ரமளான் சிந்தனைகள் பாகம்_10
விசுவாசிகளின்_உம்மா.
கதீஜா_அம்மையாரின்
நினைவு_தினம்.
ரமளான்_10...
பத்ர் போர் நிறைவடைந்தது..
சிறைபிடிக்கப்பட்டவர்களுடன் முஸ்லிம் இராணுவம் மதீனாவுக்கு அணிவகுத்தது.
சிறைப்பிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக மக்காவிலிருந்து பலர் மீட்கும் பணத்துடன் வந்து கொண்டிருந்தார்கள்.
உமர் இப்னு ரபீயாவும் குழுவில் ஒருவராக நாயகம் (ஸல்) அவர்கள் முன் ஒருவரை மீட்பதற்காக தோன்றினார்.
அவர் தனது ஆடைகளின் கீழ் இருந்து ஒரு பையை எடுத்து புனித நபி (ஸல்) அவர்களிடம் வழங்கினார்.
நாயகம் (ஸல்) அவர்கள் அதை திறந்து பார்க்கும் போது அதில் ஒரு தங்க நெக்லஸ்!.
நாயகத்தின் கண்கள் அதில் பதிந்த மாத்திரத்தில் திருநபியின் இதயத்தில் பழைய கால நினைவுகள் பறந்து கொண்டிருந்தது..
அவர்களின் கண்கள் நிறைந்தன.
என்ன நடக்கிறது?
நபித்தோழர்கள் ஆர்வத்துடன் நாயகத்தை பார்த்தார்கள்.
#ஆம் அது கதீஜா_பீவி அம்மையாரின் நெக்லஸ்.
நபி (ஸல்) அவர்களின் அன்பு மகள் ஜைனப் (ரலி) அவர்களின் திருமணநாளில்
அவரது கழுத்தில் இந்த நெக்லஸைத்தான் நாயகம் அணிவித்தார்கள்..
பத்ர் போரில் சிறைபிடிக்கப்பட்ட தனது கணவர் அபுல் ஆஸினை விடுவிப்பதற்காக ஜைனப் (ரலி) தனது மைத்துனரிடம் இந்த மாலையை கொடுத்து அனுப்பினார்கள்...
திரு நபியால் எப்படி விதும்பாமல் இருக்க முடியும்.. கதீஜா (ரலி) அம்மையார் தானே நாயகத்தின் உயிரே..
வேறு யாருக்கும் முன்பாகவே இஸ்லாத்தில் இணைந்த பெண்மணியல்லவா...அவர்கள்.
"நீங்கள் சம்மதித்தால் இந்த நகையை அதன் உரிமையாளரிடமே திருப்பி ஒப்படைத்து அபுல் ஆஸினை விடுவிக்கலாம்" என்று நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் கூறினார்கள்..
உங்களது விருப்பம்தான் எங்களது விருப்பம்...
"ஆம், அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் அப்படியே செய்கிறோம் என்று ஸஹாபாக்கள் பதிலுரைத்தார்கள்..
அவர்கள் உடனடியாக அபுல் ஆஸினே (ரலி)விடுவித்தனர்.
கதீஜா பீவி அம்மையார் மீதான நாயாகத்தின் அன்பிற்கு பத்ர்
போர் ஒரு நேரடி சான்றாக இருந்தது...
மற்ற நேரங்களில் ஹபீபின் மனம் அவர்களுடனே பயணித்தது..
பலகட்டங்களிலும் நாயகத்தின் உதடுகள் கதீஜா அம்மையாரைக் குறித்தே மொழிந்து கொண்டிருந்தது...
அடிக்கடி ஆட்டைக் அறுத்து கதீஜா அம்மையாரின் தோழிகளுக்கு நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள்..
"கதீஜாவை விட உலகில் உங்களுக்குப் பிரியமானவர்கள் யாரும் இல்லையா?" என்ற ஆயிஷா பீவி அம்மையாரின் கேள்விக்கு பதில் சொல்லும் போது..
ஓ..ஆயிஷா..
என் கதீஜாவை விட மகத்தான எவரையும் அல்லாஹு எனக்கு வழங்கவில்லை..
மக்கள் என்னை நம்ப மறுத்த நேரம் அவர்கள் என்னை நம்பினார்கள்..
மக்கள் என்னை ஏற்றுக் கொள்ள மறுத்த கட்டத்தில் அவர்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள்..
மக்கள் எனக்கு விலக்கு ஏற்படுத்திய வேளையில் அவர் தனது சொத்துக்களையெல்லாம் எனக்கு அர்ப்பணித்தார்கள்..
அவர்கள் மூலம் அல்லாஹ் எனக்கு குழந்தைச் செல்வத்தை வழங்கி கவுரவித்தான்..
#உம்முல்_முஃமினீன்.
இல்லை அவர்களுக்கு நிகர் உலகில் எவருமில்லை..
பரிசுத்த ரமளான் மாதத்தின் #பத்தாம் தினம் திருநபியை துக்கத்திலாழ்த்திவிட்டு கதீஜா அம்மையார் இவ்வுலகிலிருந்து
விடை பெற்றார்கள்..
மண்ணும் விண்ணும் சோகக் கடலான நாள்..
இன்றும் விசுவாசிகள் தங்களது அன்புத் தாயை நினைவு கூறுகிறார்கள்...
அன்புத் தாயை பார்க்க #ஜன்னத்துல் #முஅல்லாவுக்கு செல்கிறார்கள்...
மக்கா மற்றும் மதீனாவிலுள்ள அறிஞர்கள் கதீஜா அம்மையாரின் நினைவுகளை புதுப்பிக்கும் காட்சிகளை சவூதி அரேபியா முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் டாக்டர். #அப்து_யமானி அழகான முறையில் தங்கது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
நுபுவத்தின் நூரை (பிரகாசம்) முன்னரே கண்டவரல்லவா..கதீஜா அம்மையார்..
நபிக்கு அல்லாஹு வழங்கிய தொட்டில்..
இக்ரஃ வசனம் இறங்கிய போது நடுக்கத்துடன் வந்த திருநபியை ஆறுதல்படுத்த அல்லாஹ் தேர்ந்தெடுத்த பெண்மணி...
நபிகளாருக்கு பின்நின்று முதன் முதலாக தொழுவதற்கு பாக்கியம் பெற்ற சீமாட்டி..
முத்துநபியின் கல்லீரல் துண்டுகளான அன்பு குழந்தைகளை பெற்றெடுக்க மகா பாக்கியம் பெற்ற அன்னை..
அஹ்லு பைத்துகளின் ஆதாரம்...
விசுவாசிகளின் அன்புள்ள அம்மா..
இறைவா!! இவர்களின் பொருட்டால் இந்த பாவிகளான எங்களது பாவங்களை மன்னிப்பாயாக!!!
அவர்களது மஸாருக்கு சென்று ஸியாரத் செய்யும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக!
எங்களது ஹலாலான எல்லா விதமான நாட்ட தேட்டங்களையும் நிறைவேற்றி அருள்புரிவாயாக!...
தமிழில்: M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
7598769505