லுக்மான் ஸகாஃபியும் மஃதினும்
மஃதின் அகாதமி

லுக்மான் ஸகாஃபியும் மஃதினும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கேரளாவிலுள்ள ஒரு காம்பஸில் நடைபெறும் ஃபெஸ்டிவலில்
(கலை திருவிழா)#ஸ்பானிஷ்_ஜெர்மன்
மற்றும் #பிரஞ்சு மொழிகளில் நிகழ்ச்சிகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

கடந்த இரண்டு நாட்களாக இதுபோன்ற சில ஆச்சரியங்களுக்கு சாட்சியாக நான் இருக்க நேரிட்டது..
மலப்புரம் மஃதின் ஸ்தாபன மாணவர்களின் ஆண்டு விழாவில்.

இலக்கியம், தத்துவம்
மற்றும் வரலாற்றை அசாதாரணமான முறையில் வரையறுக்கும் இந்த மூன்று மொழிகளையும் தொழில்ரீதியாகப் படிக்கும் பல மாணவர்கள் மஃதினில் உள்ளனர்.

மஃதின் கீழ் உள்ள ஸ்பானிஷ் அகாடமி கேரளாவில் உள்ள ஒரு பிரபலமான வெளிநாட்டு மொழி கற்றல் மையமாகும்.
இந்நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆங்கிலம், அரபு, உருது ஆகிய மொழிகளைத் தவிர்த்து இந்த மூன்று மொழிகளையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பது பெரிய விஷயம்.

மஃதின் நிறுவனர் ஸெய்யித் இப்ராஹிம் கலீலுல் புகாரி அவர்கள் முன்னிலையில் மாணவர்களின் 'இலக்கிய விவாதம்' நடைபெற்றது.
தலைப்பு 'மொழி: வரலாறு, நடைமுறையின் பன்முகத்தன்மை'.

இது மொழி பற்றிய பல்வேறு அவதானிப்புகள் பகிரப்பட்ட ஒரு நிரலாகும்.
மேலும், வரலாற்று இடங்களைப் பற்றிய குறிப்புகள், பலதரப்பட்ட சந்திப்புகள், மொழிபெயர்ப்புகள், ஆங்கிலத்தில் விரிவுரைகள் - அனைத்தும் சிறப்பாக இருந்தன.

அரபு மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு காம்பஸ் தான் மஃதின் அகாதமி.
சரளமாக அரபி பேசும் பல மாணவர்களை நான் பார்த்துள்ளேன்.
நவீன அரபு மொழியின் எழுத்து முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக நண்பர் கூறினார்.
மஃதினில் விருந்தோம்பல் அவசியம் அனுபவிக்க வேண்டிய ஒன்று. விருந்தாளிகள், எவ்வளவு உயர்வானவராக இருந்தாலும் சரி, சாதாரணமாக இருந்தாலும் சரி
மனம் நிறைந்து வெளியேறுவார்கள்.

ஸ்பானிஷ், ஜெர்மன் மற்றும் பிரஞ்சு மொழிகளில் ஒரு மொழியை விரிவாகக் கற்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். எதைத் தேர்ந்தெடுப்பது என்று நான் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கு.
ஸ்பானிஷ் மொழி பயிற்றுவிப்பாளர் மஃதின் முன்னாள் மாணவர் டாக்டர். ஹமீத் ஹுசைனுடனான நீண்ட உரையாடல் உதவியாக இருந்தது.

கலீல் தங்கள், மாணவர்களின் நிகழ்ச்சிகளை மணிக்கணக்கில் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். இப்படித்தான் ஒவ்வொருவருடைய திறமையை தங்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.
அவர்களை வாழ்வில் உயர்த்திக் கொண்டு வருவதற்கு ஊக்கத்தொகை வழங்குவார்கள்.
புதிய வழிகள் திறப்பார்கள்.
மஃதினின் ஒவ்வொரு துடிப்பும் அவர்களின் உன்னிப்பான கவனத்தைக் கொண்டுள்ளது.

ஒரு நிறுவன அதிகாரியாக இருப்பது எப்படி என்பது பற்றி தங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.....

✍️லுக்மான் ஸகாஃபி......

தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.....