இந்த எழுத்தாளருக்கு நிகர் யார்...?
இஸ்லாமிய வரலாறு

இந்த எழுத்தாளருக்கு நிகர் யார்...?

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இந்த எழுத்தாளருக்கு
நிகரானவர்_யார்...?

கோடம்புழா உஸ்தாதை குறித்து தான் சொல்கிறேன்.
முஸ்லிம் இந்தியாவின் எழுத்து துறையின் வரலாற்றில் ஒரு தனித்துவமான மேதை
கலமுல் இஸ்லாம் என்ற பெயரில் புகழடைந்த அப்துரஹ்மான் பாவா அல்மலபாரி என்ற கோடம்புழா
பாவா முஸ்லியார் தான் என்பதை
வாதிடப் போகிறேன்

கருத்து வேறுபாடுகள் வரவேற்கப்படுகின்றன.
31 தொகுதிகளைக் கொண்ட அவரது தலைசிறந்த படைப்பான
#தைஸீருல்_ஜலாலைனியின்
இறுதித் தொகுதியின் வெளியீடும்,
மேற்படி #முப்பத்தொரு தொகுதிகளின் பிரதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர்களுக்கு சமர்ப்பணமும்
இன்று கோடம்புழா வாதி இர்ஃபானில் நடைப்பெற்று வருகின்றது.
அப்போது இந்தப் பெரிய அதிசயத்தைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றியது.

வரலாற்றில் நம்மை வியப்பில் ஆழ்த்திய
பல எழுத்தாளர்கள் இஸ்லாமிய உலகில் கடந்து சென்றுள்ளார்கள்.
பலவிதமான தலைப்புகளாலும்,
நூற்களின் எண்ணிக்கையாலும்
இமாம் கஸாலி,
இமாம் சுயூத்தி போன்றோர்
நம்மை வியக்க வைத்துள்ளனர்.

நவீன உலகில் இத்தகைய பிரமிப்பை ஏற்படுத்திய இஸ்லாமிய அறிஞர்கள் யார்?
இந்தியாவைப் பற்றி பேசுவோம்.
அபுல் ஹசன் அலி நத்வியும்
நவாப் சித்தீக் ஹசன் கானும் தான் எழுதப்பட்ட காலத்தையும்,
பலதரப்பட்ட
தலைப்புகளையும்,
எழுதப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டாலே
அரபு மொழியில் எழுதுவதில் முஸ்லிம் அறிஞர்கள் முன்னணியில் இருப்பதாகத் தோன்றியது.

இந்தியாவில் பிறந்து எமனில் வளர்ந்த முர்தலா சபீதி மற்றொரு குறிப்பிடத்தக்கவர். அவரது 40 தொகுதிகள் கொண்ட
தாஜுல் அரூஸ்
நம்மை பிரமிக்க வைக்கும்.
அப்துல் ஹய்யி ஹஸனியின் நுஸ்ஹத்துல் கவாதிர் எட்டு தொகுதிகளைக் கொண்ட ஒரு பெரிய வரலாற்றுப் படைப்பாகும்.
அதை ஒரு அறிவு களஞ்சியம் என்று சொல்லலாம்.
ஆனால், வரலாற்றைத் தாண்டிய அவரிடம் புத்தகங்கள் குறைவு...

கேரளாவில் மக்தூம்களும் காஜிமார்களும்
பல புத்தகங்களை எழுதியுள்ளனர்.
அசல் தன்மை கொண்டும்
அவை உருவாக்கிய மிகப்பெரிய தாக்கத்தை கொண்டும் அவைகள் பிரபலமானது.
அந்தப் புத்தகங்கள் கேரள முஸ்லிம் சமுதாயத்தை வடிவமைத்தவை என்று சொல்லலாம்.
ஆனால்
அவர்களில் யாரும் இவ்வளவு பெரிய தஃப்ஸீர் இயற்றவில்லை.
இதுபோன்ற பல்வேறு தலைப்புகளில்
கடந்து சென்றதில்லை.
தஃப்சீர் துறையில் குறிப்பிடப்பட வேண்டிய மாபெரும் மனிதர் பானூர் தங்கள்.
அழகான அரபு மொழியில் அவர் எழுதிய தஃப்சீர்
10 தொகுதிகள் உள்ளன.
மற்று விஷயங்களில் நூற்கள் குறைவுதான்
அந்த மகான்கள் அனைவரும் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்று விட்டனர்..

இந்திய வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் இஸ்லாமிய விஷயங்களைக் குறித்து அரபி மொழியில் அதிக பக்கங்கள் எழுதிய
மிகவும் அதிகமான தலைப்புகளை கையாண்ட இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் அறிஞரே
பார்க்க வேண்டுமெனில் இன்று நீங்கள் கோடம்புழாவிற்கு வாருங்கள்.

இந்த எழுத்தாளருக்கு இன்னும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
மலையாளம் மற்றும் அரபு மொழிகளில் சுமார் 150 நூல்களை எழுதியுள்ள இந்த எளிமை மனிதர் இதுவரை ராயல்டியாக ஒரு பைசா கூட வாங்கவில்லை என்பது
நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்!
கடுமையான உடல்நிலை
கோளாறுக்கு மத்தியில் தான் தனது 15,000 பக்கங்கள் கொண்ட தலைசிறந்த படைப்பை எழுதி முடித்தார்.

நூற்களின் ஹார்ட் டிஸ்க் பிரதிகளை நேரடியாகப் படித்து பேனாவால் எழுதிக் குறிப்பெடுத்து நூற்கள் எழுதப்படுகின்றன. ஆப்புகள், காப்பி, பேஸ்ட் மற்றும் பிற கணினி உதவிகளைப் பயன்படுத்தாமல் துல்லியமான, மிகக் கவனமான எழுத்துக்கள்.! எழுதிய நூற்கள் ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்குப் பலமுறை இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. எனினும், விக்கிபீடியாவில் இந்த அறிவுசால் அற்புதத்தைப் பற்றி அரபியில் ஒரு வார்த்தை கூட இல்லை! அறிமுகம் இல்லாத சில வலைப் பதிவுகளில் வந்த இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளில் மட்டுமே அப்துர்ரஹ்மான் பாவா அல்மலபாரி என்ற பேரறிஞரைக் குறித்து சிறு குறிப்புகள் உள்ளன.
மலையாளத்தில் அவர்களைப் பற்றி சிறிய சில விவரங்கள் இருப்பதை மறுக்கவில்லை. உஸ்தாத் அவர்களின் ஆழிய ஞானத்தைப் பயன்படுத்தும் சீடர்களும், கேரள ஸுன்னி சமூகமும் இந்த அறிவுப் பெருமரத்தின் பெயரையும், புகழையும் வானளாவ உயர்த்த வேண்டும், உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த வேண்டும்.

தமிழில்:M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி.