என் அன்பான மாணவர்களுடன் நான்
#என்_அன்பான_மாணவர்களுடன்_நான்
✍️அஸ்ஸெய்யித்_இப்ராகிமுல்_கலீல் புகாரி..
மஃதின் அகாடமியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சங்கம் மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
36_ வருட என் ஆசிரிய வாழ்க்கையில் அன்பான மாணவர்களுடன் தாயகமுற்றத்தில் ஒன்றாக இருப்பது என் வாழ்வின் நிகரில்லா மற்றும் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றாக இருக்கும்.
அவர்கள் தங்களது கல்வி கற்ற பழைய நாட்களின் அனுபவங்களையும், நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில்
இந்த சங்கமத்தில் கலந்து கொள்ள இயலாமல் சீக்கிரமாகவே இவ்வுலகை விட்டு விடைபெற்று சென்ற நண்பர்களை நினைத்து கண்கள் கலங்கி இருப்பார்கள் .
இன்ஷாஅல்லாஹ் மறுமையில் அனைவருடனும் சங்கமிப்போம்....
36_வருட தர்சு வாழ்க்கை என்பது
மஃதின் அகாடமியின் வளர்ச்சியில்
ஒரு மைல்கல்.
118 மாணவர்களுடன் தொடங்கிய இந்த நிறுவனம் 25 வயதிற்குள் அடையும் நிலையில் வளர்ந்து விரிவடைந்து இருக்கிறது..
அல்ஹம்துலில்லாஹ்.
அந்த முன்னேற்றத்தில் தியாகம் செய்து என்னோடு இணைந்த அன்பான மாணவ செல்வங்களுக்கு நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் அடக்கி விட முடியாது..
சங்கமத்தில் இப்னு அதயில்லாஹி சிக்கந்தரி (ரலி) அவர்களின் ஹிகம் கிதாபை எளியவனான நான் தர்ஸ் நடத்தினேன்.
ஹிக்மத்துகளின் என்சைக்ளோபீடியாவான இந்தப் புத்தகம் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஞானத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கி கூறினேன்..
சேவைத் துறையில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைப்பதற்க்காக அசோசியேஷன் ஆஃப் மஃதின் அலும்னி நெட்வொர்க் என்ற சங்கத்தையும் (AMAN) இந்நிகழ்ச்சியில் வைத்து உருவாக்கப்பட்டது..
இக்குழுவின் கீழ் கல்வி மற்றும் தொண்டு சேவைகளில் புதிய திட்டங்களும் தொடங்கப்பட்டன.
அறிஞர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என பல்வேறு துறைகளில் சேவையாற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது..
நன்மையின் பக்கம் இருந்து கொண்டு வரும் தலைமுறைக்கு அறிவு மற்றும் சேவை ஒளியைப் பிரகாசிக்க வல்லோன் அல்லாஹ் அவர்களுக்கு வலிமையை ஏற்படுத்துவானாக...
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி..
7598769505