ரமளான் வினா விடை பாகம் 24
புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_24...
109 : ஸகாத் ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டுமா...?
ஆம்.. ஸகாத் ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும்...
110 : மாற்று மதத்தவர்களுக்கு ஸகாத் கொடுக்க முடியுமா...?
முடியாது...
111 : நிஸாப் என்றால் என்ன?
ஒரு மனிதருக்கு ஜகாத் கடமையாகும் பொருளின் ‘அளவிற்கு’ நிஸாப் என்று கூறப்படும். ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தினி நிஸாப் உண்டு.
112 : பொருள்களில் ஜகாத் கடமையாகும் நிபந்தனைகள் என்ன?
1. பொருள் நிஸாபுடைய அளவை எத்தியிருக்க வேண்டும்.
2. அந்த பொருள் தனக்குரியதாக இருக்க வேண்டும்.
3. தனது தேவைகள் போக நிஸாப் அதிகப்படியானதாக இருக்க வேண்டும்.
4. கடன் இருக்கக் கூடாது.
113 : வருடம் என்பது சூரியக் கணக்கின் படியா? சந்திரக் கணக்கின் படியா?
சந்திரக் கணக்கின் படிதான் ஜகாத் கடமையாகும். (சூரியக் கணக்கின் படி ஜகாத் கொடுப்பது சரியல்ல)
அதே போல் நேரம் வந்தவுடன் ஜக்காத்தை நிறைவேற்றுவதும் வாஜிபாகும். தேவையன்றி பிற்படுத்துவது குற்றமாகும்.
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....