ஷாகுல் ஹமீத் ஷாந்த புரம் உஸ்தாத்
1992 பிப்ரவரி_28 அன்று
AP. உஸ்தாத் அவர்கள் கொடுத்த
3000 ரூபாயுடன் சாந்தபுரம்
#ஷாகுல்_ஹமீது_பாகவி
உஸ்தாத் அவர்கள்
வட இந்தியாவுக்கு
ரயில் ஏறுகிறார்கள்.
கிராமங்கள்,கல்லிகள் மற்றும் நகரங்கள் தாண்டி நிறைய பயணம் செய்தார்கள்.
அங்கே பல இடங்களிலும் பெயர் அளவில் மட்டுமே முஸ்லிம்கள்!! தொழவோ, குர்ஆன் ஓதவோ தெரியாதவர்கள்...
அந்த மக்களை குறித்து விரிவாக ஆய்வு செய்து தலைமையிடம் சாந்தபுரம் ஷாகுல் ஹமீது பாகவி உஸ்தாத் அவர்கள் அறிக்கை சமர்ப்பித்தார்கள்.
அப்போது உல்லால் தங்கள், ஏ.பி.உஸ்தாத், எம்.ஏ.உஸ்தாத்,
மர்கஸ், ஸஅதியா நிறுவனங்கள்,
சுன்னி அமைப்புகளை வட இந்திய உலமாக்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களை கேரளாவுக்கு வரவழைத்தார்.
பயணச் செலவு மற்றும் இதர வேலைகளுக்குப் பணம் இல்லாமல் போனபோது தனது 40 சென்ட்
நிலத்தை விற்றார்.
மீண்டும் வட இந்தியாவுக்குத் ததிரும்பினார்.
1997 இல் இஸ்லாமியக் கல்வி வாரியத்தை உருவாக்கியதில் ஷாகுல் ஹமீது பாகவி சாந்தபுரம் அவர்கள் முக்கியப் பங்காற்றினார்.
நமது இயக்கத்திற்கு இப்போது வட இந்தியாவில் நிறுவனங்கள் உள்ளன. நிறுவனப் பணிகள் யூனிட் தளத்திலிருந்தே செயல்பட்டு வருகிறது.
ஷாகுல் ஹமீது பாகவி ஷாந்தபுரம் உஸ்தாத் அவர்களின் நினைவேந்தல் மற்றும் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு இரு தினங்களுக்கு முன் துபாய் மர்கஸில் வைத்து மிக கம்பீரமாக நடைபெற்றது.
அந்த மாமனிதரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும்,
வட இந்தியாவில் நமது இயக்கத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடங்காத ஆசையில் ஏராளமான பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
வல்லோன் அல்லாஹ் அவர்களது செயல்பாடுகளை அங்கீகரித்து சுவனத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் பாக்கியத்தை வழங்கியருள்வானாக...
*தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.*