Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பசி பட்டினியால் மடியும் குழந்தைகள்.
தாய்ப்பால் வற்றிய தாய்மார்கள்.
கொடும் பசியால் வழியோரங்களில்
மயக்கமடைந்து கிடக்கும் மக்கள்.
சில நேரங்களில் வரும் சிறிய உணவுக்காகக் காத்திருக்கும்போது கொடூரர்களின்
குண்டு வெடிப்பு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் கொல்லப்படும்
அப்பாவிகள்
காசா இஞ்சிஞ்சியாக இறந்து கொண்டிருக்கிறது.
எல்லையைத் தாண்டி முழு மக்களுக்கும் மூன்று மாதங்களுக்கு வாழ போதுமான உணவு மூட்டை மூட்டையாக கெட்டி கிடக்கிறது.
ஆனால் யூத அரக்கர்கள் அதை அம்மக்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள்.

ஏதாவது உதவிகள் வந்தவுடன் யூத அரசு தானே வளர்த்த கொள்ளை கும்பல்கள்
அதைப் பறிக்க தீவிரமாக உள்ளன.

இன்பங்களிலும்,
சுகபோகங்களிலும்
தன்னை மறந்த ஆடம்பர கேளிக்கைகளிலும்
மூழ்கிய அரபு நாடுகள் எதுவும் தெரியாதது போல் நடிக்கிறது..
கண்டும் காணாமல் கடந்து செல்கிறது..
அவர்கள் அம்மக்களின் இவ்வளவு பெரிய
அநியாயங்களுக்கு
பரிகாரம் காண
எதுவும் செய்யவில்லை.

நம்மால் என்ன செய்ய முடியும்?
நிர்க்கதியற்று அம்மக்களை நினைத்து அழுது புலம்பும் நிலையில் நாம் இருக்கிறோம்..

நம்பிக்கை கைவிடாமல்
தளர்ந்து போகாமல்
அம்மக்களின் அழகிய நல் வாழ்வுக்கு
மீண்டும் மீண்டும் அல்லாஹ்விடம்
கையேந்தி துஆச் செய்வோம்
அவன் நல்ல தீர்க்கமான முடிவை
அம்மக்களுக்கு ஏற்படுத்துவான்...