தன் மாணவருக்கு பிரமாண்ட ஹஜ் பெருநாள் அன்பளிப்பு வழங்கிய ஆசிரியர்
*#தன்_மாணவனுக்கு_பிரமாண்ட_ஹஜ் #பெருநாள்_பரிசு_வழங்கிய_ஆசிரியர்...*
மஃதின் அகாடமி மாணவர் #ஜலாலுதீன் அதனியின் அற்புதமான சாதனைகளை குறித்து நாம் ஏற்கனவே இந்த
பக்கத்தில் பகிர்ந்தது
உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இறைவன் கொடுத்த விதியை ஏற்று (அவருக்கு கண்பார்வை கிடையாது) இருளில் அறிவின் ஒளியை ஏற்றிய மேதை.
ஜலாலுத்தீன் அதனி அரபி, ஆங்கிலம், மலையாளம், ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு மொழிகளை கற்று சரளமாக பேசும் திறமையை வளர்த்தவர்...
மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கு பயின்று வருகிறார்.
அரபி எழுத்துக்களை படிக்கத் தெரியாமல் மஃதின் அகாடமிக்கு வந்தவர் அங்கிருந்து இஸ்லாமிய ஆய்வுகளில் பிஜி செய்து அரபி இலக்கியத்தில் J.R.F._ம் பெற்றார்...
கண் பார்வை இழந்த காரணத்தால் ஒரு மூலையில் முடங்கிடாது தன் கடின முயற்சியால் பல இலக்கை எட்டிய தன் அன்பு மாணவர் ஜலாலுதீன் அதனிக்கு ஒரு பிரம்மாண்டமான பெருநாள் பரிசை உஸ்தாது அவர்கள் வழங்கினார்கள்...
இதற்காக ஒரு தனவந்தரிடம் அனுகி தனது கோரிக்கை சொன்னபோது மிக்க மகிழ்ச்சியுடன் மனமுவந்து பரிசு வழங்க அவர் தயாரானார்...
தடாகம் அறக்கட்டளை தலைவர் குஞ்சுமுஹம்மது ஹாஜி ஸ்பான்சர் செய்த ரூ .8 லட்சம் மதிப்புள்ள ஸ்விஃப்ட் காரை இந்த ஹஜ் பெருநாள்தினம் எனது அன்புச்சீடர் ஜலாலுதீன் அதானிக்கு வழங்கிது மிக பெரிய மகிழ்ச்சியான தருணமாகவே பார்க்கிறேன் என ஆசிரியர் கூறுகிறார்..
தனது அன்பு மனைவி நுசைபாவுடன் இன்னும் பல புதிய சாதனைகளை அடைய இந்த பரிசு உங்கள் இருவரையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன் என மாணவரை ஆசிர்வதித்து காரின் சாவியை அவரிடம் வழங்கினார்...
அல்லாஹ் ஆசிரியருக்கும், மாணவருக்கும், பரிசு வழங்க நல்லுதவி புரிந்த நல்லுள்ளங்களுக்கும் எல்லாவித நலன்களையும் வழங்கி அருள்புரிவானாக!!!!.
தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி...