முன்னோர்கள் சுயசரிதை எழுதவில்லையா
முன்னோர்கள் சுயசரிதை எழுதவில்லையா
AP_உஸ்தாதின் சுயசரிதை நூலான நம்பிக்கைபூர்வம் கையில் கிடைத்தபோது மிகுந்த ஆர்வத்துடன் வாசித்து முடித்தேன்.
காந்தபுரம் எனும் குக்கிராமத்தில் இருந்து உலகெங்கும் பிரசித்திபெற்ற,
சர்வதேச அளவில் அறியப்பட்ட அறிஞராக உருவெடுத்த உஸ்தாத் அவர்களுடைய வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் வாசிப்போருக்கு வெளிச்சம் வீசுகிறது.
இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் உஸ்தாதின் வாழ்க்கையில் ஒரு பெரிய ஏடுகளாகும்.
அதன் வழியாகப் பயணிக்கும்போது நாம் காலத்துக்குப் பின்னோக்கிப் பயணிப்பதைப் போல உணர முடியும்.
ஒவ்வொரு அனுபவங்களும் வாசிப்போருக்கு பரவசத்தை ஏற்படுத்துகிறது..
சுயசரிதை என்பது ஒரு தனி மனிதனின் கதை அல்ல.
அது ஒரு தலைமுறையின் வரலாறு.
இது புதிய தலைமுறைக்கு சிறந்த பாடத்தையும், ஆற்றலையும் கொடுக்கும் வல்லமை கொண்டது
எனவேதான் இஸ்லாமிய உலகில் இது போன்ற பல நூல்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
அறிஞர்கள் தங்கள்
குரு பரம்பரையை விளக்கும் ஸப்த் (ثبت) இந்த வகையைச் சேர்ந்தது என்று கூறலாம்.
சுயசரிதை வடிவில் எழுதப்பட்ட நூல்கள் ஏராளமாக உள்ளன. இமாம் ஸுயூத்தி அவர்களின் التحدث بنعمة الله
என்ற நூலும்
இமாம்
சகாவியின் ارشاد الغاوي ஆகியவை
இந்த இனத்தைச் சார்ந்தவையாகும்.
அதற்கும் மேலாக பல இமாம்கள் தங்கள் நூல்களில் தங்களது சொந்த வாழ்க்கை குறிப்புகளை எழுதியுள்ளதை பார்க்க முடியும்...
இமாம் ஷஃரானி அவர்கள்
இமாம் ஸுயூத்தி அவர்கள் கூறியதை மேற்கோள் காட்டி சொல்கிறார்கள்.
நான் இந்த நூலில் எனது சாதனைகள் சிலவற்றை விவரித்துள்ளேன்.
அது கடந்த கால பெரியவர்களை
பின் தொடரும் அடிப்படையிலும், மற்றவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலும்,
அல்லாஹ் எனக்கு அளித்த அருட்கொடைகளை எடுத்துக் கூறுவது என்ற லட்சியத்தியத்திலும் எழுதியவையாகும். மற்றவர்களை விட நான் உயர்ந்தவன் என்ற
தற் பெருமைக்காகவோ அல்லது பொருள் ஆதாயங்களுக்காவோ அல்ல.
இமாம் ஷஃரானி தொடர்ந்து எழுதுகிறார்கள்.
நண்பரே!!
இந்த விஷயத்தில் நான் முன்மாதிரியாகக் கொண்ட பழங்கால அறிஞர்களையோ, அல்லது இந்த புத்தகத்தில் எனது கீர்த்திகளை குறிப்பிட்டதற்காக என்னையோ விமர்சிக்க வேண்டாம்.
ஒருவர் தனது புத்தகத்தில் தனது சொந்த பெருமையை கூறுவது மோசமான காரியம் என்று சொல்லாதீர்கள்.
காரணம் அவ்வாறு நினைப்பது பெரிய முட்டாள்தனமும் அவர்களைப் பற்றிய தவறான புரிதலுமாகும்,
மாறாக அவர்கள் தங்கள் மகிமையை சொல்லுவது மற்றவர்கள் அவர்களை பின்பற்றுவதற்காக என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை
(மினனுல் குப்ரா பக்கம் 13)
காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் சில "மைக்குகளின்" பேச்சுக்களை
கேட்டதால் தான் இது எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
முன்னோர்களின் வரலாற்றில் சுயசரிதை நூல்களை பார்க்க முடியாதாம்,
அவர்கள் யாரும் சுயசரிதை நூல் எழுதவில்லையாம்...
இமாம் ஷஃரானி அல்ல, யார் அறிவுரை கூறினாலும் கதையே இல்லாத இத்தகைய மைக்குகளுக்கு இது ஒரு விஷயமாகத் தெரியாது.
எவ்வளவு ஆதாரங்கள் அடுக்கினாலும் அவர்கள் தெளிவு பெறப்போவது இல்லை
ஏனெனில் இது அவர்களின் வயிற்றெரிச்சலுக்குரிய விடயம்.
இது போன்ற மைக்குகளின் தீமையிலிருந்து அல்லாஹ் சமூகத்தை காப்பானாக.
*✍️முஹ்யித்தீன் ஸகாஃபி.கேரளா.*
*தமிழில்:M.சிராஜுத்தீன் அஹ்ஸனி*