ரமளான் வினா விடை பாகம் 21

ரமளான் வினா விடை பாகம் 21

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_21

96 : நோன்பின் ஃபர்ளுகள் யாவை...?

நோன்பின் பர்ளுகள் இவையாவும்...
👇👇👇

1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்க வேண்டும்.

நிய்யத்: 'நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ளி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா – இந்த வருஷத்து ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன்' என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.

2. நோன்புடைய ஞாபகம் இருப்பததுடனே வேணும் என்றே எந்த பொருளும் உள்ளே சேராமல் பகல் முழுவதும் தடுத்துக் கொள்ள வேண்டும்.

97 : நோன்பின் சுன்னத்துக்கள் யாவை..?

நோன்பின் சுன்னத்துகள்:

1. ஸஹர் செய்வது (ஸஹருடைய நேரமாகிறது இரவுக்கு மேல் ஆரம்பமாகி சுப்ஹு வக்து வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் முடிகிறது)

2. பஜ்ரு உதயமாவதை பயப்படாமல் இருக்கும் காலமெல்லாம் ஸஹரை பிற்படுத்துவது.

3. சூரியன் மறைந்தது உறுதியாகிவிட்டால் உடனடியாக நோன்பு திறப்பதின் மீது விரைந்து கொள்வது.

4. மூன்று பேரீத்தம்பழம் அல்லது மூன்று திராட்சை பழம் அல்லது மூன்று மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது.

5. நோன்பு திறந்தவுடன் 'அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வ அலைக்க தவக்கல்து வஅலா ரிஜ்கிக அப்தர்து, பஃதக்ப்பல் மின்னீ'- இறைவா! உனக்காக நோன்பு வைத்தேன். உன்னையே நம்பிக்கை வைத்தேன். உன்னுடைய ரிஸ்கின் மீதே நோன்பு திறந்தேன். எனது நோன்பை நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று துஆ ஓதுவது.

6. மற்றவர்களுக்கும் நோன்பு திறக்க கொடுப்பது.

7. ஹைலு நிபாஸ், ஜனாபத் போன்றவற்றை விட்டும் சுத்தமாவதற்காக பஜ்ருக்கு முன்னால் குளிப்'பது.

8. பகல் நேரத்தில் ஆகாரத்தின் மீது ஆசை கொள்வதை விட்டும், வாசனைப் பொருட்களை நுகர்வதை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வது.

9. ரமலான் பிந்திய பத்தில் அதிகமாக ஸதகா கொடுப்பதும், தன் குடும்பத்தின் மீது விசாலமாக செலவு செய்வதும், சொந்தக்காரர்கள் அக்கம்பக்கத்தவர்கள் மீது உபகாரம் செய்வதும் சுன்னத்தாகும்.

10. குர்ஆனை அதிகமாக ஓதுவது.

11. அதிகமாக இபாதத்து செய்வது.

12. ரமலான் மாதம் பிந்திய பத்தில் இஃதிகாப் இருப்பது கண்டிப்பான சுன்னத்தாகும்.

98 : நோன்பின் மக்ரூஹ்கள் யாவை..?

நோன்பின்மக்ரூஹ்கள் இவையாகும்.. 👇👇

1. ஹைலு, ஜனாபத் குளிப்பை பஜ்ரு உதயமாகும்வரை பிற்படுத்துவது.

2. ஆகாரப் பொருள்களை ருசி பார்ப்பது.

3. பகல் முழுவதும் வாய் மூடி இருப்பது.

4. பகல் முழுவதும் வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.

.5.உளு செய்யும்போது வாய், மூக்குக்கு தண்ணீரை அளவு கடந்து செலுத்துவது.

6. லுஹருக்குப் பின்னால் பல் துலக்குவது.

99 : நோன்பை முறிக்கும் காரியங்கள் யாவை..?

: நோன்பை முறிக்கும் காரியங்கள் இவையாகும்... 👇👇👇

1. தான் நோன்பு என்று தெரிந்து கொண்டு உடல் உறவு கொள்வது.

2. வேண்டுமென்றே விந்தை வெளிப்படுத்துவது.

3. வேண்டுமென்றே வாந்தி எடுப்பது.

4. காரல் போன்றவை வாயின் எல்லைக்கு வந்தபின் விழுங்குவது.

5. நோன்பு என்ற உணர்வுடன் ஏதேனும் ஒரு வஸ்துவை உள்ளே செலுத்துவது.(வாயில் ஊறும் உமிழ்நீரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதால் நோன்பு முறியாது)

6. நோன்பு வைத்துக் கொண்டு நீரில் முங்கி குளிப்பதால் வாய், மூக்கு போன்ற ஓட்டைகளில் தண்ணீர் செல்லுபடி ஆகுவது.

7. ஹைலு, நிபாஸ், மதமாற்றம், பைத்தியம், பகல் முழுவதும் மயக்கம் போன்றவைகள் ஏற்படுவது.

100 : நோன்பின் பலனை கெடுக்கும் காரியங்கள் யாவை...?

நோன்பின் பலனை கெடுக்கும் காரியங்கள் இவையாகும்..👇👇👇

1. பொய் சொல்வது

2. புறம் பேசுவது.

3. கோள் சொல்வது

4. இட்டுக் கட்டுவது.

5. பொய் சாட்சி சொல்வது.

6. பிறரை ஏசுவது.

*****************************

இன்ஷா அல்லாஹ்
தொடரும்...

வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....