இப்னு ஸுஊதுக்கு முன்னால் கர்ஜித்த மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர்

இப்னு ஸுஊதுக்கு முன்னால் கர்ஜித்த மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இப்னு_ஸுஊத்_மன்னருக்கு
முன்னால் கர்ஜித்த மெளலானா முஹம்மது
அலி ஜவ்ஹர்.

1926_ல் இப்னு ஸுஊது மன்னர் மக்காவில் " மு அதமரே இஸ்லாமிய்யா" என்ற உலக முஸ்லிம் மகா நாட்டைக் கூட்டினார்கள். எல்லா இஸ்லாமிய பிரதிநிதிகளும் மக்காவிற்கு வந்தார்கள். இந்தியாவிலிருந்து மெளலானா முஹம்மது அலி ஜவ்ஹர், இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாகச் சென்றார்கள்...*

*அந்த மகாநாட்டை இப்னு ஸுஊது அவர்களே திறந்து வைத்தார்கள்.மகாநாட்டுக்குச் சென்றிருந்த பிரதிநிதிகள் அவரது ஆடம்பரத்தை கண்டு பயந்து போனார்கள்..*

மகாநாடு ஒரு அழகிய கட்டிடத்தில் கூட்டப்பட்டிருந்தது..அதற்கு முன்னால் ஒரு முற்றவெளி, அதன் மத்தியில் கட்டப்பட்ட ஒரு தண்ணீர்த் தொட்டி.அதன் நடுவே தகரத் தொப்பிகளால் மூடப்பட்ட ஒரு செங்கல் கட்டிடம். அரசனுக்கு அஞ்சாத வீரகேசரி, கட்டிடத்திற்குச் செல்லும் போது அந்த தொப்பிகளைச் சற்று நீக்கிப் பார்த்துக் கொண்டார்கள்..

மகாநாடு ஆரம்பமாகி பலர் பேசினார்கள்.வீரகேசரி ஜவ்ஹரின் முறை வந்தது.ஆசனத்தை விட்டுக் கம்பீரமாக எழுந்து மன்னரை நோக்கி " சுல்தான் அவர்களே! ஏகாதிபத்திய ஆட்சியை இஸ்லாம் அனுமதிக்கின்றதா? முடியாட்சியை வேரோடு பிடுங்கி ஜனநாயகத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லையா? நீங்கள் திருக்குர்ஆனையும், திருநபியின் வாக்கியங்களையும் பலமாக பின்பற்றுவதாக கூறிக்கொள்கிறீர்கள்.

நீங்கள் ரோம மன்னர்களையும்,பாரசீக அரசர்களையும் பின்பற்றுவதேன்..?

நல்லடியார்களின் கப்றுகளையும் (தர்கா) இஸ்லாமிய ஞாபகச் சின்னங்களையும் இடித்துத் தகர்த்தெறிந்தது மிக வருந்தத்தக்க விஷயமாகும்..

புனிதமிக்க நல்லடியார்களின் கப்ருகளையும், மினாராக்களையும் இடிப்பதால் இஸ்லாத்தின் ஏகத்துவத்தை உலகில் நிலைநிறுத்திவிட முடியுமா?

நல்லடியார்களின் கப்றுகளை இடிப்பதற்காக இஸ்லாம் தோன்றவில்லை..

பிர்அவ்ன், ஹாமான், காரூன், நம்ரூத் இவர்களின் தன்மைகளையும்,
மன்னர் பதவியையும் குழிதோண்டிப் புதைப்பதற்காகவே இஸ்லாம் உலகில் தோன்றிற்று..

நல்லடியார்களின் கப்ருகளையும், ஞாபகச் சின்னங்களையும் தகர்த்தவர்கள் தண்ணீர் விழும் தொட்டியில் யானை, ஒட்டகம், குதிரை, சிங்கம் போன்ற கற்சிலைகளை வைத்து தகரத் தொப்பிகளால் மூடி இருக்கிறார்கள்..

மனிதர்களின் கண்களைத்தான் மறைக்கலாம், அல்லாஹ்வின் பார்வையை மறைக்க முடியுமா? என்று அரபியில் கர்ஜனை செய்தார்கள்...

இவ்வாறு "வீரகேசரி" வீரகர்ஜனை செய்து விட்டு தமது இடத்தில் அமர்ந்தார்கள்..இதைகேட்ட இப்னு ஸுஊது மன்னர் வெட்கித் தலைகுனிந்து பின்புறமாக வெளியேறிச் சென்று விட்டார்.

மெளலானா முஹம்மது அலி ஜவ்ஹர் அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சுபவர்கள்.அரசனுக்கு அஞ்சமாட்டார்கள். உலக சக்திகள் ஒன்று திரண்டாலும் அவற்றை எதிர்க்க சக்தி உள்ளவர்..

சத்தியத்திற்க்காகவே உயிர் துறந்தவர்.இம்மாதிரியான சத்திய சீலரை சரித்திரத்தில் காண்பது அரிது. இம்மாவீரரை இப்புனித துல் ஹஜ் மாதத்தில் நினைவு கூர்ந்து அறிவு பெறுவோமாக!!!

நன்றி: #நர்கிஸ்
முஸ்லிம் பெண்கள் மாத இதழ்..
டிசம்பர் =1976.

தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.