நெஞ்சை பிழியும் மகளின் வஸிய்யத்
நெஞ்சை_பிழியும்_மகளின்
வஸிய்யத்...
#எந்த_நேரத்திலும்_தியாகம் (மரணம்) தேடிவரும் என்பதை உறுதிப்படுத்திய #காஸாவிலுள்ள ஒரு சிறிய மகளின் வஸிய்யத் (உயில்)
ஹலோ....நான் ஹயா
எனது வஸிய்யத் (உயில்) இங்கே நான் எழுதுகிறேன்...
என் கைவசம் இருக்கும் தொகை பணமாக (80) உள்ளது.. இதில்
45 ஷக்கல் உம்மாவுக்கு, ஸீனத்திற்கு 5, ஹாஷிமுக்கு 5, தீதாவுக்கு 5,
சின்னம்மா ஹிபாவுக்கு_5
சின்னம்மா மரியமிற்கு 5,
மாமன் அப்துவுக்கு 5,
சின்னம்மா ஸாராவுக்கு_5
எனது பொம்மைகள் மற்றும் பிற பொருட்கள் என் அன்பு தோழிகளான ஸீனா (தங்கை)
ரீமா, மின்னா, அமல்..ஆகியோருக்கு
என் உடைகள் சின்னத்தா பிள்ளைகளுக்கு
மீதம் இருந்தால் தானம் செய்யுங்கள்.
எனது காலணிகளை ஏழைகளுக்குக் கொடுப்பதற்கு முன் அவற்றைக் கழுவி சுத்தப்படுத்த மறக்க வேண்டாம்..
மகளின் கடைசி வரியை படிக்கும் போது
அழுகை அழுகையாக வருகிறது...
இப்படிப்பட்ட மனம் படைத்த குழந்தைகளை கொன்று குவிக்க இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது...
யா அல்லாஹ்.. நீயே போதுமானவன்
நீயே எங்கள் பாதுகாவலன்...
தகவல்:
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி