Sirajudheen Ahsani
எழுத்தாளர்

படைப்பாளனின்
பார்வை_நம்_மீது
படுமெனில்..

ஹாதமுல் அஸ்அம் (ரஹ்) அவர்கள்
ஹஜ்ஜுக்குச் செல்ல முடிவு செய்தபோது ​​குடும்பத்தினர் கேட்டார்கள்:
நீங்கள் திரும்பி வரும் வரை எங்களை யார் கவனிப்பார்கள்..?
யாரை நம்பி எங்கள் காரியங்களை ஒப்படைத்து விட்டு செல்ல நினைக்கிறீர்கள் ..?

மகான் அவர்கள் பதில் சொல்வதற்குள் அவர்களின் மகள் சொன்னாள்:
“நீங்கள் பயப்பட வேண்டாம் வாப்பா.
தாங்கள் தைரியமாக ஹஜ்ஜுக்குக் கிளம்பிச் செல்லுங்கள்..
உணவு கொடுப்பவன் அல்லாஹ்தான்..!
அவன் எங்களைப் பார்த்து கொள்வான்...

அவர் ஹஜ்ஜுக்கு சென்ற கொஞ்ச நாட்களில் குடும்பம் பட்டினில் மாட்டிக் கொண்டது.
மகள் பிரார்த்தனை செய்தாள்.
யா அல்லாஹ்..
என்னைக் கேவலப்படுத்தி விடாதே.
உன் மீது நம்பிக்கை வைத்துதான்
நான் என் தந்தையிடம் அப்படிக் கூறினேன்.

"அடுத்த நாள் தேசத்தின் அதிபதியும், அவரது பரிவாரங்களும் அவ்வழியே வந்தார்கள்.
அவர் அக்குடும்பத்தினரிடம்
தாகத்திற்குத் தண்ணீர் கேட்டார்.
புதிய கோப்பையில் மிகவும் குளிர்ந்த தண்ணீரை அவருக்குக் கொடுத்தனர்.
அவர் அதைக் குடித்தார்.
அவர் கோப்பையைத் திருப்பிக் கொடுத்தபோது கோப்பையில் கொஞ்சம் தங்க நாணயங்களை போட்டுக் கொடுத்தார்.​​​​
மற்றவர்களும் அதில் தங்கக் காசுகளைப் போட்டனர்.
உடனே மகள் அழத்துவங்கி விட்டாள்.
தாய் கேட்டாள் நீ ஏன் அழுகிறாய்...?

மகள் சொன்னாள்: அல்லாஹ்வின் ஒரு படைப்பு நம்மைப் பார்த்தபோது
நமக்கு செல்வம் கிடைத்தது, அப்படியானால்
படைப்பாளனின் பார்வை நம் மீது படுமெனில் நம் நிலைமை என்னவாகும்..

தமிழில்:
M.#சிராஜுத்தீன்_அஹ்னி.