பத்ர் நினைவு தினம்
........*#பத்ர்_நினைவு_தினம்........
ஸஹாபாக்களின் முன்மாதிரியான செயல்...*
பத்ர் ஷுஹதாக்களை நினைவு கூருவது நபித்தோழர்களாலும் கடைப்பிடிக்கப்பட்டது தான் !!.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
ரமளான் பதினேழு பத்ர் தினத்தில் அதிகாலை வேளையில் மக்கள் மஸ்ஜிதுல் குபாயில் பிரத்யேகமாக ஒன்று கூடி இருந்தனர் என்று
ஹிஜ்ரி:30_ ல் மரணமடைந்த தாபிஉகளில் பிரமுகரான மகான் முஹம்மது இப்னு முன்கதிரிலிருந்து ஹாபிழ் இப்னு ஹஜருல் அஸ்கலானி (ரலி) அவர்களின் உஸ்தாதான இமாம் ஸைனுத்தீன் அல் மராக்கி (ரலி) அவர்களும், இமாம் பத்ருத்தீன்
அல் ஐனி (ரலி) போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்களும், இன்னும் பல முன்னோர்களான இமாம்களும் அவர்களது கிதாபுகளில் எழுதியுள்ளனர்.....
✅அதைப் போல நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருள்மறை குர்ஆனை ஓதி கேட்க செய்தவரும், வள்ளல் மஹ்மூத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலிருந்து ஏராளமான நபிமொழிகளை அறிவிப்பு செய்தவரும், மதீனாவின் முஃப்தியும், காரிஉகளின் ஷெய்கும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வஹ்ய் எழுதுபவரும், அன்சாரி நபித்தோழர்களில் ஒருவருமான ஸெய்து இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ரமளான் பதினேழாம் இரவில் சுப்ஹு வரை பிரத்யேகமான நற்காரியங்களை செய்வதில் மூழ்கி சத்தியத்தையும், அசத்தியத்தையும் அல்லாஹ் வேறுபடுத்திக் காட்டி விட்டான் என்று கூறுவார்கள்..
இதை ஹிஜ்ரி 310_ ல் மரணமடைந்த மகான் இப்னு ஜரீருத்தப்ரி (ரஹ்) தன்னுடைய தாரீக்கிலும் மற்று இமாம்களும் இதை அறிவிப்பு செய்ததைப் பார்க்க முடியும்.....
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
எனவே பத்ரு தினத்தை சிறப்பு வாய்ந்ததாகக் கருதும் நற்செயல் மற்றும் காலங்காலமாக நடந்து வரும் ஒன்று என்பதை இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன.
மகத்தான பத்ர் ஸஹாபாக்களின் பொருட்டால் வல்லோன் அல்லாஹ் நமது எல்லா பாவங்களையும் மன்னித்து, புனித ரமழான் மாதம் ஆதரவாக சாட்சியமளிப்பவர்களில் நம்மையும் சேர்த்துக் கொள்வானாக.
*தகவல் பகிர்வு: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி...*