கேரள முஸ்லிம்களும் அஹ்லு பைத்தினரும்
நபிகளாரின் குடும்பத்தை
உயிருக்கு உயிராக நேசிக்கும்
கேரள முஸ்லிம்கள்...
பத்தாம் வகுப்பு முடிந்து மதரஸாவில் ஓதுவதற்காக கேரள மாநிலம்
மலப்புரம் சென்றேன்.
ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த நேரத்தில் பல நண்பர்களும் இருந்தார்கள்.
கேரளாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
நண்பர்களில் சிலரை சிலர் பெயர் வைத்து அழைக்காமல் #தங்கள் என்று அழைத்தார்கள்.
மட்டுமல்ல அவர்களை மரியாதையாக நடத்தினார்கள், கண்ணியப்படுத்தி னார்கள்.
முதல் வருடம் ஆன காரணத்தினால் தங்கள் என்றால் என்ன? எதற்காக அவர்களை தங்கள் என்று அழைக்கின்றனர் என்று அன்று எனக்கு தெரிந்திருக்கவில்லை
பிறகு தான் எனக்கு தெரிந்தது தங்கள் என்றால் நபிகளாரின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பது.
என் ஊரிலும் ஒரு தங்கள் இருந்தார்கள்.
ஆனால் அன்று ஓதுவதற்கு போகும் முன்பு எல்லோரும் தங்கள் என்று அழைத்ததினால் நானும் சேர்ந்து
தங்கள் என்று கூறினேன்..
ஆனால் எதற்காக இப்படி அழைக்கிறார்களென்று எனக்கு
அன்று முழுமையாக தெரியாது.
கேரளாவுக்கு ஓதுவதற்கு சென்ற பிறகுதான் #ஸெய்யித் என்றும் #தங்கள் என்றும் அழைக்கப்படுபவர்கள் பெருமானாரின் குடும்பம் என்று
எனக்கு விளங்கிற்று..
கேரள மக்களைப் பொருத்தமட்டில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தாரை மிகவும் அதிகமாக கண்ணியப் படுத்துவார்கள்..
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தை நேசிப்பதில் அவர்களை மிஞ்சும் அளவிற்கு வேறு எவருமில்லை..
இஸ்லாமிய சங்கங்கள், இயக்கங்கள், கட்சிகள் என எல்லா பொதுகாரியங்களிலும் தலைமை பொறுப்பை வழங்கி ஸெய்யித்
மார்களை கவுரவப்படுத்துவார்கள்..
ஸெய்யித் மார்களை ஊரின் காஜிகளாக தலைமை தாங்க செய்வது, அவர்களின் குடும்பத்தாரில் சிறிய குழந்தைகளுக்கு கூட கண்ணியம், மரியாதை கொடுப்பது, அவர்களிடம் மிக அதபுடன் பேசுவது, அவர்களை அழகிய விதம் நடத்துவது. நிகழ்ச்சிகளில் அவர்களை பங்கேற்க செய்வது, ஊரிலுள்ள எல்லா நல்ல விஷயங்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களை தலைமை தாங்க செய்து அவர்களின் பறக்கத் பெறுவதே முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்ததை
நான் பார்த்திருக்கிறேன்...
எனது கல்லூரியின் முதல்வர் சுலைமான் முஸ்லியார் அவர்கள் ஸெய்யித்மார்களை மிகவும் அதிகமாக கண்ணியப் படுத்துவார்கள், கண்ணியமாக மட்டுமே அவர்களுடன் பேசுவார்கள், அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பார்கள், எங்களது கல்லூரி நிர்வாகத்திலும், மாணவர் மன்ற பொறுப்பிலும் முக்கிய பொறுப்புகளை தங்கள்மார்களே வகிப்பார்கள்..
வயதில் சிறியவர்களைக் கூட வாங்கோ, நீங்கோ, என்றே அழைப்பார்கள்..
பாடத்தில் உஸ்தாத் அவர்கள் ஸெய்யித் மார்களை அடித்ததை நான் பார்த்ததில்லை..
பாடம் படிக்காததற்கு கண்டிப்பார்கள், ஆனால் தண்டிக்காமாட்டார்கள்..
ரபீஉல் அவ்வல் மாத தினங்களில் ஸெய்யித் மார்களை வைத்து மௌலிது ஓதுவது, பயான் செய்வது,துஆ செய்வது என தங்கள்மார்களை அவர்கள் கண்ணியம் படுத்தும் செயல்
நம்மை வியப்படைய செய்யும்...
வருட இறுதியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஸெய்யித் மார்களை வைத்து பட்டம் வழங்குவார்கள்...
எத்தனையோ வருடங்களாக கேரளாவின் பிரபலமான ஸெய்யித் உள்ளாள் தங்கள் தான் எமது கல்லூரிக்கு பட்டமளிப்பு விழாவுக்கு முக்கிய அதிதியாக வந்துகொண்டிருந்தார்கள்..
இன்ஷா அல்லாஹ்
தொடரும்.
ஆக்கம்:
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி