முயற்சி வீண் போகவில்லை
மஃதின் அகாதமி

முயற்சி வீண் போகவில்லை

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

டாக்டர் சுபைர் அம்ஜதி...
M.A (Eng), M.A.(German), M.A.(Arabic)
P.hd in German, P.hd in Arabic

உலகக் கல்வியுடன் இணைந்த மார்க்க கல்வி பாடத்திட்டத்தின் படி இயங்கும் மலப்புறம் M'adin Academy உருவாக்கிய பல்லாயிரம் பேரில் சிறப்புக்குரிய சிலரில் இவரும் ஒருவர் என்று ம'அதின் அகாடமி சேர்மன் கலீல் புஹாரி தங்கள் பெருமிதத்துடன் எழுதியுள்ளார்..

மிக எளிய குடும்பத்தில் பிறந்த சுபைர் ஆரம்பக்கல்வி முதல் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு ஒவ்வொரு வகுப்பையும் கடந்தவர்..
ம'அதின் அகாடமியில் பயின்றாலும்
அரபு மொழிப்பாடம் இவருக்கு சிரமமாகவே இருந்தது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஏ+ மதிப்பெண் எடுத்தவர் அரபியில் குறைந்த மதிப்பெண் பெற்றே தேர்ச்சி பெற்றார்.. தொடர்ந்து அங்கேயே +2 படித்து தேர்ச்சி பெற்ற சுபேர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தார்..

முதுகலை ஆங்கில இலக்கியமும் முடித்த சுபைருக்குள் கல்வி தாகம் அதிகரித்து விடா முயற்சியுடன் ஜெர்மன் மொழியில் ஒரு முதுகலை பட்டமும், அரபு மொழியில் ஒரு முதுகலை பட்டமும் பெற்றார்.
கூடவே பல்கலைக்கழக மானியக் குழுவின் JRF ஸ்காலர்ஷிப் உதவியில் ஹைதராபாத் EFLU -
English & Foreign Languages University ல்
அரபியிலும் ஜெர்மன் மொழியிலும் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார்..
சரளமாக அரபி, ஜெர்மன் மொழியில் எழுதவும் பேசவும் திறன் வளர்த்த சுபைர் அம்ஜதி தற்போது உ.பி.யில் அலிகார் பல்கலை ஜெர்மன் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் இருதினங்கள் முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மூன்றாவதாக ஆங்கிலத்தில் டாக்டர் பட்டத்திற்கான ஆய்வு கட்டுரை சமர்ப்பித்துள்ளார்...
மவுலவி சுபைர் அம்ஜதியின் பயிற்சி வகுப்புகள், மோட்டிவேஷன் உரைகள் வேண்டி உலகின் பல கல்வி நிறுவனங்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
இவரது வழிகாட்டலில் மலப்புறம் ம'அதின் அகாடமியில் துவங்கியுள்ள
"ம'அதின் ஜெர்மன் இன்ஸ்டிடியூட்"
மார்க்க கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஜெர்மன் மொழியில் பேச எழுத பயிற்சி வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது .
Colachel Azheem