ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள்
#ஸெய்யித்தாஹிருல்_அஹ்தல்_தங்ஙள்!
மகா மனிதராக சமூக மக்களால் போற்றப்படும் ஒரு பெயர்!
தென்னிந்திய கல்வி முன்னேற்றத்திற்கு வலு சேர்த்த ஒரு தலைமைப் பீடம்.
கல்வி மற்றும் சமூகத் தொண்டுகளுக்கு உன்னதமான எடுத்துக்காட்டுகளை உருவாக்கிய ஒரு சிறந்த குரு.
கல்வி, கலாச்சாரம், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த ஒரு பகுதியை தனது கர்ம மண்டலமாகத் தேர்வு செய்த தாஹிர் தங்கள் அவர்களின் மனத் துணிவு, இன்றைக்கு #புத்திகை மற்றும் சுற்றுப் புறங்களில் காணப்படும் முன்னேற்றத்துக்கான அடித்தளம்.
தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின் மகத்தான கனவுகளின் நனவு #முஹிம்மாத்துல்_முஸ்லிமீன்_கல்வி #மையம்.
#முஹிம்மாத் ஒரு கல்வி நிறுவனம் என்பதை விட, நன்மையை விரும்பும் அனைத்து மக்களுக்குமான நம்பிக்கையின்
கலங்கரை விளக்கு.
1992 ஆம் ஆண்டில், அனாதைகளின் கண்ணீர் துடைத்திடத் தொடங்கப்பட்ட யத்தீம் கானாவிலிருந்து ஆரம்பித்த இந்த நிறுவனம், இப்போது ஆன்மீகத்தையும், நவீன கல்வியையும் ஒரு சேர இணைக்கும் ஒரு சிறந்த கல்வி வளாகமாக மாறியுள்ளது.
அஹ்தல் தங்ஙள் அவர்களின் தலைமையின் கீழ் முழு சமூகமும் அணி திரண்டது
முன்னேற்றப் பாதையில் நடந்துச் செல்வதற்காக அஹ்தல் தங்ஙள் அவர்கள் அந்த சமூகத்தின் கரம் பிடித்து வழி நடத்தினார்கள்.
அவர்கள் நன்கொடைகளுடனும், நேர்ச்சைகளுடனும் முஹிம்மாத்தை நோக்கி வந்தனர்.
தேவைகள் நிறைவேறியதன் மூலம் மீண்டும் மீண்டும் அவர்கள் முஹிம்மாத்துக்கு வருகை தந்தனர்.
நேர்ச்சை செய்த எதுவும் வீண் போகாது என்ற நம்பிக்கையில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதனால் அவர்களின் வாழ்நாளில் பெரும் செழிப்பை அல்லாஹ் அருள் பாலித்தான்.
அமைதியான குடும்ப மற்றும் வாழ்க்கைச் சூழல், நல்லதொரு வேலை, பெரும் கஷ்டங்கள், கொடிய நோய்களிலிருந்து விடுதலை ஆகியன முஹிம்மாத் வழங்கிய மகத்தான சேவைகள்.
30 கல்வி நிறுவனங்கள், 4000+ மாணவர்கள், 300 ஊழியர்கள், 1000+ மாணவிகள்,
10000+ முன்னாள் மாணவர்கள்,
1 லட்சம் பயனாளிகள் என முஹிம்மாத் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் சேவை செய்து வருகிறது.
நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கான விரிவான ஆலோசனைகளையும், கனவுகளையும் நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது,
செப்டம்பர் 02, 2006 (ஷ-ஃபான் பிறை 10) அன்று, ஷைகுனா ஸெய்யியத் தாஹிர் அஹ்தல் தங்ஙள் உலகிலிருந்து விடைபெற்றுச் சென்றார்கள்.
அவர்கள் நட்டு, தண்ணீர் ஊற்றி, வளர்த்த முஹிம்மாத்தின் வாசலில் இன்றும் நம்மை வரவேற்கிறார்கள்.
திருக்குர்ஆன் மற்றும் அறிவின் உன்னத மந்திரங்களை செவியேற்றுக் கொண்டு தங்கள் உஸ்தாத் அவர்கள் முஹிம்மாத் கல்வி வளாக முற்றத்தில் ஓய்வெடுக்கிறார்கள்.
மரணத்திற்குப் பிறகும் முஹிம்மாத்துக்கும், சமூகத்துக்கும் தம் ஆன்மீக இருப்பால் தங்ஙள் அவர்கள் வலு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதரவற்றவர்களுக்குத் துணையாகவும், தங்குமிடமாகவும், அறிவுத் தாகம் கொண்டவர்களுக்கு அடைக்கலமாகவும், சிரமப்படுபவர்களுக்கு ஆறுதலின் மையமாகவும், முஹிம்மாத்தின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவும் அவர்களின் ஆன்மீக இருப்பு உள்ளது.
முஹிம்மாத்தின் செலவுகள் மாதத்திற்கு
70 லட்ச ரூபாய்க்கும் அதிகம்.
மாணவர்களின் உணவுச் செலவுக்கு உருவாக்கப்பட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் 3333 குவின்டால் அரிசி
சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அன்புக்குரியவர்களின் நேசமிகு
ஆதரவு தேவை.
கல்லூரி மற்றும் ஹிஃப்ழ் மாணவர்களின் பட்டமளிப்பு விழா, ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின் 20வது உரூஸ் முபாரக் ஆகியவை 2026 ஜனவரி 28, 29, 30, 31 (புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை) ஆகிய தினங்களில் முஹிம்மத்தில் நடைபெறும்.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த ஆன்மீகக் மாநாட்டிற்கும், முஹிம்மாத் பட்டமளிப்பு விழாவிற்கும் உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
அனைவரின் மனமார்ந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.
அன்புடன் கண்வீனர், வரவேற்புக் குழு...
தகவல்: M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி...