ஜுனைதுல் பக்தாதி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வில் நடந்த அழகிய வரலாறு
கவலைப்படாதீர்கள்..
நிச்சயமாக உங்களுக்கு_நற்கூலி
உண்டு....
ஜுனைதுல் பக்தாதி (ரஹ்)
அவர்களின் வரலாற்றில் ஒரு அற்புதமான நிகழ்வு உண்டு,
அவர் ஹஜ் செய்த போது டமாஸ்கஸை சேர்ந்த செருப்பு வியாபாரி ஷரீப் என்பவரின் ஹஜ் தான் முதன்மையாக அங்கீகரிக்கப்பட்டது என்று அவருக்கு இல்ஹாமின் வழியாக சொல்லப்பட்டது.
ஹஜ் முடிந்த பிறகு ஜுனைதுல் பக்தாதி டமாஸ்கஸுக்கு அந்த ஷரீபை தேடிச் சென்று சந்தித்தார்.
நீங்கள் ஹஜ்ஜுக்கு வந்தீர்களா
என்று விசாரித்தார்.
அப்போது அதிர்ச்சிரகரமான்
ஒரு தகவலை அவர் சொன்னார்.
நான் ஹஜ்ஜுக்கு வரலாம் என்று நினைத்திருந் தேன் ஆனால் வர முடியவில்லை என்றார்.
ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்த ஜுனைதுல் பக்தாதி என்ன நடந்தது என்று விசாரித்தார்.
செருப்பு வியாபாரி ஷரீப் சொன்னார். நான் ஹஜ்ஜுக்காக பணம் சேர்த்து வைத்திருந்தேன்.
இந்த ஆண்டு பணம் சேர்ந்து விட்டது. நான் தயாரானேன்.
ஒரு நாள் என மகன் அழுது கொண்டு வீட்டுக்கு வந்தான்.
பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் இறைச்சி சாப்பிடுகிறார்கள்.
எனக்கு தராமல் துரத்தி விட்டர்கள்
என்று அழுதான்
ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதை விசாரிக்க நான் சென்றேன்.
அப்போது அவர்கள் கண்ணீர் மல்க நாங்கள் வியாபாரத்தில் நஷ்டமடைந்து விட்டோம்.
பல நாட்களாக உண்ண உணவே கிடைக்காமல் பட்டிணியா இருந்தோம். எங்கே பசியால் இறந்து போவோமோ என்று பயந்து கொண்டிருந்த போது ஒரு இறந்த ஆடு எங்களுக்கு கிடைத்தது. உயிரக் காப்பாற்றிக் கொள்ள இதை சாப்பிடலாம் என்று மார்க்கம் அனுமதிப்பதால் அதை தான் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் உங்களது மகனுக்கு ஹராம் என்பதால் அவரை துரத்தி விட்டோம் என்றனர்.
என் பக்கத்து வீட்டுக் கார்ர்களை இந்த நிலையில் விட்டு விட்டு நான் ஹஜ்ஜு செய்ய விரும்ப வில்லை. எனவே ஹஜ்ஜுக்காக வைத்திருந்த பணத்தை அந்த ஏழைகளுக்கு கொடுத்து விட்டேன். அதனால் என்னால் இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வரமுடியவில்லை என்று அவர் கூறினார்
ஜுனைதுல் பக்தாதி கூறினார். அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்யட்டும்.
உங்களுடைய ஹஜ்ஜு சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டது என்று எனக்கு சொல்லப்பட்டதன் காரணத்தை இப்போது நான் அறிந்து கொண்டேன் என்று கூறினார்
எனவே ஹஜ்ஜுக்காக எல்லா நிலையிலும் தயாராகி ஹஜ்ஜுக்கு செல்ல முடியாதவர்கள் கவலை பட வேண்டியதில்லை.
அவர்களது மனோ உணர்வை அல்லாஹ் மிக நன்கு அறிந்தவன் .