யாராவது அழுதீர்களா

யாராவது அழுதீர்களா

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

யாராவது அழுதீர்களா..

இமாம் ஷாபிஈ (ரலி) அவர்களின் ஒரு முக்கியமான மாணவர்தான் கண்ணியத்திற்குரிய இமாம் புவைத்தீ (ரஹ்) அவர்கள்.அன்றைய ஆட்சியாளர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நான் மரணித்தால் என் கையில் விலங்கிடப்பட்டிருக்கும் சங்கிலியை அகற்றாமல் தன்னை அடக்க வேண்டுமென்று வஸிய்யத் செய்திருந்தார்கள்.

வெள்ளிக்கிழமை தினம் வந்தால் காலையிலேயே குளித்து, நறு மணம் புரட்டி, உடைகளிலிருந்து நல்ல உடையை தேர்ந்தெடுத்து உடுத்து மகான் அவர்கள் சிறைச்சாலையின் வாசல் அருகே வந்து நிற்பார்கள்.ஜூம்ஆக்கு பாங்கு கொடுக்கும் வரை நின்று கொண்டே இருப்பார்கள். பாங்கின் சத்தம் கேட்டவுன் கயவர்கள் தன்னே கைது செய்து சிறையில் தடுத்து நிறுத்தி வைத்து ள்ளதால் தனக்கு ஜூம்ஆவில் பங்கு பெற முடியவில்லை என்று சொல்லி தன் கவலையை அல்லாஹ்விடம் சொல்லி அழுவார்கள்.பிறகு சிறைச்சாலைக்குள்ளே சென்று விடுவார்கள்.

இன்று உலக முஸ்லிம்களுக்கு ஜூம்ஆவுக்கு ஒன்று சேர இயலாத நிலை எல்லா இடத்திலும் நிலை கொள்கிறது.

இந்த மாதிரி நிலை இமாம் புவைத்தீ போன்ற சில நபருக்கோ அல்லது ஒரு ஊர் மக்களுக்கோ அல்லது பெரும்பான்மை மக்களுக்கோ ஏற்படாலாம் அந்த நேரத்தில் மார்க்க சட்டப்படி இறையில்லங்களுக்கு வந்து இபாதத் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை ஆனால் இபாதத்துகளைப்பற்றி சதா நேரமும் சிந்திப்பவர்கள், எந்நேரமும் பள்ளிவாசலோடு தொடர்புடையவர்களை பொறுத்தவரை அழாமல் இருக்க முடியாது.இதை நான் சும்மா சொல்லவில்லை.புவைத்தீ இமாமை போன்ற நபர்களும் நமக்கு மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

## அஸ்ஸலாமு அலைக்க யா ஷஹ்ற ரமளான்## என்று சொல்லி பள்ளிவாசல் மிம்பரில் வைத்து இமாம்கள் ரமளானின் கடைசி வெள்ளிக்கிழமை ரமளானை வழியனுப்பி வைக்கும் போது அங்கே குழுமிருக்கும் பயபக்தியுள்ள பாமரர்களின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் ஒழுகி கொண்டிருக்கும் இன்று போல் மார்க்கம் சம்பந்தமான பெரிய விவரங்களை செய்திகளோ அறிவோ அவர்களுக்கு இல்லை.
ஆனால் அவர்களின் கண்ணீரின் விளைவாக உலகம் பல பேரழிவிலிருந்து விடுதலை பெற போதுமானதாக இருந்தது.

எனவே யாராவது அழுதீர்களா என சும்மா விளையாட்டுக்காகவோ அல்லது யாரையாவது உணர்த்துவதற்க்காகவோ கேட்கவில்லை.

இன்னும் நல்ல இறைபக்தர்களை ஈன்றடுக்க இந்த உம்மத்திற்க்கு அல்லாஹ் அருள்புரியவானாக

வெகு சீக்கிரத்தில்ம இந்த நெருக்கடி நிலையிலிருந்து எங்களை காப்பாற்றி விடு ரஹ்மானே

உன் (ரஹ்மத்தை& பரகத்தை பெற்றுதரும்) உன் வீட்டை ( பள்ளிவாசல்களை) விரைவாக திறப்பாயாக

தமிழாக்கம்
M.சிராஜூத்தீன் அஹ்ஸனி