அரசனும் பாடகரும்

அரசனும் பாடகரும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

................#அரசனும்_பாடகரும்..............

ஒருமுறை ஒரு பாடகர் அரசவையில் வந்து அரசனைப் புகழ்ந்து ஒரு
பாடலைப் பாடினார்.

உடனே அரசன்
"உனக்கு 50 வெள்ளிக் காசுகளை அன்பளிப்பாக அறிவிக்கிறேன்" என்றான்...

மகிழ்ச்சியான பாடகர் மீண்டும் ஒரு பாடலைப் பாடுகிறார்.
அப்போது அரசன் மீண்டும் 50 பொற்காசுகளை பரிசாக அறிவித்தான்.

மகிழ்ச்சியில் ஆழ்ந்த பாடகர் மற்றொரு பாடலைப் பாடினார்.

பாடகருக்கு 8 கிராமங்களின் நிலம் பரிசாக அறிவிக்கப்பட்டது.

பாடகர் மீண்டும் மீண்டும் பாட, அரசன் ஒவ்வொரு பாடலுக்கும் பரிசுகளை அறிவித்துக் கொண்டே இருந்தார்...

பாடகர் வீட்டிற்கு வந்து நடந்ததை மகிழ்ச்சியுடன் தனது மனைவியிடம் கூறினார்.

நாட்கள் கடந்தும் பரிசுகள் வந்து சேரவில்லை.

அரசன் தனக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டான் என்று எண்ணி அரசன் முன் சென்று

"நீங்கள் எனக்குப் பரிசாக அறிவித்த வெள்ளி, தங்கம், பூமி, வைரங்கள் எதுவும் எனக்கு வந்து சேரவில்லை என்று கூறினான்...

உடனே அரசன் சொன்னான்
"ஏய் முட்டாள்!

நீ என் காதுகளையும், என் இதயத்தையும் சிறிது நேரம் இனிமைப்படுத்தினாய்.

நான் உன்னை மீண்டும் அதுபோல இனிமைப்படுத்தினேன்.
"போய் வேலையைப் பார்"
என்று சொல்லி அனுப்பி விட்டான்...

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு, ஒவ்வொருவரது ‌வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணம்,
35 ரூபாய்க்கு பெட்ரோல்...

அந்த அரசர் யார் என்று இதுவரை உங்களுக்கு பிடிகிடைக்கவில்லையா?

பிறரை ஏமாற்றுவது தான் அரசனின் முக்கிய பணி..

டி.ஜி.கோபகுமார்
12-02-2022.

https://m.facebook.com/story.php?story_fbid=649305499654054&id=100037238296836&sfnsn=wiwspwa

தமிழில்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி