பணம் பதவி அதிகாரமும் கலீஃபாக்களின் வாழ்க்கையும்.......
பணம்_பதவி_அதிகாரமும் கலீஃபாக்களின்_வாழ்க்கையும்.
வரலாற்றில் ஒரு கலீஃபா மரணித்தபோது, அவரது சேமிப்பு வெறும் 17_தீனார்கள் மட்டுமே இருந்தது.
அதில் 5 தீனார் கஃபன் துணிக்கும், 2 தீனார்
கப்ர் குழித் தோண்டுவதற்கும் மீதமுள்ள 10 தீனார்களை 11 குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணைவிகளுக்கு விநியோகித்த சம்பவம் பற்றி படித்த ஞாபகம் என் நினைவுக்கு வந்தது.
ஒருவேளை உமர் இப்னு அப்துல் அஜீஸை (ரலி) விட இதயத்தை தொட்ட சரித்திர மனிதர்கள் குறைவாகவே இருப்பார்கள்.
அவரது பேணுதலான வாழ்க்கை வாழ நம் மனம் ஏங்குகிறது. அதற்கும் மேலாக, இந்த பெரிய மனிதர்களால் கடைபிடிக்கப்பட்ட வாழ்க்கை அளவுகோலுகள் மிகுந்த கவலையைக் தந்திருக்கிறது.
இப்படி வாழ்ந்தவர்களின் கடைசி லட்சியத்திர்க்காத்தானே நாமும் ஏங்குகிறோம்!.
இவற்றையெல்லாம் எழுத கூட தகுதி இல்லையென்றாலும் இவற்றை பகிராமல் இருக்க முடியவில்லை.
கலீஃபா ஒருமுறை குளிர்காலத்தில் வுளூஃ செய்ய சூடான நீரைக் கொண்டு வந்த தோழரான முசாஹீமிடம் கேட்டார்கள்..
பொது மக்களுக்காக தயாரிக்கப்பட்ட பொது சமையலறையிலிருந்து தான் இந்த வெண்ணீரைய் கொண்டு வருகிறீர்களா..?
"ஆம், அல்லாஹ் உங்களுக்கு பறக்கத் செய்வானாக! இதைக் கேட்டவுடனேயே, "நீ இவ்வளவு காலமாக அந்த நீரை சூடாக்கி என் வாழ்க்கையை அழித்துவிட்டாயே என்று சொன்னார்கள்.
இவ்வளவு காலமும் தண்ணீரை சூடாக்க எவ்வளவு விறகு தேவை என்பதைக் கண்டுபிடித்து பொதுக் கருவூலத்திற்கு வழங்கியபோதுதான் அவர் நிம்மதியடைந்தார்.
39 வயதில், அவர் கணக்கிட முடியாத வாழ்க்கை அனுபவங்களின் செல்வத்துடன் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
ஆட்சியாளர்கள் பொதுமக்களிடமிருந்து சுரண்டியும், சுருட்டியும் விழுங்கிக் கொண்டிருக்கும் சமகால அரசியல் மக்களின் முதுகில் குத்தும்போது இதையெல்லாம் நாம் எப்படி நினைவில் கொள்ளாமல் இருக்க முடியும்.?
மக்களிடையே நீதியையும் சமாதானத்தையும்
நிலைநாட்ட அதிகாரம் பயன்படுத்தப்பட்டபோது என்றும் நினைவில் கொள்ளத்தக்க ஒரு நல்ல அரசாங்கம் உருவானது.
ஒருமுறை போரிலிருந்து கிடைத்த கனீமத் பொருட்களின் கூட்டத்தில் நிறைய ஆப்பிள்கள் இருந்தன.
கலீஃபாவின் சிறிய மகன் ஒரு ஆப்பிளை எடுத்து சிறிது கடித்தார். இதைக் ஓரக்கண்ணால் பார்த்த கலீஃபா ஓடிவந்து நடுங்கிபோய் நின்றார்.
அவன் வாயில் விரலை வைத்து ஆப்பிள் துண்டுகளை வெளியே எடுத்தார். கண்களில் கண்ணீருடன் சிறிய மகன் அம்மாவிடம் ஓடினான். தேவைப்பட்டால் பயன்படுத்தலாம் என பாதுகாத்து வைத்திருந்த பணத்திலிருந்து கொஞ்சம் எடுத்து அம்மா ஒரு கடையில் இருந்து ஒரு ஆப்பிளை வாங்கி தன் மகனின் ஆசையை நிறைவேற்றினார்.
கலீஃபா வீட்டுக்கு திரும்பிய போது ஆப்பிள்களின் வாசனை!
இந்த விஷயத்தைப் பற்றி சந்தேகத்துடன் மனைவியிடம் விசாரித்தபோது நடந்த அனைத்தையும் பாத்திமா அவரிடம் சொன்னாள். ஒரு தந்தையின் மனம் தனது குழந்தைகளுக்கு கருணையுள்ளதாக இருக்க வேறு என்ன வேண்டும்.
கண்ணீர் மல்க உமர் (ரலி) சொன்னார்கள்.
"கடவுள் மீது சத்தியமாக! நான் என் குழந்தையின் வாயில் கை வைத்து அந்த ஆப்பிள் துண்டுகளை வெளியே எடுத்தபோது,
என் கல்லீரல் பறிக்கப்படுவதைப் போல உணர்ந்தேன்.
ஆனால் என்ன செய்வது, பொது சொத்திலிருந்து இருந்து ஒரு ஆப்பிள் அவன் வயிற்றில் இருப்பதைப்பற்றி நாளை அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை! ”
கலீஃபா ஆன பிறகு அவரது வாழ்க்கை மிகவும் பரிதாபமாக இருந்தது.
செல்வத்தின் உச்சத்திலிருந்து தான் உணர்வுபூர்வமாக இந்த வாழ்க்கையை அவரும், அவரது மனைவியும் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
திராட்சை கொத்து வாங்க ஏதாவது பணம் இருக்கிறதா? என கலீஃபா தனது மனைவியிடம் கேட்ட நிகழ்ச்சி கவிதை வடிவத்தில் மிகவும் பிரபலமான நிகழ்வாகும்..
'உமர் இப்னு' அப்துல்-அஜீஸின் அறைக்குள் அந்த ஊழியர் நுழைந்தார்.
கலீஃபா அவர்கள் விளக்கை ஏற்றி, இரவில் மக்களின் புகார்கள் மற்றும் பிரச்சினைகளின் பதிவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
உடனே கலீஃபா கூறினார்கள்..
“விளக்கை அணைத்துவிட்டு பேசுங்கள்;
பொது நிதியில் இருந்து வரும் எண்ணெய் விளக்கு பொது நோக்கங்களுக்காக தவிர எனது வீட்டுகாரியங்கள் பற்றி பேச பயன்படுத்தக்கூடாது என்று கூறினார்..
வேலைக்காரன் விளக்கை அணைத்து தான் வந்த நோக்கம் பற்றி பேசி முடித்த உடன் கலீஃபா
மீண்டும் விளக்கை ஏற்றினார்.
கோப்புகளை தொடர்ந்து சரிபார்க்கவும் செய்தார்கள்...
கதாநாயகன் முன்னணியில் இருந்து தன் வாழ்க்கையை வழி நடத்திய போது இழந்த செல்வங்களை மீட்க முடிந்தது.
இரண்டே வருடங்களில் ஜகாத் வாங்க ஆளில்லாத வகையில் மறுஉறுவாக்கம் செய்யப்பட்டதையும்
வரலாறு கண்டது.
உறவினர் நியமனங்களும், குடும்ப அரசியலும் முற்றிலுமாக தவிர்க்கப்பட்ட போது உறவினர்களிடமிருந்தே எதிரிகள் உருவாகினர்.
அடிமைகளுக்கு லஞ்சம் கொடுத்து செல்வாக்கு செலுத்தி கலீஃபாவின் உணவில் விஷம் கலந்து மரணபடுக்கையில் தள்ளப்பட்டார்..
கலீஃபாவை சந்திக்க பார்வையாளர்கள் வருகிறார்கள்,
போகிறார்கள். அதே உடையில் கலீஃபாவை பார்த்த ஒருவர் அதைக் குறிப்பிட்டபோது அவரது மனைவி பாத்திமா கூறினார்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
அவருக்கு மாற்றி உடுக்க வேறு ஆடைகள் எதுவும் இல்லை, அவர் அணிந்திருக்கும் உடைகள் மட்டுமே உள்ளன.
ஆடம்பரத்தின் மடித்தட்டில் உல்லாச வாழ்க்கை கொண்டிருந்த உமர் என்ற இளைஞருக்கு அதிகார சிம்மாசனம் வழங்கப்பட்டபோது ஏற்பட்ட மாற்றம் தான் இது.
ஒரு வருடத்திற்கு 40,000 திர்ஹம் செலவழித்த அவர் அதிகாரத்தை கைப்பற்றிய போது ஒரு நாளைக்கு 2 திர்ஹம் மட்டுமே செலவிட்டார்.
நோய்வாய்ப்பட்ட தந்தையின் அருகில் அமர்ந்திருக்கும் குழந்தைகளின் நிலையைப் பார்த்து ஒரு நண்பர் அதிர்ச்சியடைந்து கேட்டார்.
"நீங்கள் உங்கள் குழந்தைகளை ஏழைகளாக ஆக்கியுள்ளீர்களே!.
"என் பிள்ளைகள் பக்தியுள்ளவர்களாகவும்,
நல்லொழுக்கமுள்ள
வர்களாகவும் இருப்பார்களெனில் பின்னர் அல்லாஹ் அவர்களுக்கு உதவுவான்.
அல்லது அவர்கள் பொல்லாதவர்களாக இருப்பார்களெனில் பின்னர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு நான் நிதி உதவி செய்ய முடியாது என்றார்கள்.
மறுமையைப் பற்றி கனவு காணத் தொடங்கிய அந்த மாமனிதர் அமைதிக்குத் திரும்பினார்.
குர்ஆனில் அவருக்கு பிடித்த வசனம் மட்டுமே எப்போதும் அவரது நாக்கில் ஒலித்துக் கொண்டிருந்தது.
"(மிக்க பாக்கியம் பெற்ற)அந்த மறுமையின் வீட்டையோ பூமியில் பெருமையையும் விஷயத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் (சொந்தமாக) ஆக்கிவிடுவோம்.ஏனென்றால் (நல்ல) முடிவு பக்தியுடையவர்களுக்குத்தான்.
புனித குர்ஆன் 28:83.
தகவல்..
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி.