மீலாத் விழாவும் கிறிஸ்துமஸும் ஒன்றா
மீலாத் மவ்லித்

மீலாத் விழாவும் கிறிஸ்துமஸும் ஒன்றா

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

*#மீலாது_விழாவும்*
*#கிறிஸ்துமஸும்*
*#ஒன்றா*

*"மீலாது விழாக்கள், கிறிஸ்தவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறந்த நாள் விழா_கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு ஒப்பானது. எனவே மீலாது விழா கொண்டாட்டங்கள் கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவதாக அமைவதால் இச்செயல் இஸ்லாமுக்கு ஏற்புடையது அல்ல"என்பதும் விமர்சகர்கள் முன் வைக்கும் வாதங்களில் ஒன்று.*

*நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் _ ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றார்கள், நோன்பு வைக்க முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டார்கள்.*

*எதற்காக இந்த ஆஷூரா நோன்பு?*

*பிர்அவ்னிடமிருந்து விடுதலை பெற்றதற்காக மூஸா (அலை) அவர்களும், இஸ்ரவேலர்களும் அல்லாஹ்வுக்குச் செலுத்திய நன்றி.*

*அச்செயலை நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள் செய்யவில்லையா? இஸ்லாமிய சமுதாயத்தைப் பின்பற்ற சொல்லவில்லையா?*

*இதனால் பெருமானார் (ﷺ)அவர்கள் யூதர்களை பின்பற்றினார்கள், யூதர்களைப் பின்பற்ற முஸ்லிம் சமுதாயத்திற்குக் கட்டளை இட்டார்கள் என்று கூறுவது சரியாகுமா?*

*நபியுல்லாஹ் (ﷺ)அவர்கள் மீது முஸ்லிம்கள் வைத்துள்ள மதிப்பிற்கும், மரியாதைக்கும், கிறிஸ்தவர்கள் நபி ஈஸா (அலை) அவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வேறுபாடுகள் உண்டு.*

*நபியுல்லாஹ் (ﷺ) அவர்களை அல்லாஹ்வின் திருத்தூதராக, உயர்வான அந்தஸ்துகள் வழங்கப்பட்ட ஒரு மனிதப் புனிதராக, பாவங்கள் செய்யாத அல்லாஹ்வின் அடியாராக நம்பிக்கை கொண்டுள்ளனர் முஸ்லிம்கள்.*

*" லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் " என்று முஸ்லிம்கள் சொல்லும் கலிமா அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை எது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.*

*ஆனால் நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றிய கிறிஸ்தவர்களின் பார்வையே வேறு.*

*நபி ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என நம்பிக்கை கொண்டு, நபியவர்களை இறைவனாகவே வழிபட்டு வருகின்றனர் கிறிஸ்தவர்கள்.*

*இப்படிப்பட்டவர்களின் விழாவும், ஓரிறை நம்பிக்கையாளர்களின் விழாவும் எப்படி ஒன்றாகும்.*

*இந்துக்கள் தமது கோவில்களையும், தெய்வங்களையும் சுற்றுகின்றனர்.*

*முஸ்லிம்களான நாம் ஆதி இறை இல்லமான கஃபத்துல்லாஹ்வை தவாஃப் செய்கின்றோம்.*

*இந்துக்கள் தமது கோவில்களுக்குச் சென்று தமது தெய்வங்களுக்கு நேர்ச்சையாக்கி மொட்டையடிக்கின்றனர்*
*முஸ்லிம்களான நாம் ஹஜ்ஜின்போது முடி களைகிறோம்.*

*எனவே முஸ்லிம்கள் இந்துக்களை பின்பற்றுகின்றனர் என்று போலி ஏகத்துவ வாதிகள் சொல்லத் துணிவார்களா?*

*எனவே மீலாது விழா என்ற மகத்தானதொரு நற்செயல் ஒருபோதும் பிற மத சகோதரர்களின் விழாக்களுக்கோ, கொண்டாட்டங்களுக்கோ, நம்பிக்கைகளுக்கோ, அனுஷ்டானங்களுக்கோ ஒப்பாகாது..*

*தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி*