கல்விக்கு வயது தடையில்லை
#கல்விக்கு_வயது_தடையில்லை.
இஸ்லாமிய வரலாற்றில் தன் இளமை பருவத்தில் மார்க்க கல்வி கற்க இயலாதவர்கள் பிறகு தங்கள் இளைமை பருவம் முடிந்த பிறகும், காலம் பலகடந்தும் கூட மார்க்க கல்வியின் மோகத்தால் படித்து மிகப்பெரிய அறிஞர்களாக மாறிய வரலாறு ஏராளமாக இருக்கின்றன.
அந்த அடிப்படையில் நேற்று தமிழகத்தில் நம்மை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் நடந்தேறியது... ஆம்..
மேலப்பாளையத்தைச் சார்ந்த
மௌலவி.பேராசிரியர்.
P.K #௮பூபக்கர் m.com.m.phil.௮வர்கள் சதக்கதுல்லாஹ் ௮ப்பா கல்லூரியில் வணிகவியல் துறையில் தலைவராக பணி நிறைவு செய்த பிறகு மாா்க்க கல்வியின் தாகத்தால் மேலப்பாளையம் ௨ஸ்மானியா மதரஸாவில் சேர்ந்து ஆலிம் ஸனது பெற்ற ௮ற்புதமான காட்சி
துஆ செய்யுங்கள்.
கல்விக்கு_வயது_இல்லை ௭ன்பதை நிரூபித்து இருக்கிறாா்கள்.
அல்ஹம்து_லில்லாஹ்..
அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் பறக்கத்தான அறிவு ஞானங்களையும் வழங்கி அருள்புரிவானாக!..
தகவல் பகிர்வு :
M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி...