ஏராளமான இளம் உலமாக்களின் குரு

ஏராளமான இளம் உலமாக்களின் குரு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ஏராளமான_இளம்
#உலமாக்களின்_குரு...

Dr. சி.கே அப்துர் ரஹ்மான் ஃபைசி ஹழ்ரத் அவர்கள்...
நான்கு மத்ஹபுகளிலும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் வல்லமை பெற்ற மார்க்க அறிஞரும், சூஃபியும், துவக்க கால ஸமஸ்த முஷாவரா உறுப்பினருமான மவ்லவி சி.கே முஹைதீன் பாகவி ஹஸ்ரத் அவர்களின் இரண்டாவது புதல்வரும், பணிவின் சிகரவுமான
சி.கே சயீது முஸ்லியார் மற்றும்
பெரிம்பலம் ஷைக் யூஸுஃபுல் ஃபழ்ஃபரியின் மகன் குஞ்ஞு முஹம்மது முஸ்லியாரின் மகள் ஆயிஷா ஹஜ்ஜும்மாவின்
மகனாக 1970_ம் ஆண்டில்
Dr. சி.கே அப்துர் ரஹ்மான் ஃபைசி ஹழ்ரத் அவர்கள் பிறந்தார்கள்..

10 ஆம் வகுப்பு படிப்பு முடிந்ததும் கடமேரி ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியில் எட்டு வருட மார்க்க கல்வி மற்றும் உலகக் கல்வி கற்றார்கள்.

கோட்டுமல பாப்பு முஸ்லியார்,
அரீக்கல் அப்துர் ரஹ்மான் முஸ்லியார், அரீக்கல் இப்ராஹீம் முஸ்லியார்,
எம்.டி அப்துல்லாஹ் முஸ்லியார் (தற்போது இவர் ஸமஸ்த கேரளா கல்வி வாரியத்தின் செயலாளர்) செய்யிதுல் உலமா ஜிஃப்ரி முத்துக்கோயா தங்கள் (தற்போது இவர் ஸமஸ்த கேரளா ஜம்மியத்துல் உலமாவின் தலைவர்) முஹைதீன் முஸ்லியார் போன்ற மேதைகளிடம் ரஹ்மானியா அரபிக் கல்லூரியில் கல்வி கற்றார்கள்.

பின்னர் இரண்டு வருடம் பட்டிக்காடு ஜாமிஆ நூரிய்யா அரபிக் கல்லூரியில் உயர் கல்வி பயின்றார்கள்.

காளம்பாடி முஹம்மது முஸ்லியார் , குமரம்புத்தூர்
ஏ.பி முஹம்மது முஸ்லியார், கருவாரக்குன்டு
கெ.கெ உஸ்தாத் ,
ஷைகுல் ஜாமிஆ ஆலிக்குட்டி முஸ்லியார் ( தற்போது இவர் ஸமஸ்தயின் செயலாளர்)
கோட்டுமல முஹைதீன் முஸ்லியார் போன்ற மேதைகளிடம் ஜாமிஆ நூரிய்யாவில் பாடம் பயின்றார்கள்..

1995 ஆம் ஆண்டு
முதல் தரவரிசையில் ஃபைசி பட்டம் பெற்றார்கள்.

எகிப்தில் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்திலிருந்து பயிற்சி பட்டமும்,
காலிகட் பல்கலைக் கழகத்திலிருந்து
MA மலையாளம் மற்றும் அரபியும் நிறைவு செய்தார்கள்.

தற்போது (கேரளா பள்ளிதர்ஸ் பாடத்திட்டமும்,
அரபு மொழியின் வளர்ச்சியில் பள்ளிதர்ஸ் ஆற்றிய சேவையும்) என்ற தலைப்பில் காலிகட் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திரூர் துஞ்ஞன் கல்லூரியின் அரபுத் துறையில் Phd நிறைவு செய்தார்கள்

ஐந்து வருடம் ஏலம்குளம் ஜும்ஆ பள்ளிவாசலிலும் பின்னர் இருபத்தி ஐந்து வருடங்களாக ஆலத்தூர்படி (முன்னோர்கள் பொடியாடு பள்ளி என்று அழைக்கும்) பள்ளியில் தர்ஸ் நடத்தி வருகின்றார்கள்

சுதந்திர போராட்ட வீரர் ஆலி முஸ்லியார், பாட்டனார் சி.கே முஹைதீன் ஹாஜி, அப்துர் ரஹ்மான் ஃபல்ஃபரி , குமரம்புத்தூர் ஏ பி அப்துர் ரஹ்மான் முஸ்லியார்,
கெ.கெ ஹஸ்ரத் (ஸமஸ்தயின் முன்னாள் தலைவர்) உஸ்தாதுல் அஸாதீத் ஒ.கெ ஸைனுத்தீன் முஸ்லியார்,
கிடங்கழி அப்துர் ரஹ்மான் முஸ்லியார், பொன்மள ஃபரீத் முஸ்லியார்,
கெ ஸி ஜமாலுதீன் முஸ்லியார்,
அன்வர் அப்துல்லாஹ் ஃபல்ஃபரி போன்ற அறிஞர் மாமேதைகளின் ஞானத்தின் ஒலிகள் ஜொலித்த ஆலத்தூர்படி ஜுமுஆ மஸ்ஜிதில் இரண்டு சகாப்தங்களுக்கு மேல்
தர்ஸ் நடத்துவதற்கு பாக்கியம் கிடைப்பது மிகப்பெரிய தவ்ஃபீக் தான்.

