அஹ்லு பைத்திற்கு அடைக்கலம் கொடுத்த காரணமாக சுவனம் சென்ற நபர்

அஹ்லு பைத்திற்கு அடைக்கலம் கொடுத்த காரணமாக சுவனம் சென்ற நபர்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#அஹ்லு_பைத்திற்கு_அடைக்கலம் #கொடுத்த_காரணமாக_சுவனம்
#பெற்ற_நபர்......

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவள் தமது பிள்ளைகளை வளர்ப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் வெளியூருக்கு போய் அங்குள்ள பணக்கார முஸ்லிமிடம், தமது பரம்பரையைப் பற்றியும் தமது குடும்பச் சிரமங்களை பற்றியும் எடுத்துரைத்து, உதவி கேட்டாள். அதற்கு அவர், "நீ அஹ்லு பைத்தைச் சேர்ந்த பெண் என்பதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்டார். அதற்கு அவள் எதையும் சொல்ல முடியாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

பிறகு அவள் ஒரு நெருப்பு வணங்கியிடம் சென்று தம் பரம்பரையைப் பற்றியும் தமது குடும்ப வறுமையைப் பற்றியும் எடுத்துரைத்தார். உடனே, அந்த மனிதர் அந்தப் பெண்ணின் வார்த்தையை நம்பி அவளையும் அவளின் குழந்தைகளையும் தமது வீட்டில் தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

அந்த பணக்கார முஸ்லிம் அன்றிரவு "மறுமை நாள் வந்துவிட்டது. அப்போது நபியவர்களையும் அவர்களுக்கு அருகில் ஒரு மாளிகை இருக்கிறது. அந்த மனிதர் நபியவர்களை நோக்கி, "நாயகமே! இந்த மாளிகை யாருக்குரியது?" என்று கேட்டார். நபியவர்கள், "ஒரு முஸ்லிமுக்குரியது" என்றார்கள். அப்போது அவர் "நாயகமே! நானும் ஒரு முஸ்லிம்தான்" என்று கூறினார். உடனே நபியவர்கள், "நீ முஸ்லிம் என்பதற்கு ஆதாரம் என்ன?” என்று கேட்டார்கள். அப்போது அவர் பதறியவராக கண்விழித்தார்.

பிறகு அவர் அந்த ஏழைக் குடும்பத்தினரைத் தேடினார். இறுதியாக, அவர்கள் ஒரு நெருப்புவணங்கியின் வீட்டில் இருப்பதாக கேள்விப்பட்டு, அங்கே சென்று அந்த நெருப்புவணங்கியிடம், "உமக்கு ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன். இவர்களை என்னிடம் ஒப்படைத்துவிடு! இவர்களை நான் நல்லமுறையில் கவனித்துக் கொள்கிறேன்" என்று கெஞ்சினார்.

அதற்கு நெருப்பு வணங்கி, "முடியாது" என்று கூறிவிட்டு, நேற்று இவர்கள் என் வீட்டிற்கு வந்தபோதே நானும் எனது குடும்பமும் இஸ்லாத்தில் இணைந்துவிட்டோம். நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அதில் நபியவர்களும் அவர்களுக்கு அருகில் ஒரு மாளிகையும் இருந்தது. அப்போது நான் நபியவர்களிடம், "இந்த மாளிகை யாருக்குரியது?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "நீ என்னுடைய குடும்பத்தினரை கண்ணியப்படுத்தியதால் இந்த மாளிகை உமக்குரியது தான் என்று கூறினார்கள்" என்ற செய்தியை அவர் எடுத்துரைத்தார். நூல்:- அஸ்ஸவாஜிர், ஸஹீஹ் வஸாயா ரசூல் 2/137

தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி....