வெளியே தெரிந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கால்
#வெளியே_தெரிந்த
#உமர்_ரலி_அவர்களின்_கால்.
உமையாக்களின் கலீபாக்களில் ஒருவரான வலீதுப்னு அப்துல் மலிக்கின் ஆட்சியின் கீழ் மதீனா முனவ்வறாவின் கவர்னராக உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலி) இருந்தார்கள்.
அப்போது நபி (ﷺ) அவர்களின் புனிதமிகு கப்ரை சுற்றியிருந்த மதில்கள் பலமில்லாமல் போகவே அம்மதில்களிலிருந்து சற்று இடைவெளிவிட்டு சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடானது.இவ்வாறு புணருதாரம் செய்ய நபி (ﷺ)அவர்கள் அடக்கமாயிருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டைச் சுற்றி இருந்த நபி (ﷺ) அவர்களின் மனைவிமார்களின் வீடுகளை வாங்கி விரிவாக்கம் நடந்தது.
இவ்வாறு நபி (ﷺ) அவர்களின் புனிதமிகு கப்றின் ரவ்ழா ஷரீஃபின் வெளிச்சுவர்கள் கட்டப்பட்ட பின் உள் சுவர்கள் இடிக்கப்பட்டன.
அப்போது இதன் அதிர்வு தாங்காமல் நபி (ﷺ) அவர்கள், அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி) அடக்கப்பட்டிருந்த கப்ருகளின் சுற்றுப்புறத்தின் ஒரு பகுதி இடிந்து சரிந்து. இதேபோல் சுவருடன் சேர்ந்து கப்ரின் ஒருபுறமிருந்த மண்திட்டும் சரிந்ததால் கப்ரிலிருந்து முழங்கால் முதல் பாதம்வரை ஒருவரின் கால்பகுதி வெளியே தெரிந்தது.
அப்போது அங்கிருந்தவர்கள் பதறித்துடித்து இது நபி (ﷺ) அவர்களின் கால்தான் என அச்சப்பட்டு,
துக்கத்துடன் அழுது கூக்குறலிட ஆரம்பித்தனர்.
கூட்டமும் வெகுவாக கூட ஆரம்பித்தது.
அப்போது அங்கிருந்த உருவா (ரலி) அவர்கள் இது நபி (ﷺ) அவர்களின் கால் அல்ல.இது நிச்சயமாக உமர் (ரலி) அவர்களின் கால்தான் எனத் தெரிவித்து மக்களின் துயரைத் துடைத்தனர்.
இந்நிகழ்ச்சி அனைத்தும் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலி) அவர்களின் முன்னிலையிலேயே
நடந்தது
மீண்டும் உமர் (ரலி) அவர்களின் புனிதமான கால் கப்ரில் உள்புறம் வைக்கப்பட்டு கப்ருகள் கட்டப்பட்டன.
ஆதாரம்:
#ஐனி_அலல்_புகாரி:
பக்கம் 251.பாகம்:4
#ஃபத்ஹுல்_பாரி:
பக்கம் 165 பாகம் 3
#ஹயாத்துஸ்_ஸஹாபா:
பக்கம் 22 , 83
#தஹ்தீபுத்_தஹ்தீபு.
பக்கம்:475,476,477பாகம்=7
தகவல்.
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.