ரமளான் வினா விடை பாகம் 23
புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_23
104 : ஸகாத் எத்தனாவது ஆண்டு கடமையாக்கப்பட்டது..?
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸகாத் கடமையாக்கப்பட்டது..
105 : ஸகாத்தின் முக்கியத்துவம் என்ன..?
ஸகாத் என்ற வார்த்தையின் நேரடி அர்த்தம் தூய்மைப்படுத்துதல் என்பதாகும். நாம் ஸகாத் கொடுப்பதால் எமது உடைமைகள் தூய்மையடைகின்றன. எமது உள்ளம் உலக பற்று, கருமித்தனம், பண ஆசை போன்றவற்றை விட்டும் நீங்கி தூய்மை அடைகிறது. சமூகத்தில் வறுமை நீங்கி சமூகம் வளர்ச்சி அடைய ஸகாத் பெரிதும் துணை புரிகிறது...
106 : ஸகாத் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?
அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக் கொள்ள முடியும். செல்வத்தில் வளர்ச்சி ஏற்படும். சொத்து இழப்புக்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
அல்லாஹ்வின் கோப பார்வை மற்றும் கெட்ட மரணம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். நரகத்தை விட்டும் பாதுகாக்கும் கேடயமாக இருக்கும். எழுபது விதமான கெடுதிகளை விட்டும் பாதுகாக்கும் கேடயமாக இருக்கும்..
107 : ஸகாத் கொடுக்க வேண்டிய அளவு என்ன..?
சொத்தில் நூற்றுக்கு இரண்டரை சதவீதம் கொடுக்க வேண்டும்..
108 : ஸகாத்துக்கு நிய்யத் வைப்பது எப்படி...?
ஸகாத் கொடுக்கும் முன்னர் நிய்யத் வைப்பது வாஜிபாகும்.
ஸகாத் கொடுக்கும் முன்பு நான் இதனை ஸகாத் ஆக கொடுக்கிறேன் என்று உள்ளத்தால் நினைத்து நிய்யத் செய்தல் வேண்டும். நிய்யத் செய்யவில்லை என்றால் ஸகாத் நிறைவேறாது...
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....