Sirajudheen Ahsani
எழுத்தாளர்

..............#ஜன்னத்துல்_பக்கீஃ...............

இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மக்பறா..
நபிகளாரின் ஊரில்
மஸ்ஜித் நபவிக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த மகத்தான புண்ணிய கேந்திரம்..

உம்மஹத்துல் முஃமினீன்,
பாத்திமா பீவி (ரலி) உட்பட பல்லாயிரக்கணக்கான
நபித்தோழர்கள்,தாபியீன்கள் மற்றும் அவுலியாக்கள் ஓய்வெடுக்கும் புனித இடம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வப்போது ஜன்னதுல் பக்கீஃயிற்கு ஸியாரத் செய்ய வருகை தருவார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒருமுறை இரவின் இறுதிப்பகுதியில்
ஜன்னதுல் பக்கீஃயிற்கு
சென்று ஸியாரத் செய்து, அங்கு
நல்லடக்கம் செய்யப்பட்ட அம்மக்களுக்கு பாவ மன்னிப்புக் கோரி பிரார்த்தனை செய்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
ஜன்னத்துல் பக்கீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டவர்கள் இறுதிநாளில் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்காக நான் பரிந்து பேசுவேன் என்றும் ஹதீஸ்களில் பார்க்க முடியும் .

ஆரம்பகால ஜன்னத்துல் பக்கீஃ
சிறு பகுதிகளைக் கொண்டிருந்தது.

முதல் கட்ட வளர்ச்சி முஆவியா (ரலி) அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஒட்டோமான் ஆட்சியின் போது, ​​பரப்பளவு 15,000 சதுர மீட்டர் விசாலப்படுத்தப்பட்டது.

இது தற்போது ஐம்பதாயிரம் சதுர மீட்டர் அளவைக் கொண்டுள்ளது.

கட்டி எழுப்பப்பட்ட ஏராளமான தர்காக்கள் நிறைந்த இடம் ஜன்னத்துல் பக்கீஃ. அவை 1805 லும்,
1925 லும் ஷவ்வால் மாதத்தில் ஸலஃபிகளால் இடிக்கப்பட்டன.

முஹாஜிரீன்களில் இருந்து உஸ்மான் இப்னு மழ்ஊன் (ரலி) அவர்களும், அன்சாரிகளிலிருந்து அஸ்அத் இப்னு ஸுறாரா (ரலி) அவர்களும் தான் முதன் முதலில் ஜன்னத்துல் பக்கீஃயில்
அடக்கம் செய்யப்பட்டவர்களாகும்.

தங்களின் இறுதி இளைப்பாறும் இடமாக ஜன்னத்துல் பக்கீஃ இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்திய ஏராளமான நல்லடியார்கள் உள்ளனர்.

இதனால் தொலைதூர நாடுகளில் மரணித்தவர்கள் கூட இங்கு அழைத்து வரப்பட்டனர்.

அபூ ஹுரைரா (ரழி), உஸாமத் பின் ஸைத் (ரஹ்) மற்றும் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) போன்ற தோழர்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

யா அல்லாஹ், புனித மதீனாவிற்கு பல முறை வருகை தரவும், ஜன்னத்துல் பக்கீஃயில் ஸியாரத் செய்யவும் எங்களுக்கு வாய்ப்பு வழங்குவாயாக..