Ma'din Academy chairman. அஸ்ஸெய்யித் இப்ராஹிமுல் கலீல் புகாரி தங்கள் அவர்கள் அல்ஹாஜ் ஷப்பீர் அலி ஹழ்ரத் அவர்கள் குறித்து எழுதுகிறார்கள்.
Ma'din Academy chairman. அஸ்ஸெய்யித் இப்ராஹிமுல் கலீல் புகாரி தங்கள் அவர்கள் அல்ஹாஜ் ஷப்பீர் அலி ஹழ்ரத் அவர்கள் குறித்து எழுதுகிறார்கள்.
வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் பிரபல பேராசிரியரும் தமிழ்பேசும் உலகில் புகழ் வாய்ந்த மார்க்க பேரரிஞரும், சிறந்த சொற்பொழிவாளருமான அல்ஹாஜ் ஷப்பீர் அலி ஹழ்ரத் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள்.
மார்க்க பணிக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர்கள், முதுமையின் இயலாமையிலும் ஒரு இளைஞனை போன்று மார்க்கம் சொல்ல கம்பீரமாக எழுந்து நின்றவர்கள் உஸ்தாது அவர்கள்.
கடந்த ஆண்டு டிசம்பரில் madin ல் வைத்து நடைபெற்ற பாக்கவிகள் சங்கமத்தில் உஸ்தாது அவர்கள் தலைமை தாங்கினார்கள். நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த நேரத்தில் இன்ஷா அல்லாஹ் நான் நிச்சயம் வருவேன் என்று சொன்னார்கள்.முதுமையின் காரணமாக நிகழ்ச்சிக்கு வரமாட்டார் கள் என நினைத்திருந்தோம்.
சுப்ஹானல்லாஹ் நேராக நிமிர்ந்து நிற்ப்பதற்கு கஷ்டமாக இருந்தும் கூட நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து நிகழ்ச்சிக்கு ஷைகுனா அவர்கள் வருகை புரிந்ததை நினைத்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
மாநாட்டில் பல மணி நேரங்கள் கம்பீரமான உரை நிகழ்த்தினார்கள்.
நவீன காலத்தில்
தஃவா பணியின் முக்கியத்துவம், தஃவாவில் நாம் கடைபிடிக்க வேண்டிய அனுகுமுறைகள், பழைய கால உலமாக்கள் மேற்கொண்ட தஃவா பணிகள் போன்றவைப்பற்றி மிக விரிவாக பல வரலாற்று நிகழ்வுகளை சொல்லி மிக சிறந்த அறிவுரைகளை வழங்கினார்கள்.
ஹழ்ரத் அவர்கள் அன்று பேசிய உரையை பிறகு பல தடவை நான் கேட்டேன்.எவ்வளவு அழகான அறிவுரைகள்.
என் கல்லூரி பணியாளர்கள்,மாணவர்களிடமும் அந்த பேச்சை கேளுங்கள் என்று சொன்னேன். பல மாணவர்கள் அவை அனைத்தையும் டைரியில் எழுதி பாதுகாத்து வைத்துள்ளனர்.
நான் சொல்ல வருவது ஒரு அறிவு கடலாக திகழ்ந்தவர்கள்தான் நம் ஷைகுனா அவர்கள். முன் மாதிரிகளை மட்டுமே காட்டி தந்த அழகிய வாழ்க்கை. இதுப்போன்ற உலமாக்களை காண்பது அரிது. ஹழ்ரத் அவர்களின் வஃபாத் நமக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அல்லாஹ் உஸ்தாத் அவர்களின் தரஜாவை உயர்த்தி அருள்பாலிப்பானாக.
அன்னாரின் பெயரில் ஜனாஸா தொழுகை நடத்தி அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழில்.M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.