ரமளான் வினா விடை பாகம் 22
புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_22
101 :ஸகாத் என்றால் என்ன?
இஸ்லாத்தின் ஐந்து பிரதான கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். இது மூன்றாவது கடமை. பொருள் வசதியுடையவர்கள் வருடம் ஒரு தடவை நூற்றுக்கு இரண்டரை ரூபாய் வீதம் வசதியற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும். இது கட்டாய கடமை.
102 : ஸகாத் கடமையாவதற்குரிய ஷர்த்துக்கள் என்ன?
1. முஸ்லிமாக இருத்தல்.
2. அடிமையாக இருக்காமல் சுதந்திரமானவனாக இருத்தல்.
3. தனக்கு சொந்தமா இருத்தல்.
4. ஸகாத்து நிர்ணயிக்கப்பட்ட அளவை அடைந்திருத்தல்.
5. தானியம், கனிவர்க்கங்கள் அல்லாதவைகளில் ஒருவருடம் பூர்த்தியாகி இருத்தல்.
103 : ஸகாத்து பெற தகுதியுடையோர் யார்?
ஸகாத்து பெற தகுதியானவர்கள் எட்டு கூட்டத்தார்களாகும்.
1. பக்கீர் – எவ்வித வசதியும் இல்லாமல் ஜீவியம் கழிப்பவர்.
2. மிஸ்கீன் – சொற்பமாய் கிடைப்பவன்.
3. ஸகாத்துடைய தொகையை வசூலிப்பவர்.
4. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்.
5. நிபந்தனையுடன் உரிமைச்சீட்டு எழுதி கொடுக்கப்பட்ட அடிமை.
6. கடன் பட்டவர், கடனை தீர்க்க வழி இல்லாதவர்.
7. இஸ்லாமிய மார்க்கத்திற்காக புனித யுத்தம் செய்பவர்.
8. பிரயாணத்தில் இருப்பவர்.
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....