ஆய்வு (இஜ்திஹாத்)
ஆய்வு (இஜ்திஹாத்)
ஹலாலிற்கும் ஹராமிற்கும் இடையிலான மறைந்த
நிறைய காரியங்கள் இருக்கிறது.
அவைகள் நிறைய ஆட்களுக்குத்தெரியாது.
நுஃமானும் பஷீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து ரிப்போர்ட் செய்யப்பட்ட புகழ்பெற்ற இந்த ஹதீஸின் விளக்கவுரையில் இப்படி
காண முடிகிறது
(நிறைய பேர்களுக்கு தெரியாது) என்ற வாசகத்தின் பொருள் கொஞ்சம் பேருக்குத் தெரியும் என்பதாகும்.
அவர்கள் தான் ஆய்வுக்கு தகுதி வாய்ந்த இமாம்கள் (முஜ்தஹிதுகள்).
அவர்கள் ஆய்வின்
மூலம் ஹலால்,
ஹராம் என்று விளக்குவார்கள்.
(ஷரஹு முஸ்லிம் 11/28, ஃபத்ஹூல்பாரி 1/169)
ஒரு முஜ்தஹிது மதவிஞ்ஞானத்திலும் மொழிவிஞ்ஞானத்திலும் வல்லவர்களாகத் திகழ்ந்திருக்க வேண்டும்.
அரபிமொழியில் அருளப்பெற்ற குர்ஆன், நபிகள் நாதரின் ஹதீஸ் போன்றவைகளில் புத்தியை கிளரி விஷயங்களை தோண்டி எடுப்பதற்கு மொழியின் தேவையைப் பற்றி சொல்ல தேவையில்லை..
அதுபோன்று இலக்கணத்திலும் சொல்லிலக்கணத்திலும், இலக்கியத்திலும், வல்லவர்களாக
திகழ்ந்திருக்க வேண்டும்.
ஹதீஸ்கள் சம்பந்தமாக
நாசிக், மன்சூக்,
ஆம், காஸ், முஜ்மல், முஃபஸ்ஸல், போன்றவைகளையும் அறிந்திருக்க வேண்டும்.
நாம் சொன்ன முஜ்தஹிதுகளின் தகுதிகளில் ஆயிரத்தில் ஒரு துளி இல்லாதவர்கள் தான் ஷாஃபிஈ இமாமை போலுள்ளவர்களை பின்பற்ற தேவையில்லை என்கிறார்கள்.
ஹதீஸ்களை சம்பந்தமாக முக்கியமானவை அதிலே ரிப்போர்ட் செய்பவர்களை பற்றியுள்ள கல்வியே பரந்து விரிந்ததாகும்.
ஹதீஸ்களைப் பற்றியுள்ள கல்வி நூறு கிளைகள் உண்டு.
15 இலட்சம் ஹதீஸ்களில் அறிவிப்பாளர்களின்
வரலாறுகள் தெரிந்திருக்க வேண்டும்.
உதாரணமாக
ஒருவர் ஒரு ஹதீஸை
ரிப்போர்ட் செய்தால்
அந்த ரிப்போர்ட்டரின்
ஆசிரியர் யார்? அவரின் மாணவர் யார்? அவர் நம்பிக்கையானவரா?
அவர் மறதியுள்ளவரா? என்பதைப் பற்றியெல்லாம் அறிந்திருக்க வேண்டும்.
ஒரு ஹதீஸின் வித்தியாசமான அறிவிப்புகளில்
மிகவும் புகழ்பெற்றது.
பெறாதது,
நிறைய பேர் அறிவித்த ஹதீஸ் (முதவாத்திர்)
சில பேர் மட்டுமே கேட்டு வந்தது. (ஆஹாத்),
மக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டது (மஷ்ஹுர்)
இந்த ஹதீஸின் சுருங்கிய ரிப்போர்ட்,
நீண்ட ரிப்போர்ட் நம்பிக்கையாளரின் ரிப்போர்ட்டுக்கு எதிராக வருகின்ற ஒன்றுபட்ட ரிப்போர்ட்டுகள்.
இப்படி ஹதீஸ் சம்பந்தமாக உள்ள கல்வியை எழுதினால் நீண்டுக்கொண்டே போகும்.
இவைகளில் ஒன்றுமே தெரியாத நிலையில் ஆராய்ச்சிக்கு முற்பட்டால் அவனுடைய கல்வியின் குறைவால் மக்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவார்கள் என்று சொல்லித்தரத் தேவையில்லை.
இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) முஜ்தஹிதின் தகுதிகள் சம்பந்தமாக விவரிப்பதைப் பார்ப்போம்
முஜ்தஹிது:
குர்ஆன், சுன்னத்துகளிலிருந்து விதிகளோடு முற்பட்டவையும்,
காஸ் (குறிப்பாக சொன்னவை),
ஆம் (பொதுவாக சொன்னவை),
முஜ்மல்
(நிபந்தனைகள் இல்லாமல் சொன்னவை),
முபய்யின் (வெளிப்படையாக சொன்னவை),
நாசிக் (மாற்றுவது),
மன்சூக் (மாற்றப்பட்டது), ஹதீஸ்களில் முதவாத்திர் (எல்லாருக்கும் தெரிந்தது), முதவாதிரல்லாதவை
முத்தஸில் (ஹதீஸ் ரிப்போர்ட்டர்களில் விடுபட்டுபோகாமல் இருப்பது),
முர்சல் (ஹதீஸ் ரிப்போர்ட்டர்களில் ஒருவர் விடுபடுதல்),
அரபிமொழி,
இலக்கணம், ஸஹாபிகள்,
தாபிஉகளின் ஒன்றுபட்ட,
மாறு பட்ட வாக்கியங்கள்,
கியாஸ் அதனுடைய இனங்கள் போன்றவைப் பற்றியுள்ள
ஞானமுள்ளவர்தான் முஜ்தஹிது.
(முக்னீ 4/376,
துஹ்ஃபா 10/108)
மேல் சொன்னவைகளிலிருந்து யார் முஜ்தஹிது என்று புரிந்திருக்கும்.
இஸ்லாத்தில் குழப்பங்கள் உருவாகுவது இரண்டு காரணத்தினால் ஆகும்.
1. கண்மூடித் தனமான பழமைவாதம்
2 : முற்போக்கு சிந்தனை..
இரண்டாவது சொன்ன முற்போக்கு சிந்தனைதான் மிகவும் பயப்பட வேண்டியது. ஏனென்றால்,
சிலர் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும்
வெளிப்படையான அர்த்தங்கள் கொடுத்து தவ்ஹீதை உடைக்க பார்க்கிறார்கள்.
கண்ணும் தலையும் உடலுமுள்ள அல்லாஹ்வை படைக்க பார்க்கிறார்கள்
வணக்க வழிபாடுகள்,
நோன்பு, ஸகாத், ஹஜ் போன்றவைகளில் அவர்களுக்கு விருப்பம்போல விளக்கம் கொடுக்கிறார்கள். முன்காலங்களில் கொடுத்த ஃபத்வாக்களை பின்வாங்குகிறார்கள்.
கிறிஸ்து மதத்திலும்
யூத மதத்திலும்தான் புரோகிதம் இருக்கிறது.
இஸ்லாமிலும் புரோகிதம் உண்டா?
இன்று முஜ்தஹிது உண்டா?
குர்ஆனையும் ஹதீஸையும் படித்து அதில் தனக்கு விளங்கியவற்றின் அடிப்படையில் செயல்களை அமைத்துகொள்ளும் உரிமை அனைத்து மக்களுக்கும் வழங்கப்படவில்லை.
குர்ஆன் வசனங்களுக்கு சொன்ன விளக்கங்களும்,
பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஹதீஸ்களும் ஆராய்ச்சி செய்வதற்கு தவிர்க்க முடியாதவை.
அவை இன்று நம்மிடமில்லை. ஆராய்ச்சிக்கு தகுதி பெற்ற அறிஞர்களும் கிடையாது.
இமாம்ஷாஃபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் காலகட்டத்துடன் இஜ்திஹாதிற்கு தகுதி பெற்றவர்கள் மறைந்துவிட்டார்கள் என்கிறார்கள்
இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்).
இப்னு கைய்யூம்
(ரஹிமஹுல்லாஹ்)
கூறுகிறார்கள்:
இஜ்திஹாதின் நிபந்தனைகள் இல்லாத ஒருவனுக்கு குர்ஆன், சுன்னாவிலிருந்து மதவிதிகள் எடுப்பது அனுமதிக்கப்படமாட்டாது.
(இஹ்லாமுல் மவ்கிஹீன், முஃதஸருல் ஃபத்தாவா).
சிந்திப்பதற்கு தகுதி இல்லாதவனுக்கு தக்லீதுதான் உத்தமம்.
இஜ்திஹாதிற்கு இன்று எந்தவித வாய்ப்பும் கிடையாது.
எனவே ஒரு இமாமை பின்பற்றுவதுதான் புத்திசாலிகளின் அடையாளம்.
நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக நாம் குர்ஆனை எளிதாக்கினோம். (54:18)
என்று சொல்லப்பட்ட அதே நேரத்தில் நிச்சயமாக உங்கள் மீது கனமான வசனங்களை நாம் இறக்கினோம் (73:3) என்றும் சொல்லுகிறான்.
எழுத்து
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி
குமரி மாவட்டம்