காசர்கோடு முஹிம்மாத்தில் நடைபெற்ற தமிழ் சங்கமம்

காசர்கோடு முஹிம்மாத்தில் நடைபெற்ற தமிழ் சங்கமம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கேரள மாநிலம் காசர்கோட்டில்
#தமிழ்நாடு_உலமா_உமரா_சங்கமம்...

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முஹிம்மாத்தின் திட்டங்களுக்கு மனமுவந்து ஆதரவு தெரிவித்த #தமிழ்_மாநாடு...

புத்திகே: முஹிம்மாத் எஜுகேஷனல்
டிரஸ்டின் பல்வேறு முயற்சிகளுக்கும், திட்டங்களுக்கும் ஆதரவும், அங்கீகாரமும் அளிக்கும் வகையில் ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் உரூஸை முன்னிட்டு நடத்தப்பட்ட #தமிழ்_மாநாடு மிக சிறப்பான முறையில் நடந்தேறியது...

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முஹிம்மாத்துக்கு வருகை தந்த கற்றறிந்த உலமாக்கள்,
கொடை வள்ளல்களான உமராக்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்டவர்கள் கலந்து கொண்ட தமிழ் மாநாடு முஹிம்மாத் உரூஸின் மூன்றாம் நாளில் செயல் வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கியது....

இஸ்லாமிய மார்க்க வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் முயற்சிகள் மீது அதீத அன்பு காட்டிய தமிழ் மக்கள் முஹிம்மாத் அஹ்தல் தர்கா ஷெரீஃபின் வளாகத்தில் கூடியபோது பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஆன்மீக தூய்மையின் புதிய நுழைவாயில் திறக்கப்பட்டது.

அஹ்லுல் சுன்னாவின் கருத்துக்களை உலகெங்கும் பரப்பவும், முஹிம்மாத்தின் அறிவார்ந்த மற்றும் தொண்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும்
தமிழ் மாநாடு அனைவருக்கும் அழைப்பு விடுத்தது.

ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின் வாழ்வியலைப் பற்றி அறிந்து, சமூகத்தில் பரப்பி
விசுவாசி சமூகத்தை ஒற்றுமைப் பாதையில் கொண்டு செல்லுமாறு தமிழ் மாநாடு கேட்டுக் கொண்டது...

செய்தி தொகுப்பு..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி...