சரித்திர சம்பவமாக திகழ இருக்கும் மாபெரும் கண்டன பேரணி

சரித்திர சம்பவமாக திகழ இருக்கும் மாபெரும் கண்டன பேரணி

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

புதிய வரலாற்று சம்பவமாக திகழ இருக்கும் மாபெரும் பேரணி...

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம்
கலூர் மைதானத்தில்
மே 4ஆம் தேதி மாலை சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்தும் #வக்ஃப்_பாதுகாப்பு
#மகா_பேரணியின் இறுதி
கட்ட பணிகள் நிறைவடைந்து விட்டன..

கலூர் காஜி டி.எஸ் சலாஹுத்தீன் புகாரி தங்கள் அவர்களின் பிரார்த்தனையுடன் தொடங்கும் நிகழ்ச்சி சமஸ்த மத்திய முஷாவர உறுப்பினர் ஐ.பி.உஸ்மான் ஃபைஸி
தலைமையில் சமஸ்த தலைவர் ஸெய்யிதுல் உலமா, ஸெய்யித் முஹம்மது ஜிஃப்ரி முத்துக்கோயா தங்கள் அவர்கள் பொதுக்கூட்ட நிகழ்வை துவக்கி வைக்கிறார்.

கேரள முஸ்லிம் ஜமாத் பொதுச்செயலாளர் பத்ருஸ்ஸாதாத் ஸெய்யித் இப்ராஹிம் கலீல் அல் புகாரி தங்கள் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் தென்கேரள ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் ஷைகுனா தொடியூர் முஹம்மது குஞ்ஞி மௌலவி வாழ்த்துரை வழங்க, மாநில கேரள ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் ஹுஜ்ஜத்துல் உலமா மௌலானா நஜீப் மௌலவி மம்பாடு பேருரையாற்றுகிறார்.

மேலும், முக்கிய பேச்சாளர்களான
ஷுஐபுல் ஹைதமி,
முஹம்மது குஞ்ஞு ஸகாபி,
ஜுனைத் கடக்கல்,
பஷீர் வஹபி ஆகியோர் பேசவுள்ளனர்.

கேரள முஸ்லிம் ஜமாஅத் எர்ணாகுளம் மாவட்ட பொதுச்செயலாளர் வி.எச்.அலி தாரிமி வரவேற்புரையும், எஸ்.ஒய்.எஸ்.
மாநில பொருளாளர் ஏ.எம்.பரீத் சாஹிப் நன்றியுரையும் நிகழ்த்துவர்

தகவல் :
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி