குழந்தைகளுக்கான கொள்கை வரலாறு

குழந்தைகளுக்கான கொள்கை வரலாறு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

குழந்தைகளுக்கான
கொள்கை விளக்க வரலாறு
வினா_விடை....

1: வணக்கம் என்றால் என்ன?

அல்லாஹு விரும்புகிற மற்றும் திருப்தியடைகிற ஒன்று தான் வணக்கம்

2 : வணக்கம் எத்தனை வகைப்படும்?

வணக்கம் பல வகைப்படும்
உதாரணம்: தொழுகை,நோன்பு,ஸக்காத்,
ஹஜ்,திக்ர்,ஸலவாத்,
இஸ்திஃபார்...

3 : எல்லா பாவங்களையும் அல்லாஹு மன்னிப்பானா?

இணை வைத்தலை தவிர அனைத்து பாவங்களையும் அல்லாஹு மன்னிப்பான்..

4 : முவஹ்ஹித் என்றால் யார்?

அல்லாஹுவை மட்டும் வணங்ககூடியவன்.
அல்லாஹுவுக்கு இணை வைக்காதவன்.

5 : முஷ்ரிக் என்றால் யார்?
அல்லாஹு அல்லாதவர்களுக்கு வணக்க வழிபாடுகள் புரிபவன்..

6 : அல்லாஹுவை மட்டும் வணங்குபவனுக்கு கிடைக்கும் பிரதிபலன் என்ன?

சுவனம்...

7 : அல்லாஹுவுக்கு இணை வைப்பவனுக்கு கிடைக்கும் பிரதிபலன் என்ன?

நரகம்...

8 : தவ்ஹீதின் கலிமத்தை கூறு?

லாயிலாஹ இல்லலாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்

9 : நற்காரியங்கள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனை என்ன?

ஈமான்

10 : இஸ்லாமின் அடிப்படை ஆதாரங்கள் எவை?

குர்ஆன், ஹதீஸ்,
இஜ்மாஃ, கியாஸ்*

11 : அக்கீதாவின் இமாம்கள் யாரெல்லாம்?

இமாம் அஷ்அரி,
இமாம் மாத்துரிதி...

12 : நாம் எந்த இமாமின் அக்கீதாவை ஏற்றுக் கொண்டுள்ளோம்?

அஷ்அரி இமாமின் அக்கீதாவை ஏற்றுக் கொண்டுள்ளோம்...

13 : அல்லாஹுவை நம் கண்களால் பார்க்க இயலுமா?

மறுமையில் அல்லாஹு நாடியவர்களுக்கு பார்க்க முடியும்..

14 : அல்லாஹுவை தவிர மறைவான காரியங்களை வேறு யாராவது அறிவார்களா?

அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அறிவித்து கொடுத்தால் அறிவார்கள்..

15 : அல்லாஹ் முதலில் படைத்த மனிதரின் பெயர் என்ன?

ஆதம் நபி (அலை)

16: அல்லாஹ் படைத்த முதல் பெண்மணியின் பெயர் என்ன?

ஹவ்வா பீவி (ரலி)

17 : மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மலக்குமார்களை கூறு?

ஜீப்ரீல்,மீக்காயீல், அஸ்ராயீல், இஸ்ராஃபீல்,முன்கர்,நக்கீர் ,ரக்கீப்,அத்தீத்,மாலிக், ரிழ்வான்,..

18 : கியாம நாளில் வெற்றி பெறும் கூட்டம் எது?

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமா அத்..

19 :நாம் எந்த இமாமின் மத்ஹபை பின்பற்றுகிறோம்?

ஷாபிஈ...

20 : மற்ற மத்ஹபின் இமாம்கள் பெயரை கூறு?

இமாம் அபூ ஹனீஃபா

இமாம் மாலிக்...

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்

ஆக்கம்.
M..சிராஜூத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்.
மைமூன் பப்ளிஷிங்‌ ஹவுஸ்
திருவை.

س: مَا مَعْنَى تَوْحِيدِ اللهِ فِي عِبَادَتِهِ؟
ج: هُوَ عِبَادَةُ اللهِ وَحْدَهُ وَتَرْكُ عِبَادَةِ مَا سِوَاهُ.
س: مَا ضِدُّ التَّوْحِيدِ؟
ج: التَّوْحِيدُ ضِدُّهُ الشِّرْكُ.
س: مَا هُوَ الشِّرْكُ؟
ج: الشِّرْكُ هُوَ عِبَادَةُ كُلِّ مَا سِوَى اللهِ، أَوْ عِبَادَةُ غَيْرِ اللهِ مَعَ اللهِ.
س: مَا هِيَ الْعِبَادَةُ؟
ج: الْعِبَادَةُ هِيَ كُلُّ مَا يُحِبُّهُ اللهُ وَيَرْضَاهُ.
س: مَا هِيَ أَنْوَاعُ الْعِبَادَةِ؟
ج: أَنْوَاعُ الْعِبَادَةِ كَثِيرَةٌ مِنْهَا: الصَّلَاةُ، وَالزَّكَاةُ، وَالصَّوْمُ، وَالْحَجُّ، وَالذِّكْرُ ، وَالدُّعَاءُ.
س: هَلْ يَغْفِرُ اللهُ الذُّنُوبَ جَمِيعًا؟
ج: نَعَمْ، إِنَّ اللهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِلَّا الشِّرْكَ.
س: مَنْ هُوَ الْمُوَحِّدُ؟
ج: الْمُوَحِّدُ هُوَ الَّذِي يَعْبُدُ اللهَ وَحْدَهُ وَلَا يُشْرِكُ بِهِ شَيْئًا.
س: مَنْ هُوَ الْمُشْرِكُ؟
ج: الْمُشْرِكُ هُوَ مَنْ يَعْبُدُ مَا سِوَى اللهِ، أَوْ مَنْ عَبَدَ غَيْرَ اللهِ مَعَ اللهِ.
س: مَا جَزَاءُ مَنْ وَحَّدَ اللهَ فِي عِبَادَتِهِ؟
ج: جَزَاءَهُ أَنْ يُدْخِلَهُ اللهُ الْجَنَّةَ.
س: مَا جَزَاءُ مَنْ أَشْرَكَ بِاللهِ غَيْرَهُ فِي عِبَادَتِهِ؟
ج: جَزَاءُهُ أَنْ يُدْخِلَهُ اللهُ النَّارَ.
س: مَا هِيَ كَلِمَةُ التَّوْحِيدِ؟
ج: كَلِمَةُ التَّوْحِيدِ هِيَ لَا إِلَهَ إِلَّا اللهُ.
س: مَا جَزَاءُ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ؟
ج: جَزَاءُهُ أَنَّهُ يَدْخُلُ الْجَنَّةَ.
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
"مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ مُخْلِصًا دَخَلَ الْجَنَّةَ."