சுல்தானின் குதிரையின் பின்னால் மவ்லீத் அணிவகுப்பு சுல்தானின் அரண்மனை வரை செல்லும். அதனைத் தொடர்ந்து, தலைமை மந்திரி,செய்குல் இஸ்லாம் மற்றும் ஏனையை உயர் அதிகாரிகள் தமது வீடுகளில் சிறிய அளவிலான மீலாதுன் நபி[ﷺ] தின நிகழ்ச்சிகளை நடத்துவர்.
படம்-1: உஸ்மானிய பேரரசு ஆட்சியில், இஸ்தான்புல் நகரின் சுல்தான் அஹ்மத் பள்ளிவாசலில் கி. பி. 1784 இல் நடைபெற்ற மீலாதுன் நபி[ﷺ] நிகழ்வு
படம்-2: 1915ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற மீலாதுன் நபி[ﷺ] நிகழ்வு
படம்-3: 1900ஆம் ஆண்டு, லிபியாவின் பென்காஸி நகரில் நடைபெற்ற உஸ்மானிய பேரரசின் மீலாதுன் நபி[ﷺ] நிகழ்வு
படம் - 4: தென் ஆபிரிக்காவின் டெர்பன் நகரில் 1906ஆம் ஆண்டு, மே மாதம், 16ஆம் திகதி நடைபெற்ற உஸ்மானிய மீலாத்துன் நபி[ﷺ] நிகழ்வுக்கான அழைப்பிதழ் (ஹிந்தி மற்றும் உருது மொழியில்)
படம் -5 : உஸ்மானிய படையணி இஸ்தான்பூல் நகரில் 1891 ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற மீலாதுன் நபி [ﷺ] நிகழ்வின் போது வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படும் இராணுவ மரியாதைக்கு தயாராகுதல்.
தொகுப்பு - இப்ஹாம் நவாஸ்
தகவல் பகிர்வு:M.#சிராஜுத்தீன் #அஹ்ஸனி