இன்றைய வெள்ளி மேடையின் சிறு பகுதி
இன்றைய_வெள்ளி_மேடையின் சிறுபகுதி
மீலாது விழா இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை நமது பகுதிகளில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
பெரும்பாலான பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை இரவு மெளலூது சபைகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும்.
அல்லாஹ் நமது அமல்களை ஏற்றுக் கொள்வானாக!
முஹம்மது நபி (ﷺ) அவர்கள் மீது கொள்ளும் அன்பின் பொருட்டு நமது ஈமானை அல்லாஹ் பரிபூரணமாக்கித் தருவானாக!
عن عبدالله بن هشام رضي الله عنه قال: كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب، فقال له عمر: يا رسول الله، لأنت أحب إليَّ من كل شيء إلا من نفسي! فقال النبي صلى الله عليه وسلم: ((لا والذي نفسي بيده، حتى أكون أحب إليك من نفسك))، فقال له عمر: فإنه الآن والله لأنت أحب إلي من نفسي، فقال النبي صلى الله عليه وسلم: ((الآن يا عمر))؛ رواه البخاري
பெருமானாரின் மீது கொண்ட நேசத்தை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்றுதான் மீலாது, மெளலூது விழாக்கள்.
முஸ்லிம் சமூகத்தின் இதயத்துடிப்போடு இணைந்து விட்ட பெருவிழாக்கள்.
ரபீஉல் அவ்வல் பிறக்கிற போது இந்த விழாக்களை பழி கூறுவதற்காக சிலர் காத்திருப்பார்கள். அவர்களது வயிற்றுப் பிழைப்புக்கான வேலை அது.
மெளலூது ஓதிச் சம்பாதிப்பவர்களை விட இப்போது அதிகமாக சம்பாதிப்பவர்கள் அவர்கள் தான்.
முஹம்மது நபி (ﷺ) வெறும் ஒரு தபால் காரர்தான் என்று சொன்னவர்கள் பிற்காலத்தில் முஹம்மது ஒரு மாமனிதர் என்று பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அது தான் பெருமானாரின் அற்புத வெளிப்பாடு.
இதற்குப் பெயர்தான் மெளலூது.
மவ்லூத், மீலாத் என்ற வார்த்தைக்கு பிறப்பு என்று பொருள்.
முஸ்லிம்களின் சமூக வழக்கில் அதன் கருத்து என்ன வென்றால் முஹம்மது நபி (ﷺ)அவர்களின் பிறப்பின் சிறப்பை அவர்களது அருமை, பெருமைகளை கூறுவது என்பதேயாகும்.
மெளலூது, மீலாதுக்கு எதிரானவர்கள் இப்போது பெருமானாரின் பெருமைகளை இந்த கொரோனோ காலத்தில் கூட ஆன் லைன் வழியாக வேணும் பேசியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
சிலர் பெருமானாரின் பெருமைகளை பேசுவதை கூட வஞ்சகமாக செய்கிறார்கள். மக்களின் கவனத்தை மீலாதிலிருந்து திசை திருப்ப முயற்சிக் கின்றனர்.
மெளலூது, மீலாது நிகழ்ச்சிகள் பெருமானாரின் முழு பெருமையையும் பேசுகின்றன.
ஆனால் இவர்களோ பெருமானாரைப் பற்றி நுனிப்புல் மேய்ந்து ஓரு சில சிறப்புக்களை மட்டுமே பேசுவர்.
அதிலும் குறிப்பாக அவர்களுக்கு எது சிறப்பாக தெரிகிறதோ அதை மட்டுமே பேசுவர்.
பெருமானாரின் மறைமுக ஆன்மீக அந்தரங்க பெருமைகளை பேசமாட்டார்கள்.
நாம் பெருமானாரை முழு அளவில் புரிந்து ஏற்று செயல்பட வேண்டு.
உண்மை முஸ்லிம்கள் வேடதாரிகளை ஒரு ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு நாம் நமது கலாச்சாரத்தை தொடரவேண்டும்.
முஹம்மது நபி (ﷺ) அவர்களை நேசிப்பதும் அந்த நேசத்தை உண்மையாக வெளிப்படுத்துவதும் தீனின் ஆணிவேராகும்.
தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி....
#மீள்_பதிவு....