நெருப்பை சந்திக்கும் ஆற்றல் எங்களுக்கு இல்லையே
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
*#நெருப்பை_சந்திக்கும்_ஆற்றல் #எங்களுக்கு_இல்லை_நாயகனே!!!*
*நல்லடியார்களில் ஒருவர் கோழியை நெருப்பிலிட்டு சுட்டு கொண்டிருப்பவரின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் அழுது விட்டார்கள்...*
*உடனே அந்த மனிதர் இந்த நல்லடியாரிடம் கேட்டார்.
நீங்கள் எதற்காக அழுகின்றீர்கள்...*
*உங்களுக்கு சுட்ட கோழி வேண்டுமா...?*
*உடனே அந்த நல்லடியார் சொன்னார்..*
*எனக்கு சுட்ட கோழி இறைச்சி ஒன்றும் வேண்டாம்..*
*நான் ஆதம் சந்ததியினரை நினைத்து அழுதேன் என்றார்..
*மிருகங்கள் எல்லாம் இறந்த பிறகு தான் நெருப்பிலடப்படுகிறது..*
*ஆனால் மனிதர்கள் உயிருடன் நெருப்பில் நுழைவார்களே!!!
*இறைவா!! எங்கள் உடல்களுக்கு நெருப்பை சந்திக்கும் சக்தி இல்லை றஹ்மானே!!!*
*எங்கள் உடல்களை நெருப்பிற்கு ஹறாமாக்கி விடு நாயகனே...*
*தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*