Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#தளரவில்லை...
#சோர்வடையவில்லை...
#பயந்து_பின்வாங்கி_ஓடி #ஒளியவுமில்லை.

சவால்களை தன் வாழ்வால் எதிர்கொண்ட போராட்டத்தின் பெயர் என்.கே.#உமருல்_ஃபாரூக்.

எலும்புகள் அதிகமாக வளர்ந்து உருவ மாற்றம் ஏற்பட்ட உடல் நிலையில் அந்த மனிதன் அனுபவித்த துன்பங்களின் ஆழமும், அகலமும் நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.

சிறுவயதில் தாயை இழந்த போது இரட்டிப்பு துக்கத்தை சுமக்க நேர்ந்தாலும், எவருடைய அலட்சியத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார் மர்கஸின் முன்னாள் மாணவரான பாரூக்.

அது வெறுமொரு அழகு வார்த்தைகள் மட்டுமல்ல.
பிற்காலத்தில் அவர் போராடிய வாழ்க்கை மற்றும் சாதனைகளின் பட்டியல் நமக்கு அதைச் சொல்கிறது.

ஃபாரூக் 2023 ஹெலன் கெல்லர் விருதை வென்றுள்ளார்.

உண்மையில் சொல்லப்போனால்
5 வருடங்களுக்கு முன்பு மர்கஸ்
பழைய மாணவர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக ஃபாரூக் மர்கஸ் நகருக்கு வந்திருந்தபோதுதான் நான் முதன்முறையாக அவரைச் சந்தித்தேன்.
அவரைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.
அதிர்ந்து போனேன்.

பின்னர் லட்சத் தீவுக்கு நான் சென்றபோது ​​அவர் என்னை அன்புடன் வரவேற்று எல்லாவிதமான வசதிகளையும் செய்து தந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மர்கஸ் பழைய மாணவர்களின் கீழ் புனூரில் உள்ள ASMAN CENTRE FOR HAPPINESS ஸ்தாபனத்தில் ஃபாரூக்குடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் அதிர்ஷ்டம் கிடைத்தது.

போராட்டப் பாதையில் துணிச்சலுடன் முன்னேற அல்லாஹ் அவருக்கு மேன்மேலும் ஆரோக்கியத்தை வழங்க பிரார்த்திப்போம்.

✍️.#லுக்மானுல்_ஹக்கீம்.
தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி

https://m.facebook.com/story.php?story_fbid=668098778820898&id=100068623442891&mibextid=UyTHkb