Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#கோடைகாலத்தில்_பிடிக்கும்_நோன்பு....

இந்த நேன்பை நாம் கடுமையான வெயில் காலங்களில் சந்தித்திருக் கிறோம்.
இது எந்தளவு வெயில் வாட்டி வதைக்கக்கூடிய நேரம் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் நோன்பு வைத்து விட்டால் அல்லாஹ் நம் உடலுக்கு புது வகையான உத்வேகத்தைத் தந்து விடுகிறான். அதனால் தான் ஸஹாபாக்கள் வெயில் காலங்களிலும் சிரமமான நேரங்களிலும் நோன்பு வைப்பதை விரும்பினார்கள்.

جاء في المواهب اللدنية للقسطلاني رحمه الله : " روي أنّه صلى الله عليه وسلم لمّا قال : ( حبِّب إليّ من دنياكم النساء والطيب وجعلت قرّة عيني في الصلاة ) قال أبو بكر : وأنا يا رسول الله حبِّب إليّ من الدنيا : النظر إلى وجهك ، وجمع المال للإنفاق عليك ، والتوسل بقرابتك إليك . وقال عمر : وأنا يا رسول الله حبّب إليّ من الدنيا : الأمر بالمعروف والنهي عن المنكر والقيام بأمر الله . وقال عثمان : وأنا يا رسول الله حبّب إليّ من الدنيا إشباع الجائع وإرواء الظمآن وكسوة العاري . وقال علي بن أبي طالب

وأنا يا رسول الله حبّب إليّ من الدنيا : الصوم في الصيف ، وإقراء الضيف ، والضرب بين يديك بالسيف

பெண்கள், நறுமனம் எனக்கு பிரியமானது. மேலும் தொழுகையில் என் கண் குளிர்ச்சி இருக்கிறது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
பிறகு அபூபக்கர் ரலி அவர்கள்,
உங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது, உங்களுக்காக என் பொருளாதாரத்தை செலவழிப்பது, உங்களோடு இருக்கிற நெருக்கத்தைக் கொண்டு உதவி தேடுவது இம்மூன்றும் எனக்கு பிரியமானது என்று கூறினார்கள்.
நன்மையை ஏவுவது, தீமையைத் தடுப்பது, அல்லாஹ்வுடைய உத்தரவை நிலை நிறுத்துவது, இம்மூன்றும் எனக்குப் பிரியமானது என உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.
பசித்தவருக்கு உணவளிப்பது,தாகித்திருப் பவருக்கு நீர் புகட்டுவது, ஆடை இல்லாதவருக்கு ஆடையளிப்பது இம்மூன்றும் எனக்கு பிரியமானது என உஸ்மான் ரழி அவர்கள் கூறினார்கள்.
கோடை காலத்தில் நோன்பு நோற்பது, விருந்தாளிகளை உபசரிப்பது, அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வது, இம்மூன்றும் எனக்கு பிரியமானது என அலி ரலி அவர்கள் கூறினார்கள். (அல்மவாஹிபுல்லதுன்னிய்யா)

ஹள்ரத் அலி ரலி அவர்கள் உலகத்திலேயே எனக்கு பிடித்தமான விஷயம் நோன்பு வைப்பது என்று கூற வில்லை,கடுமையான வெயில் காலத்தில் நோன்பு வைப்பது என்று கூறுகிறார்கள்.அப்படியென்றால் நோன்பை எந்தளவு அவர்கள் ரசித்து ருசித்து அதன் இன்பத்தை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் விளங்க வேண்டும்.