இறுநூருக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தர்ஸ் சேவை இஸ்லாமிய பாரம்பரிய பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டு இருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்...

2002 ஆம் ஆண்டு முதல் மூன்றோ நான்கோ வருடங்களை தவிர்த்து எல்லா வருடமும் உயர் கல்விக்காக தர்ஸ் மாணவர்கள் பட்டிக்காடு ஜாமிஆ நூரிய்யா அரபிக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள்.
பல்வேறு வருடங்களில் ஜாமிஆ இறுதித் தேர்வில் ஒன்று, இரண்டு, மூன்று தரவரிசைகள் தர்ஸின் முன்னாள் மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள். (பனிரெண்டு தடவை முதல் தரவரிசையும் நான்கு தடவை இரண்டாம் தரவரிசையும் ஏழு தடவை மூன்றாம் தரவரிசையும்) முப்பது ஆண்டுகள் தர்ஸ் நடத்திய காலத்தில் இது மகத்தான பாக்கியமாகும்.

சக்திக்கு எதிரே பக்தி
குர்ஆன் ஆய்வு மற்றும் குர்ஆன் ஓதுதல்
இஸ்லாமிய நிதி அமைப்பு
ராபிய்யத்து ஸுஃரா (மொழிபெயர்ப்பு)
வாழ்க்கை நாளைக்காக
அரிப்ர முஹைதீன் ஹாஜி
(வாழ்க்கை வரலாறு)
முதலிய மலையாள புத்தகமும்

منهج أهل السنة والجماعة ,
سيرة الشيخ محي الدين الأرفراوي،
حركة التدريس في مساجد مليبار،
مناقب الشيخ المخدوم الثاني

(ஸைனுத்தீன் மக்தூம் தங்கள் அவர்களின் மவ்லிது)
نسيم المدينة
الإنسان الكامل
منحة في محنة
(கவிதை தொகுப்புகள்)
என்கிற அரபு படைப்புகளும்..

முடக்கமில்லாத தர்ஸ் வாழ்க்கைக்கு மத்தியில் கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டதன் விளைவாக இவைகள் அனைத்தும் உஸ்தாத் அவர்களின் கரங்களால் உதித்தவையாகும்.

ஜாமிஆ நூரிய்யா பொன்விழா மாநாட்டில் பல்வேறு துறைகளில் தங்கள் திறனை நிரூபித்த 50 ஃபைசிகளுக்கு கோட்டுமல அபூபக்கர் முஸ்லியார் அவர்களின் பெயரில் நிறுவப்பட்ட விருது வழங்கப்பட்ட போது (தர்ஸ் துறையில் சிறந்த சேவைக்கு) உஸ்தாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

SYS மலப்புறம் மாவட்ட நிர்வாகம் வழங்கும் சிறந்த முதர்ரிஸினுடைய (பேராசிரியர்) ஷிஹாப் தங்கள் விருது (2014) உஸ்தாத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதும் உஸ்தாத் அவர்களின் தர்ஸுக்கு கிடைத்த அங்கீகாரம் தான்.

செம்மாடு தாருல் ஹுதா பல்கலைக்கழகத்தின் தேர்வு வாரிய உறுப்பினராக உஸ்தாத் அவர்கள் சேவை ஆற்றியுள்ளார்கள்.

2001 முதல் ஜாமிஆ : நூரிய்யா அரபிக் மதரசாவின் தேர்வு வாரிய உறுப்பினராக உஸ்தாத் அவர்கள் செயலாற்றி வருகிறார்கள்..

மேலும் உஸ்தாத் அவர்கள் ஸமஸ்த கேந்திர முஷாவரா உறுப்பினராக இருந்து வருகிறார்கள்..

அதுபோலவே ஸமஸ்த மலப்புறம் மாவட்ட முஷாவரா உறுப்பினராகவும் இருந்து வருகிறார்கள்..

ஸமஸ்த கேரளா ஜம்மியத்துல் முதர்ரிஸீன் மலப்பறம் மாவட்ட பொதுச் செயலாளர்,
ஜம்மியத்துல் முதர்ரிஸீன் மாநில துணைச் செயலாளர்,
தேர்வு வாரிய ஒருங்கிணைப்பாளர் ,
SKIMV பொதுக்குழு உறுப்பினர்
(ஸமஸ்த கல்வி வாரியம்)
கடமேரி ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் தேர்வு வாரிய உறுப்பினர் ,
ஜாமிஆ நூரிய்யா அரபிக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் ஒஸ்ஃபோஜன மங்கட மண்டல செயலாளர் ,
கடமேரி ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் ( RAF) தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கும் நேரம் கண்டறிந்து சமூகப் பணி செய்து வருகின்றார்கள்.

சமீபத்தில் "பள்ளிதர்ஸ் பாடத்திட்டமும், கேரளாவில் அரபி மொழி இலக்கியத்தின் பிரச்சாரத்தில் அதன் பங்கும்" என்ற விஷயத்தில் பி .எச்.டி பூர்த்தி செய்து டாக்டர் பட்டம் பெற்றார்கள் .

அல்லாஹ் இன்னும் உஸ்தாத் அவர்கள் பல உயரங்களை அடைய கிருபை செய்வானாக .

உஸ்தாத் அவர்களுக்கு நீண்ட
ஆயுளையும், நிறைவான ஆரோக்கியத்தையும் வழங்கியருள்வானாக..

தமிழில்:Z.#முர்ஷித்_முஸ்லியார்.
திருவிதாங்கோடு..
குமரி மாவட்டம்...