மஃதின் அகாதமி குறித்து டாக்டர் ஜாகீர் ஹுசைன் அவர்கள்
மஃதின் அகாதமி

மஃதின் அகாதமி குறித்து டாக்டர் ஜாகீர் ஹுசைன் அவர்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கேரளா மஅதின் அகாடமியில் மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்களின் பன்மொழித் திறன் மெய்ச்சிலிர்க்க வைக்கிறது.

நேற்று என் முனைவர் பட்ட ஆய்வு மாணவரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மலப்புறம் பொத்தன்தானிக்குச் சென்றிருந்தபோது மஅதின் அகாடமி க்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

1997இல் அல்லாமா சய்யித் இப்ராஹிம் அல்கலீல் அல்புகாரி பாகவி அவர்களால் மலப்புறம் மேல்முறியில் தொடங்கப்பட்டதுதான் மஅதின் அகாடமி.

இன்று 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கி சிறப்பான கல்விப்பணியைச் செய்துவருகிறது இந்த அகாடமி.

பள்ளிக்கல்வி, உயர்க் கல்வி, பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பல சமயங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு பயில்கிறார்கள்.

நூலகர்கள் உதவியாளர்கள் எவருடைய உதவியும் இல்லாமல் மாணவர்கள் தாங்களாகவே நூல்களைத் தேடி நூல்களை எடுத்துக்கொள்ளும் நவீன தொழிற் நுட்பம் இங்குள்ள நூலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனாதைகள் இல்லம், மாற்றுத் திறனாளிகள் இல்லம் உள்ளிட்ட பல அமைப்புகளும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி நிலையங்களும் இங்கு செயல்படுகின்றன.

500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு இஸ்லாமிய இறையியல் கல்வி பயில்கிறார்கள். முழுக்க முழுக்க அரபு மொழியிலேயே உரையாடல் நிகழ்த்தும் மாணவர்களுக்கான அரபிக் கல்வி வளாகம் மாணவர்களின் அரபு மொழித் திறனை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அரபுத் துறையிலும், இறையியல் துறையிலும் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் உரையாடினேன்.

நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் அரபு, ஆங்கிலம், சீனம், ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்சு ஆகிய ஐந்து மொழிகளில் உரை நிகழ்த்தியது உள்ளபடியே ஆனந்தமாக இருந்தது.

இங்கு பட்டம் பெற்ற பல மாணவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக் கழகங்களில் அரபுத் துறையில் முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்கிறார்கள். உலகிலுள்ள பல கல்வி நிலையங்களில் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

மஅதின் அகாடமி மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு மகிழ்ச்சியாய் அமைந்தது.