ரமளான் வினா விடை பாகம்.. 8
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_8
36 : நோன்பு யார் மீது கடமை?
ஒருவர் மீது நோன்பு கடைமையாவதற்கு பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும்.
(1) முஸ்லிமாக இருத்தல்.
(2) பருவ வயதை அடைந்திருதல்.
(3) சித்த சுவாதீனமுள்ளவராக இருத்தல்.
(4) நோன்பு நோற்க சக்தியுடையவராக இருத்தல்.
(5) பெண்கள் மாத தீட்டு, பிரசவ தீட்டில் இருந்து பரிசுத்தமாக இருத்தல் வேண்டும்.
(6) தான் வசிக்கும் ஊரில் இருத்தல் (அதாவது பிரயாணத்தில் இல்லாதிருத்தல்)
37 : ஸஹ்ர் சாப்பிடுவது சுன்னத்தா..?
ஆம்... மிக முக்கியமான சுன்னத்..
நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்..
நீங்கள் ஸஹ்ர் சாப்பிடுங்கள்.. அதில் பறக்கத் இருக்கிறது..
38 : ஸஹ்ர் சாப்பிட மறந்து விட்டால் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படுமா.?
ஸஹ்ர் சாப்பிடுவது முக்கியத்துவம் வாய்ந்த சுன்னத்..
இனி சாப்பிடவில்லை எனிலும் நோன்பு ஏற்றுக் கொள்ளப்படும்...
39 : நோன்பின் நிய்யத்..?
இந்த வருடத்தின் ஃபர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நான் நிய்யத் செய்கிறேன். அல்லாஹ்வுக்காக
40 : நோன்பு திறப்பதின் அழகான ரீதி..?
பேரீச்சம் பழத்தை கொண்டு
நோன்பு திறக்க வேண்டும்.
அது இல்லையெனில் தண்ணீரைக் கொண்டு திறக்க வேண்டும்..
************************************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....