ஹஸ்ரத் நிஜாமுதீன் அவ்லியா
#ஹஜ்ரத்_சையத்_நிஜாமுதீன்_அவுலியா..
=================================
கிபி 1238 முதல் 1325 வரை டெல்லியில் வாழ்ந்த ஒரு சூஃபி துறவி தான்
மஹ்பூப் இலாஹி ஹஜ்ரத் சையத் நிஜாமுதீன் அவுலியா...
இவர் இந்தியாவின் முக்கிய சூஃபி பிரிவான சிஷ்டி சில்சிலாவின்
ஷெய்கு ஆவார்..
மம்லுக் மற்றும் கில்ஜி ராஜா வம்சங்கள் டெல்லியை ஆண்டு இருந்த காலம்... மேலும் ஏழைகளின் புகலிடமாக திகழ்ந்த நிஜாமுதீன் அவுலியா அவர்கள் வழங்கிய அன்னதானத்தைக் கண்டு அன்றைய சுல்தான்கள் கூட வியந்தனர் என்பது வரலாறு.
பிரபல சூஃபி சிந்தனையாளரும் சிறந்த கவிஞருமான அமீர் குஸ்ரு, நிஜாமுதீன் அவ்லியாவின் விருப்பமான சீடராவார்.
மதச் சட்டங்கள் அனுமதித்திருந்தால், அமீர் குஸ்ருவை என்னுடன் என் கப்ரில் நல்லடக்கம் செய்திருப்பேன் என்று நிஜாமுதீன் அவ்லியா ஒருமுறை கூறினார்.
அந்த அளவுக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மஹப்பத் வைத்திருந்தார்கள்...
நிஜாமுதீன் அவுலியாவின் மரணத்திற்குப் பிறகு, அந்த இடம் ஹஸ்ரத் நிஜாமுதீன் என்று அழைக்கப்பட்டது.
நிஜாமுதீனில் இரயில் நிலையம் வந்தபோது, அது இடம் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிஜாமுதீனுக்கு ஏராளமான ரயில்கள் வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களில் ஹஸ்ரத் நிஜாமுதீனின் பெயர் ஒலிக்கிறது, டெல்லியைப் பார்க்காதவர்கள் கூட நிஜாமுதீனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.
நிஜாமுத்தீன் அவுலியாவின் தர்கா இன்றும் சாதி, மத வேறுபாடு இல்லாத மக்கள் கூடும் இடமாக உள்ளது.
பயமுறுத்தும் கடவுளைக் கேட்டு அலுத்துப் போனவர்களுக்கு அன்பான கடவுளை அறிமுகப்படுத்தும் அறிவின் சொர்க்க பூமி இது..
சூஃபி இசையின் மாயாஜாலத்தில் மூழ்கியிருக்கும் கவ்வாலி பாடகர்களுக்கும், ரசிப்பவர்களுக்கும்
இது ஒரு சுவன பூமி..
தப்லீக் ஜமாத்துக்கும் நிஜாமுத்தீன் அவுலியாவுக்கும் என்ன தொடர்பு?
கப்பலும் கப்பலண்டிக்கும் (நிலக்கடலை) மத்தியிலுள்ள தொடர்பை போன்று ....
நிஜாமுதீன் அவுலியாவின் சிஷ்டி சூஃபி பாதையும், தப்லீக்கும் இரண்டு நம்பிக்கைகளாகும்...
தப்லீக் மர்கஸ் நிஜாமுதீன் என்று அழைக்கப்படும் ஒரு பரந்த பகுதியில் அவுலியாவின் தர்காவிற்கு செல்லும் வழியில் உள்ளது.
அவ்வளவுதான் தொடர்பு..
வேறு தொடர்பும் இல்லை
-ஆபித் அடிவாரம்
தமிழில்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி